தொலைவில்லிமங்களம். (இரட்டை திருப்பதி) (12.7.2023).
அருகருகே அமைந்துள்ள இந்தயிரண்டு கோவில்களும் திவ்யதேசமாகவும், நவதிருப்பதிகளில் ஒன்றாகவும், நவகிரகங்களில் ராகு, கேது ஸ்தலமாகவும் உள்ளது.
அரவிந்தலோசனர்.
சுப்ரபர் என்ற முனிவர் தாமரை மலர்களை குளத்திலிருந்து கொண்டுவந்து இறைவனுக்கு சமர்பிப்பதை கைங்கர்யமாக கொண்டுள்ளார். விஷ்ணு இவரை பின் தொடந்து வருவதை பக்தியால் உணர்ந்த முனிவர், அரவிந்தலோசன் (தாமரைக்கண்ணன்) என்ற பெயரில் இங்கேயே இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்குமாறு வேண்டுகிறார்.
தேவர்பிரான் திருக்கோவில்.
மற்றொரு கோவில் பெருமாள், தேவர் பிரான் என்றும் ஸ்ரீநிவாசன் என்றும் பெயர் கொண்டு மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தலவரலாறு.
சுப்ரபர் என்ற முனிவர் யாகம் செய்வதற்காக பூமியை உழும் நேரத்தில், தராசும் வில்லும் கிடைக்கிறது. முனிவர் கைபட்டவுடன் சாபவிமோசனம் பெற்று ஆணாகவும் பெண்னாகவும் மாறுகின்றனர். துலா என்றால், தராசு என்று பொருள், இதன் காரணமாகவே இந்த இடம் “துலாவில்மங்களம்” என்ற பெயர் பெற்றது.,
“துவளில் மாமணி மாடம் ஓங்கு தொல்வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசைஇல்லi விடுமினோ
துவள ஊஞ்சங்கு சக்கரம் என்றும் தாமரை தடங்கண் என்றும்
குவளை உண் மலர் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுருமே.”
நம்மாழ்வார் (திருவாய்மொழி)
1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், இடிந்து விழும் அபாயத்திறக்கு உட்பட்டு, பெருமானின் பாதம் வரை, வெள்ளம் பெருக்கெடுத்தது. பின் புனரமைப்பு செய்யப்பட்டது.
“சிந்தையாளும் சொல்லாலும் செய்கினாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்றடைந்து வணி குரு கூருவர் சடகோபன் சொல்
முந்தை ஆயிரமள்ளி இவை தொலைமங்கலத்தைச் சொன்ன
செந்தழிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே”
(நம்மாழ்வார் திருவாய்மொழி).