ஸ்ரீபெரம்புதுர். (ராமானுஜர் ஜென்மபூமி) தரிசனநாள் - 4.3.2023.
தலவரலாறு.
கைலாய பூதகணங்கள் சிவபெருமானின் சாபத்திற்க்கு ஆளாகியதால், விமோசனம் பெற மகாவிஷ்ணுவை வேண்டினர். அனந்தன் என்ற சர்பத்தை (பாம்பு) கொண்டு தீர்த்தம் உண்டாக்கி, அந்த கரையில் மகாவிஷ்ணு காட்சி கொடுத்து விமோசனம் கொடுத்தார். நன்றி கடனாக பூதகணங்கள் எழுப்பிய கோவிலே இந்த ஆதிகேசவ பெருமாள் கோவில்;. பூதகணங்கள் எழுப்பிய கோவில் ஆதலால் இந்த ஊர் பூதபுரி (புராணபெயர்) என்று அழைக்கப்பட்டது.
ராமானுஜர்.
கேசவசோமயாஜி, காந்திமதி- தம்பதியருக்கு 1017 ஆம் ஆண்டு; ராமானுஜர் மகனாக அவதரித்தார்.
ராமரனுஜரின் மாமா “பெரியதிருமலைநம்பி” இவருக்கு “இளையாழ்வார்” என்று பெயர் சூட்டினார். இலக்குவணன் போன்றே இருந்தமையால் இந்த பெயர் சூட்டினார்.
அனுஜன் என்றால் இளையவர் என்று பொருள். ராமனுக்கு இளையவன் - “ராமானுஜன்”.
“யதிராஜர்”; என்ற பெயரும் உண்டு. யதி- என்றால் சன்யாசி ராஜர் என்றால் தலமைப்பண்பு என்று பொருள். (இந்த இடத்தில் தாயாரின் பெயரை சொல்வதே சிறப்பு) இக்கோவில் தாயார் “யதிராஜநாதவல்லி”
ராமானுஜர் சன்னதி சிறப்பு செய்திகள்.
தீபாவளி முதல் தை மாதம் ஹஸ்த நட்சத்திரம் வரை, வெண்ணீரில் அபிஷேகம் செய்கின்றனர்.
குளிர்காலங்களில் இளையாழ்வாருக்கு, கோட், போர்த்த கம்பளி, உடல் முழுவதும் வெல்வெட் அங்கி, உல்லன்சால்வை இவற்றைஅணிவிக்கின்றனர்.
பெருமாள் சன்னதி சிறப்பு.
ஆடி மாதம் பூரம் முதல் ஆவணி மாதம் பூரம் வரையிலும். மார்கழி மாதத்திலும், ஆண்டாள் நாச்சியார் ஆதிகேசவபெருமாள் சன்னதிலேயே எழுந்தருளுகிறார்.
நித்திய சொர்கவாசல் தலம்.
ராமானுஜர் அவதரித்த தலம் ஆதலால் நித்திய சொர்கவாசல் தலம் என்று அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று ஆதிகேசவபெருமாளும், ராமானுஜரும் “பூதகால்மடண்டபத்தில்”“எழுந்தருளுவர். அன்று மணிக்கதவு (சிறியகதவு) திறப்பர்.
சித்திரை திருவிழா.
கோவிலுக்கு எதிரே உள்ள மண்டபத்தில் சித்திரைதிருவிழா கொண்டாடப்படுகிறது.
ராமானுஜர் அவதரித்த நட்சத்திரம் அன்று ஊஞ்சலிட்டு, தாலாட்டி, சங்கில் பால் தரும் வைபவம் நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருமாலிஞ்சோலை, உள்பட 36 திவ்யதேசங்களில் இருந்து பரிவட்ட மரியாதை செய்யப்படுகிறது.
வெண்ணிறயுடை திருநாள் - கூரத்தாழ்வார் இவரின் காவியுடைஅணிந்து சென்று (ராமானுஜராக வேடம் பூண்டு) மன்னின் தண்டனையை ஏற்கிறார். (தண்டனை-இரண்டு கண்ணும் அபகரித்தல்). கூரத்தாழ்வாரின் நினைவாக அன்றைய தினம் ராமானுஜருக்கு வெண்ணிர ஆடை அணிவிக்கப்படுகிறது.
செல்லபிள்ளை மடியில் அமர்ந்து திருவீதியுலா.
திருநாராயணபுரம் பெருமானை மன்னன் மகள் விருப்பத்திற்காக டெல்லிக்கு எடுத்துசெல்கின்றனர். பெருமாளை மீட்க ராமானுஜர் டெல்லி சென்ற போது, ராமானுஜர் மடியில் சிலையாகவே வந்து பெருமான் அமர்கிறார். அன்று முதல் செல்ல பிள்ளை பெருமாள் என்றே அழைக்கப்படுகிறார். அந்த நிகழ்ச்சியின் வெளிப்பாடே இந்த செல்லப்பிள்ளை திருவீதியுலா.
120 ஆண்டுகள் வாழ்ந்த ராமானுஜர், அடுத்தப்பிறவியில், மணவாள மாமுனியாக அவதரிக்கிறார். கோவிலின் இடதுபுறத்தில் மணவாளமாமுனிக்கு தனி கோவில் எழுப்பபட்டுள்ளது.
அருமை . தமிழ் திருத்தி போட்டால் சிறப்பு
ReplyDelete