ஜெகதீஷ் மந்திர். (தரிசனநாள்-16.12.2022)
அமைவிடம்.
ராஜஸ்தான் மாநிலம் உதயாபூர் என்ற நகரில், உதயாபூர் நகர அரண்மனை அருகில் அமைந்துள்ளது.
கோவில் அமைப்பு.
மிக செங்குத்தான 32 பளிங்கு படிகளில் ஏறி செல்ல வேண்டும். குறைந்தது, 79அடி உயரத்தில், மிக செங்குத்தாக இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. பிரதான கடவுளாக பெருமாள், ஜெகதீஷ் என்ற பெயரில் மக்களுக்கு அருள்புரிகிறார். நத்வாரா ஸ்ரீநாத் போன்றே (உருவஅமைப்பு) இறைவன் சுமார் 8 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளார்.
பெருமாளுக்கு எதிரே பித்தளையில் உருவாக்கப்பட்ட கருடன் அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தின் நான்கு மூலையிலும் விநாயகர், சூரியன், சிவன், அம்மன் ஆகியோருக்கு சிறியதாக சன்னதி அமைத்துள்ளனர். கோவில் புறப்பகுதியில், செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மிக நுணுக்கமாக நல்ல வடிவமைப்புடன் உள்ளது.
வரலாறு.
1651 ஆம் ஆண்டு, மன்னர் மகாராணா ஜகத்சிங் என்பவரால் கட்டப்பட்டது. ரூபாய் மதிப்பில் 1.5 மில்லியன் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாங்கள் எடுத்த புகைப்படம் மற்றும் காணொளி.
No comments:
Post a Comment