மதுரா. (32 Days Tour sep 2022)
Image - Source from Wikipediaஉத்ரபிரதேச மாநிலத்தில், மதுரா, மதுரா மாவட்டத்தின் தலைநகரம். நம்முடைய தமிழ் மொழியில் இந்த இடத்தை வடமதுரை (மாயனை மன்னு வடமதுரை மைந்தனை –திருப்பாவை) என்று அழைக்கின்றனர். டெல்லியில் இருந்து தென்கிழக்கே 145கி.மீ. தொலைவில் உள்ளது. இது கிருஷ்ணரின் ஜென்ம பூமியாகும். முக்தி தரும் ஏழு தலங்களில் இதுவும் ஒன்றாகும். கிருஷ்ணர் பிறந்த (சிறை இருந்த) இடத்தில், “கேசவ தேவ் கோவில்” கட்டப்பட்டிருக்கிறது. இங்கும் 17 ஆம், நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதியை இடிக்ககோரிய மனுகாரணமாக இந்த இடம் சர்ச்சையில் (Dispute) உள்ளது.
Image Source from Wikipedia
துப்பாக்கியேந்திய காவலர்கள் பாதுகாப்பு கருதி கோவில் முழுவதும் நிறைந்து இருக்கின்றனர். சிறிய வேலட் (Wallet) மட்டுமே எடுத்துசெல்ல அனுமதிக்கின்றனர் 108 திவ்யதேசங்களில், 71வது திவ்யதேசமாகும். (oct-10-2022)
No comments:
Post a Comment