திருவிடைக்கழி

 திருவிடைக்கழி. (தரிசனநாள்-29.10.2022).


தெய்வானை சமேத முருகப்பெருமான் கோவில். மயிலாடுதுறை மாவட்ட தேவர பாடல் பெற்ற தலங்களுக்கு சென்றுகொண்டடிருக்கும் போது எங்களின் ஓட்டுநர் இந்த கோவிலை பரிந்துறைத்து எங்களை இங்கு அழைத்து சென்றார். இரவு எட்டுமணிக்கு நடைசார்த்தும் நேரத்தில் மிக சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு சென்றோம்.

அமைவிடம்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பொனார் கோவில் ஊராட்சிஒன்றியத்தில் உள்ளது.

தலவரலாறு.


;சூரபத்மனின் மகன் இரண்யாசுரன் முருகபெருமானுக்கு பயந்து தரங்கம்பாடியருகில் கடலுக்குள் ஒளிந்துகொண்டான். சிவபக்தனான இரண்யாசுரனை முருகபெருமான் வதம்செய்தார். இதன் காரணமாக ஏற்பட்ட பாவத்தை போக்க இத்தல சிவபெருமானை வணங்கினார். பாவம் நீங்க பெற்று, அவர் தந்தை ஈசனின் சொல்படி இத்தலத்திலேயே இருந்து மக்களுக்கு அருள்புரிகிறார் ஆறுமுக கடவுள். 

பெயர்காரணம்.

திருப்பரங்குன்றம் செல்ல தெய்வானை இறைவனை விடை கேட்டதாலும், இரண்யாசுரணை கொன்ற பாவம் கழிந்த இடமானதாலும் விடைகழி என்ற பெயர் பெற்றது.

கோவில் அமைப்பு. 


மூலஸ்தானத்தில் பிரதானமூர்த்தியாக சுப்ரமணியசுவாமியும், (திருச்செந்தூர் முருகனின் இரட்டைபிறவி போன்றுள்ளது). சற்றுஉள்ளடங்கிய சிவலிங்கமூர்தியும் உள்ளனர். அம்பாளுக்கு சன்னதி கிடையாது. அம்மன் தரங்கம்பாடி சென்றுள்ளார் என்று ஒரு நம்பிக்கை. தெய்வானைக்கு ஒரு தனி சன்னதியுள்ளது. ஏழுநிலை ராஜகோபுரம் கொண்ட கோவில்.   

கோவில்சிறப்பு.


1;. தலவிருட்சம்- குமாரமரம். மலைகளில் மட்டுமே இருக்ககூடிய இந்த மரம், நிலத்தில் வளர்வது ஒரு சிறப்பு.  

2. நவகிரகம் இல்லாத இந்த கோவிலில் முருகப்பெருமானை வழிபாடுசெய்தாலே அனைத்து தோஷங்களும் நீங்குமாம்.

3. பிரதோஷநாயகர் ,சோமாஸ்கந்தர், சண்டிகேஸ்வரர் சன்னதியில் உள்ள, சிவ சண்டிகேஸ்வரர், குகசண்டிகேஸ்வரர், கொடிமரத்தில் உள்ள விநாயகர் என்று அனைவரும் கையில் வேலேந்தியே உள்ளனர்.

4. முருகபெருமானுக்கு மயிலுக்கு பதிலாக யானை வாகனம்.

5. திருப்புகழ் பாடப்பெற்ற தலம்.

சேந்தனார் முக்தியடைந்த தலம்.

விறகுவெட்டியான சேந்தனார், சிறந்த சிவபக்கதர். தினமும் சிவனடியார் ஒருவருக்காவது உணவு அளித்தபிறகுதான் இவர் உணவருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். அரிசியாக கொடுக்கமுடியாமல், கிடைத்த அரிசியை களியாக கிண்டி சிவனடியாருக்கு பரிமாரினார். அன்றைய தினம் தில்லை நடராசரே சிவனடியார் உருவில் வந்து களி உட்கொண்டார். இதுவே மார்கழிமாத “திருவாதிரை”. அவரின் பக்தி உலகுக்கு எடுத்துகாட்ட, அன்றைய தேரோட்டத்தில் தேர் நகராமல் இருந்த நேரத்தில் அசரீயாக ஈசன் வாக்கு கேட்டு சேந்தனார் திருப்பல்லாண்டு பாடினார். இந்த சிறந்த சிவபக்தர் முக்திஅடைந்த தலம், இந்த திருவிடைக்கழியாகும்.

இத்தகைய சிறப்பு எதுவும் தெரியாமல் இறைவனைவணங்கி வந்த எங்களை மீண்டும் தரிசனம் செய்ய அருள்புரியுமாறு முருகப்பெருமானை பிரார்திக்கிறேன்.


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...