மயிலாடுதுறைமாவட்ட தேவாரதிருத்தலங்கள். பகுதி-2 (5Temples)

 மயிலாடுதுறைமாவட்ட தேவாரதிருத்தலங்கள்.  பகுதி-2. (தரிசனநாள்-29.அக்டோ.2022)

1.திருவிளநகர்.


மயிலாடுதுறையில் இருந்து 10.கி.மீ. தொலைவில் உள்ளது.


திருஞானசம்மந்தரால் பாடப்பெற்ற தலம்.


வேடன் வடிவத்தில் வந்து சம்மந்தருக்கு உதவினார் என்பது இத்தல பெருமை.

வேயுறுதோளியம்மை சமேத உச்சிவனேஸ்வரர் (எ), உசிரவனேஸ்வரர்(எ), துறைகாட்டும் வள்ளல் என்ற பெயரில் இறைவன் வீற்றிருக்கிறார்.

2.கீழ்பரசலூர்.


திருபறியலூர் என்பது புராணபெயர்.

அஷ்ட(எட்டு) வீரதலங்களுள் ஒன்று.


தருமையாதினத்திற்க்கு கீழ் இக்கோவில் இயங்குகிறது.


இளங்கொம்பனையாள் சமேத வீரட்டேஸ்வரர்.

3.செம்பொனார் கோவில்.


மருவார்குழலி சமேத சுவர்ணபுரீஸ்வரர்.

திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர் இவர்களால பாடல் பெற்ற தலம்.


மாடக்கோவில் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

4. திருஆக்கூர்.


வாள்நெடுங்கண்ணி சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில்.

திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், கபிலதேவநாயனார் இவர்களால் பாடபெற்ற தலம்.

மாடக்கோவில் அமைப்பில் கட்டப்பட்ட தலம். 


சிறப்பொலிநாயனார் அவதரித்ததலம்.

ஆயிரத்தில் ஒருவர் என்று இத்தல ஈசன் ஏன் அழைக்கப்படுகிறார்?

சிறப்பொலிநாயனார் 1000 சிவனடியார்களுக்கு விருந்துஅளிக்க விருப்பபட்டு, இதற்கான செயலில் இறங்கினார். ஆனால் அன்றைய தினம் 999 அடியார்கள் மட்டுமே வந்திருந்தனர். நாயனார் ஈசனை வேண்ட சிவபெருமானே வயதான அடியாருவில் வந்து உணவு அருந்தியதால் இத்தல ஈசன் ஆயிரத்தல் ஒருவர் என்றும் அழைக்கப்படுகிறார். 

5.திருக்கடையூர் மயானம்.


திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோவில் கிழக்கு கோபுரவாயிலில் இருந்து 2கி.மீ. தொலைவில் உள்ளது இந்த பிரம்மபுரீஸ்வரர் கோவில்.

திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்று மூவராரும் பாட பெற்ற தலம். 

நம்முடையபாவம் மற்றும் வினைதீர்க்கும் தலம் என்று தேவாரத்தில் குறிப்பிடபட்டுள்ளது. 

5தலங்கள் மயானம் என்று அழைக்கப்படுகிறது.


அ. காசி மயானம்.

ஆ. கச்சி மயானம். (காஞ்சிபுரம்)

இ. காழி மயானம். (சீர்காழி)

ஈ. நாலூர் மயானம் (நாலூர்)

உ.கடவூர் மயானம். (திருக்கடையூர்) 

தலசிறப்பு.


இறைவன், பிரம்மனுக்கு தலைகனம் ஏறிவிட்டதால், பிரம்மனை எரித்துவிட்டார்.  தேவர்கள் பிரும்மனுக்கு உயிருட்ட இறைவனை வேண்டிய தலம்.

கங்கை தீர்தம். இக்கோவில் குளம் கங்கையாகவே கருதப்படுகிறது. ஈசனுக்கு இந்த நீரை கொண்டே அபிஷேகம் செய்கின்றனர். 

சிவஞானத்தை போதித்த இடம் என்பதால் “திருமெய்ஞானம்” என்று அழைக்கப்படுகிறது.

சிங்காரவேலர் சன்னதி மிகவும் சிறப்பாக உள்ளது. (சிக்கல் தலத்தை தரிசனம் செய்த சிறப்பு உண்டாம்.) அன்றைய தினம் கந்தசஷ்டி பெருவிழாவில் வேல் பெற்ற நாளில் எங்கள் தரிசனம் சிறப்புற்றது. 









Again worshiped on 25.5.2024 (morning 6.30 a,m,)

No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...