உதய்பூர் ஒருநாள் பயணம்.

 உதய்பூர் ஒருநாள் பயணம். (பணயன நாள் 21.7.2022).

நகர அரண்மனை. (City Palace).


ராஜஸ்தான் மாநிலத்தில் பல அரண்மனைகள் உள்ளன. உதய்பூர் அரண்மனை, பிச்சோலா என்ற ஏரியின் கரையில் அமைந்துள்ள, கட்டிட கலைக்கு முத்தாய்பாய் அமைந்த அரண்மனையில் ஒன்றாகும். 1559-ல் மகா ரானா உதைசிங் என்ற அரசர் இந்த அரண்மனையை கட்டி வசித்து உதய்பூரை ஆட்சி செய்து வந்தார். முற்றம், கூடாரம், தாழ்வாரம், மொட்டைமாடி என்று அனைத்தும் அடங்கியவாறு கட்டியுள்ளனர். ஆரண்மனையின் பல பகுதிகள் தனியார், நட்சத்திர ஹோட்டல்களாக இயங்கி வருகின்றன.



பிச்சோலா ஏரி. (Picholo Lake)


1362 ல் பிச்சோலி என்ற கிராமத்திற்கு அருகில், சுத்தமான தூய்மையான தண்ணீர் கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் காரணமாகவே பிச்சோலா  ஏரி என்ற பெயர் பெற்றது. இதை தொடர்ந்து பல ஏரிகள் உருவாகியதன் காரணமாக ஏரிகள் நகரம் என்ற பெயரை உதய்பூர் பெற்றது. 

கர்னிமாதா கோவில். (Karnimath Temple)


ஏரிக்கு மிக அருகிலேயே உள்ளது, இந்த கோவில், Winch  மூலமாகதான் செல்ல வேண்டும். ராஜகுலத்தவர்களும், மன்னர்களும் போருக்கு செல்லும் போதும், முக்கிய செயல்கள், முடிவுகள் எடுக்கும் முன்பு இந்த அம்மனை வழிசெய்த பிறகுதான் செயலை தொடங்குவார்களாம். தற்பொழுதும் ராணுவவீரர்கள் அவர்களின் வெற்றிக்கும், பாதுகாப்புக்கும் இந்த மாதாவை வணங்குகின்றனர்.



Bagore ki Haveli.


 அரண்மனை போன்ற ஒரு கட்டிடம். உதய்பூர் Gangaur Ghat Marg  என்ற இடத்தின் அருகில் உள்ளது. கண்ணாடி வேலைப்பாட்டுடனும், 100 மேற்பட்ட அறைகளையும் கொண்ட இந்த இடம் 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சுவற்றில் வண்ண ஓவியங்களும், பழமையான பொருட்களும் அதன் சிறப்புகளை எடுத்து கூறும் படங்களும், செயற்கையாக உருவாக்கப்பட்ட உருவங்களை கொண்டு காட்சி படுத்தப்பட்ட ஒரு அருங்காட்சியகம். 

Ganguar Ghat Marg.



 


















No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...