ஸ்ரீநாத் துவாரகா என்ற நத்துவாரா. (தரிசன நாள் 15.7.2022)
ஸ்ரீநாத் என்ற இந்த கிருஷ்ணர் கோவில் பஞ்சதுவாரகையில் ஒன்றாகும். ஒரு நாளைக்கு 5 முறை 5 வகையான அலங்காரத்துடன் மக்களுக்கு தரிசனம் தருகிறார் பால கிருஷ்ணர். ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூர் என்ற இடத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது நத்துவாரா என்ற இடம். நாங்கள காலை 7.15 மணிக்கு நடை பெறும் முதல் தரிசனத்திற்கு சென்று இறைவனை வழிப்பட்டோம். அதனால் குறைந்த எண்ணிக்கை கொண்ட பக்தர்களிடையே எங்களால் நன்கு தரிசனம் செய்ய முடிந்தது. இரவு 7 மணி தரிசனம் சமயம் கூட்டம் அலைமோதுமாம். இந்த நேரத்தில் பகவானுக்கு ஆரத்தி எடுக்கும் நேரம் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.
17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில். பிருந்தாவனத்தில் இருந்து ஆக்ராவுக்கு இக்கோவிலை மாற்ற உத்திரவிட்டாராம் ஓளரங்கசீப். செல்லும் வழியில் தங்கிவிட்டாராம் பால கிருஷ்ணர் என்று வரலாறு கூறுகிறது.
துவாரகதீஸ்வரர்.
நத்துவாராவில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமையான கிருஷ்ணர் கோவில். மிகவும் சிறிய உருவில் எளிமையாகவே தரிசனம் தந்தார் கிருஷ்ணர். கோவில் உட் பகுதியில் அமைந்த Rajsamand ஏரி மிகுந்த எழிலுடன் காணப்பட்டது.
Rajsamand Lake view.
No comments:
Post a Comment