அக்சரதாம் கோவில். (ஜெய்பூர் கோவில்).
ஜெய்பூர் சுற்றுபயணத்தின் போது நாங்கள் இந்த கோவிலுக்கு சென்றோம். “சுவாமி நாராயணன் இயக்கம்” பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமே இந்த Blog எழுத காரணமாயிற்று.
சுவாமி நாராயணா இயக்கம் என்றால் என்ன?
இராமானுஜரின் விசிட்டா துவைதத்தை அடிப்படையாக கொண்டு, இந்து மதத்தின் வைஷ்ணவ சம்பிரதாயத்தை, பின்பற்றி இயங்கும், இயக்கமே, சுவாமி நாராயணா இயக்கம்.
சுவாமி நாராயணன் என்பவர் யார்?
உத்திரபிரதேச மாநிலத்தில், 1781 ஆம் ஆண்டு பிறந்தார். கண்சியாம் பாண்டே என்பது இவரது இயற்பெயர். 11வது வயதில் இந்தியாவின் பெரும் பகுதிகளுக்கு 7 ஆண்டுகள் யாத்திரை மேற்கொண்டார். இவரின் குரு இவருக்கு “உத்தவ் சம்பிரதாயத்தை” கற்பித்து சுவாமி நாராயணன் என்றும் பெயரிட்டார். இவ்வழி
வந்தவர்கள் உருவாக்கிய கோவில்களே அக்சரதாம் கோவில்கள்.
அக்சரதாம் கோவில்கள் உள்ள இடங்கள்.
ஆஸ்திரேலியா, கனடா, பிஜி, இந்தியா போன்ற நாடுகளில் உள்ளன. இந்தியாவில் டெல்லி அக்சரதாம் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இணையதளத்திற்க்கு சென்று இக்கோவிலை காணுங்கள். பிரமிப்பூட்டும்! 2002 ஆண்டு செப்டெம்பர் மாதம் பாகிஸ்தான் நாட்டு தீவிரவாதிகளின்,. தாக்குதலுக்குள்ளாகியது குறிப்பிடதக்கது. நான் செப்டம்பர் இறுதிவாரம் டெல்லிக்கு பயணிக்கிறேன். இக்கோவிலை நேரடியாக சென்று வழிபட்டபின், இக்கோவில் கட்டிட கலை சிறப்புகளை உங்களிடம் பகிர்கிறேன்.
No comments:
Post a Comment