ஜெய்பூர். சுற்றுப்பயணம். நாள்- 1
ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமான ஜெய்பூர் ஒரு சிறந்த சுற்றுலா இடமாகஉள்ளது. (பயணநாள் 10.7.2022).
அமெர் கோட்டை. (Amer Fort).
அமெர் கோட்டை, இது ஆம்பெர் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. ஜெய்பூர் நகரில் இருந்து 11 கி.மீ தொலைவில், ஆமெர் என்ற இடத்தில், ஆரவல்லி மலை தொடரில் கட்டப்பட்ட கோட்டை மற்றும் அரண்மனையாகும். பளிங்கு மற்றம் மணற்கற்களால் கட்டப்பட்ட அந்த கோட்டை,
1.பொது மக்கள் கூடும் மாளிகை,
2.அரண்மனை குடும்பத்தினர் கூடும் மாளிகை,
3.ஜெய் மாதா கோவில்,
4.கண்ணாடி மாளிகை.
5.செயற்கை நீரூற்று, என்று வகை படுத்தி கட்டப்பட்டுள்ளது. இராஜபுத்திர குல மன்னர்கள் குடும்பத்தினரின் வாழ்விடமாக விளங்கியது. 1550 முதல் 1674 வரை முதலாம் மாசிஸ் என்ற ராஜபுத்திரரால் ஆளப்பட்டது. அவர்களின் தலைநகரமாகவும் விளங்கியது. 2013 முதல் UNESCO Heritage _ ஆக அறிவிக்கப்பட்டது.
ஜெய்கார்க் கோட்டை. (Jaigarh Fort)
இரண்டாம் சவாய் ஜெய்சிங், போர் வெற்றி சின்னமாக 1726-ல் கட்டப்பட்டது. வடக்கு தெற்கில் 3 கி.மீ. நீளமும் கிழக்க மேற்கில் 1 கி.மீ. நீளம் கொண்டதாக உள்ளது.
இக்கோட்டையில் உள்ள பீரங்கி உலகில் உள்ள பீரங்கிகளில், பெரிய பீரங்கிகளில் ஒன்றாகும். லெஷ்மி, லலிதா, ராமர், காலபைரவர் கோவில்களும், அருங்காட்சியகமும் உள்ளது.
நாகர்கர் கோட்டை. (Nahargark Fort).
நாகர்சிங் பொமியா என்ற மன்னர் பெயரால் கட்டப்பட்ட கோட்டை. 1857 சிப்பாய் கலகத்தின் போது ஆங்கிலேயர் குடும்பத்தினர், அவர்களை பாதுகாத்துக்கொள்ள இங்கு தங்கினராம். போக்கவரத்து நெரிசல் காரணமா நாங்கள் இந்த கோட்டையை சுற்றி பார்க இயலவில்லை. இந்த மூன்று கோட்டைகளும் ஆரவல்லி மலைதொடரிலேயே அமைந்துள்ளன.
ஜல்மகல். (Jal Mahal).
மேன் சாகர் ஏரியின் நடுவில் கட்டப்பட்ட அரண்மனை. 1699 கட்டப்பட்டு, இரண்டாம் ஜெய்சிங் மன்னரால் புதுபிக்ப்பட்டது. நீர்நிலை சரியான பராமரிப்பின்மை காரணமாக நீர்வரத்து குறைந்துவிட்டதாம். 5 அடுக்கு அரண்மனை மழை காலத்தில் நான்கு அடுக்கு மூழ்கிவிடுமாம். தற்பொழுதும் ஏரி அசுத்தமாகவே காணப்பட்டது. தற்பொழுது, சுகாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, இங்கு பல ஆண்டுகாலமாக வாழும் எங்களின் உறவினர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment