ஜெய்பூர் சுற்றுப்பயணம் நாள்-2.

 ஜெய்பூர் சுற்றுப்பயணம் நாள்-2.

ஹவாமகால். ( Hawa Mahal)


1799 ஆம் ஆண்டு, சவாய் பிரதாப் சிங் என்பவரால் கட்டப்பட்டது. ஹவாய் மகால் என்றால், தென்றல் வீசும் அரண்மனை என்று பெயர். 953 ஜன்னல்கள் கொண்டது. இதன் காரணமாகவே இந்த பெயர் பெற்றது. லால் சந்த் உஸ்தா என்பவர், இறைவன் “கிருஷ்ணரின் கீரிடம்” போன்று வடிவமைத்துள்ளார்.  அரண்மனை பெண்கள், நகரை பார்வையிடவே, கட்டப்பட்ட இந்த கட்டிடம்,
ஜெய்பூர் பிரதான சாலையில் அமைந்துள்ளது. 

ஜந்தர்-மந்தர். (நேரத்தை கணக்கிடும் கருவி உள்ள இடம்).

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்பூரில் இரண்டாம் சவாய் சிங் என்ற மன்னரால் கட்டப்பட்ட, 19 வகையான வானியல் (Astronomy Instrument)  கருவிகள் உள்ள இடம். பலவகையான எந்திரங்களை பயன்படுத்தி  நேரத்தை கணக்கிட்டனர். காபாலி என்ற இயந்திரம், U.K. யில் உள்ள கிரீன்வீச் நேரத்தையும், ஸ்விட்சர்லாந்தில் உள்ள சூரிச்நோட்கே, நேரத்தையும் ஒத்துள்ளதாம். 1948-ல் நமது தேசத்தின் நினைவச்சின்னமாகவும், 1968 முதல் ராஜஸ்தான் மாநிலத்தின், சின்னமாகவும் (Emblem) அறிவிக்கப்பட்டது.

ஆல்பர்ட் அருங்காட்சியகம். (Albert Hall Museum).



சமுவேல் ஜேகப் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1887-ல் அருங்காட்சியமாக திறக்கப்பட்டது. கார்பட்,  சிலை ,யானை தந்ததத்தில் உருவாக்கப்பட்ட, நகை மற்றம் கதவுகள், போர் கருவிகள், நூற்றாண்டுகளுக்கு முன் பயன் படுத்திய பொருட்கள் என்று ஒரு அருங்காட்சியத்தில் உள்ளது  போன்று வழக்கம் போல் இருந்தது. எகிப்திய மம்மி ஒன்று இருந்தது மட்டுமே சிறப்பு. 2011 மார்ச் மாதம் மம்மியை எடுத்த ஒரு எக்ஸ்ரே- படத்தை உங்களுடன் பகிர்கிறேன்.  


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...