Mount Abu. (மவுண்ட் அபு.) (பார்வையுற்றநாள்-17,18.7.2022).
ராஜஸ்தான் மாநிலத்தின் மலைபகுதி மற்றும் கோடைவாசஸ்தலம் தான் "மவுண்ட் அபு" என்ற ஊர். குஜராத் மற்றம் ராஜஸ்தான் மாநில மக்கள் அவர்களின் கோடை நாட்களில் இங்கு வருகின்றனர்.
நக்கி லேக். (Nakki Lake).
மலையின் மைய பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரி. படகு சவாரி மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது.
டோட் ராக்.(Toad Rock).
இந்த பாறை காட்சியை அனைத்து மக்களும் விரும்பி பார்க்கும் இடமாக உள்ளது. காட்டு விலங்குகள் பற்றிய படங்களிலும், குழந்தைகள் வரையும் படங்களிலும் (இந்த பாறை காட்சியை தான் பயன் படுத்துகின்றனர். சிங்கம் நிற்கும் காட்சியை நான் கற்பனை என்றே நினைத்து இருந்தேன். இந்த பாறை அமைப்பு உள்ள இடம் மவுண்ட் அபு. புகைபடத்தை பார்தால் உங்களுக்கும் புரியும்.
பிரும்ம குமாரிகளின் ஆன்மீக பல்கலைகழகம். ( Peace Spiritual University).
பிரும்ம குமாரிகள் ஆன்மீக அமைப்பு தமிழ்நாட்டிலும் பல ஊர்களில் உள்ளது. உலக அளவிலான அரசு சாரா, ஆன்மீக பல்கலைகழகம். இந்த பல்கலைகழகம் 1930-ல், தாதா லேக்ராஜ் கிருபாலனி என்பவரால் உருவாக்கப்பட்டது. 1000 கணக்கான மனிதர்கள் அமரும் வண்ணம் பெரிய கூடம் அமைத்திருந்தனர். நாம் விரும்பினால் ஆன்மீக விளக்கஉரை கேட்கலாம். பேராசிரியர்கள் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் விளக்கம் அளிக்கின்றனர்.
ரகுநாத் ஆலையம்.
ஏரிக்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோவில்.
ஆதார் தேவி கோவில்.
ஆரவல்லி மலையில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோவில். 500 மேற்பட்ட படிகளை கொண்டது. சக்தி பீடங்களில் ஒன்று.
அச்சலேஸ்வர் மகாதேவ் கோவில்.
சிவபெருமானின் கால் அச்சு பதித்த இடத்தை சுற்றி கட்டப்பட்து என்ற நம்பிக்கை உள்ளது. சிவலிங்கமானது காலையில் சிவப்பு நிறத்திலும், மதியம் குங்குமபூ நிறத்திலும், மாலை வெண்மையாகவும் காட்சி அளிக்கிறது.
தில்வாரா கோவில் (Dilwara Temple).
மவுண்ட் அபுவில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. 11ஆம் நூற்றாண்டுக்கும் 13ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் கட்டப்பட்டது. இது ஒரு சமண மத கோவிலாகும். Marble கட்டிட கலையாகும். கதவு, தூன், உத்திரம் போன்ற வற்றில் மிகவும் நுனுக்கமான வடிவங்கள் செய்யப்பட்டுள்ளன. சமண மதத்தினருக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும். பிற மதத்தினருக்கு மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்திற்கான நேரமாகும்.