சேரன்மகாதேவி- பக்தவச்சல பெருமாள், அப்பன் வெங்கடாஜலபதி, ராமசாமி, கோவில்கள். (தரிசனநாள்- 5.6.2022).
பக்தவச்சல பெருமாள்.
சேரன்மகாதேவியில் இருந்து 3.கி.மீ. தொலைவில் புராதனமான, கட்டிட கலையுடன், எழில்நிறைந்த, அற்புதமான கோவில். சிறந்த புராதன சின்னமாக கொண்டு, 1921 ஆம் ஆண்டு முதல் தொல் பொருள் ஆய்வத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் பராமரிப்பு மிக அற்புதமாக உள்ளது. இந்துஅறநிலைய துறையின் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழேயும் செயல்படுகிறது. இந்த கோவில் இரண்டு சன்னதிகளை(Shrines) கொண்டுள்ளது. சிறிய சன்னதியில் கிருஷ்ணரும், பெரிய சன்னதியில் பெருமாள் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் பக்தவச்சல பெருமாளாக காட்சி தருகிறார். அர்த மண்டபம், மஹாமண்டபம், வெளிமண்டபம் என்று மூன்று மண்டபங்களுடனும், தூண்கள், செதுக்கிய, அழகிய சிற்பங்களுடனும், உள்பிராக அமைப்பும் கண்கொள்ளாகாட்சியாக, அமைந்துள்ளது. கருடன் பெருமாளை நோக்கியும், பிரகாரத்தில் யோக நரசிம்மரும். காட்சி தருகின்றனர்.
அப்பன் வேங்கடாஜலபதி.
சேரன்மகாதேவி ராமசாமி கோவிலில் இருந்து வடக்கே 1கி.மீ தொலைவில் உள்ளது. வயல்வெளியின் இடையே வாழைத்தோப்பின் அருகில் மிக இயற்கை எழில் அமைந்த இடத்தில் இக் கோவில் அமைந்துள்ளது. மிக ஆர்வத்துடன் சென்ற எங்களக்கு மிகுந்த ஏமாற்றமே கிடைத்தது. நாங்கள் மாலை 6மணிக்கு சென்றோம். கோவில் திறப்பதற்கான, திறந்ததற்கான அறிகுறிகளே இல்லை. “அப்பா உனக்கே இன்னிலை எனில் நாங்கள் எம்மாத்திரம்” என்று மிகுந்த வேதனையுடன் கிளம்பினோம். நான் வீட்டிற்கு வந்து இணையதளத்தில் அப்பன் வேங்கடாஜலபதி பற்றி தேடி படித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கோவில் பற்றிய செய்திகள்.
50 ஆண்டுகளுக்கு மேலாக மூடிக்கிடந்த இந்த கோவில் சமீபத்தில் (2017) திருப்பணி செய்யப்பட்டதாம். விஜயநகர காலத்தில் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. தமிழிலும், சமிஸ்கிரதத்திலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு இணையானதாக கருதப்படுகிறது. சேரன் அரசனின் மகளுக்கு, இந்த கோவில் பெருமாளுக்கு நிவேதனம் செய்த மிளகு ரசம் அருந்தி தீராத வயிற்றுவலி தீர்ந்ததால், மிளகு ரசம் பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படுகிறதாம். சேரன், பாண்டியன், விஜயநகர பேரரசர்கள் என்று பல மன்னர்களும் இந்த இறைவனுக்கு பல சொத்துகள் அளித்துள்ளதாக 60 கல்வெட்டுகள் தெரிவிக்கின்றனவாம்.
ராமசாமி கோவில்.
இந்த கோவில் நீண்ட மதில் சுவற்றை பார்த்து அதிசயித்து இறைவனை வணங்க சென்றால், கோவில் வாயிற் கதவு திறந்து இருந்தது, அர்சகர் நின்றுகொண்டடிருந்தார். எங்களை பார்தவுடன் அறைமணி நேரம் ஆகும் என்றார். நாங்கள் கோவிலுக்குள் சென்றோம். அனைத்து சன்னதிகளும் பூட்டி இருந்தன. பிராகாரம் முழுவதும், புதர் மண்டி கிடந்தது, தற்போதைய நிலையை நன்கு உணர முடிந்தது. அரை மணி நேரம்தான் சென்றது. அர்சகர்????? மாடக் கோவில் பாணியில் அமைந்திருந்தது. இணையதளம் மூலம் அறிந்த செய்தியை பகிர்கிறேன். மூலவர் ராமர். “ நிகரிலி சோழ சதுர்வேதி மங்கலம்” என்பது புராதன பெயராகும். “நிகரிலி சோழ விண்ணகர உடையார்” என்பது மூலவர் ராமரின் பெயர். மூவேந்தர்களும் நாயக்க மன்னரும் இந்த கோவில் சிறக்க பல வேலைகள் செய்துள்ளனர்.
2021, கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால கல்வெட்டு, மதுரை மாவட்ட முன்னாள் தொல்லியல் அலுவலருக்கு கூடுதல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
சிறிய வேண்டுகோள்.
பக்தவச்சல பெருமாள் கோவிலுக்கு செல்பவர்கள் இங்கு சென்றாலே இக்கோவில்கள் வளம்பெறும். இணையதளசெய்தி, இவ்வாறு பராமரிப்பு இல்லாமல் 10 மேற்பட்ட கோவில்கள் உள்ளனவாம்.