டெல்லி ஒருநாள் பயணம் (29.9.2024)
பஞ்சகேதார் பயணிக்க அதிகாலை 5.55 மணி விமானத்தில் சென்னையிலிருந்து டெல்லி பயணித்தோம். இரவு 10.55க்குதான் ஹரித்வார் செல்வதற்கான புகைவண்டி. இதன் காரணமாக டெல்லி சுற்றிபார்க்க எங்களது பயண ஏற்பாட்டாளர் “தமிழ் அஞ்சல்” எங்களை அழைத்து சென்றனர்.
பிர்லாமந்திர்.
பிர்லா குடும்பத்தால் பல நகரங்களில் கட்டப்பட்ட இந்து கோவில்களில், டெல்லியில் உள்ள இந்த கோவில், கன்சியாம்தாசுபிர்லா, மற்றும் இவரது தந்தை மற்றும், சகோதரர்களால் 1939 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பிர்லா குடும்பத்தினர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. முகலாயர்களால் பல இந்து கோவில்கள் அழிக்கப்பட்ட நிலையில் பிர்லா குடும்பத்தினரால் நம் நாட்டில் பல கோவில்கள் கட்டப்பட்டது.
இந்தியா கேட்.
இந்தியா கேட் அகில இந்திய போர் நினைவுச்சின்னம். உலகப்போர்கள், ஆங்கிலோ ஆப்பான் போர், ஐக்கிய ராஜ்யவீரர்கள், மற்றும் பல அதிகாரிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதே இந்த இடம். இதன் உட்பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் நேத்தாஜி சுபாஸ் சந்திர போசின், சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடியரசு தினத்திலும், பிரதமர் அமர் ஜவான் ஜோதிக்கு அஞ்சலி செலுத்தியபின், குடியரசு தின அணிவகுப்பு தொடங்குகிறது. டெல்லியின் சிறந்த சுற்றுலா இடமாகவும் உள்ளது.
பாராளுமன்ற கட்டிடம்.
2023 ஆம் ஆண்டு மே மாதம் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டது. புதிய கட்டிடத்தின் பின் பக்கம் பழைய பாராளுமன்ற கட்டிடம் அமைந்துள்ளது. குறிப்பிட்ட தூரத்தில் இருந்து பார்ததால், சிறப்பை உணரமுடியவில்லை.
இந்திரா காந்தி நினைவிடம்.
இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் அவர் வசித்த இடம் தற்பொழுது, இந்திராகாந்தி நினைவிடம் மற்றும் அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிறது. அம்மையாரின் குடும்பவரலாறுகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இவர் சுட்டு வீழ்தப்பட்ட இடம் கண்ணாடி கொண்டு பாதுகாக்கப்படுகிறது.
அக்ஷ்சர்தாம்.
2022- செப்டம்பரில் இங்கு சென்றதாலும், அகதாபாத் மற்றும் ஜெய்பூர் நகரங்களில் இக்கோவிலுக்கு சென்றதாலும், இரவு சோர்வு காரணமாகவும் நாங்கள் இங்கு செல்லவில்லை. அகமதாபாத் ஒருநாள் பயணம், ஜெய்பூர் பயணம், எங்களது நம்மதா பரிக்ரமா என்ற மிகசிறந்த ஆன்மீக பயணத்தில், குஜராத் மாநிலம் பரூஜ் நகரில் இந்த கோவில் வளாகத்திலேயே நாங்கள் தங்கியிருந்தோம். இதன் காரணமாக பரூஜ் நகர அக்சர்தாம் கோவிலும் தரிசனம் செய்துள்ளோம். இந்த மூன்று கோவில்கள் பற்றிய சிறப்பு செய்திகளை என்னுடைய பிளாக்கில் குறிப்பிட்டுள்ளேன்.
No comments:
Post a Comment