பஞ்சகேதார், 5. கல்பேஷ்வர்
ஜோதிர்லிங்கத்தில் ஒன்றாகவும், சார்தாம் யாத்திரையில் மூன்றாவது இடமாகவும் உள்ள, மிகவும் புகழ்பெற்ற கேதார்நாத்க்கு(சார்தாம் யாத்திகர்களாக) 2022 ஆம் ஆண்டு நாங்கள் சென்றோம். இயற்கை இடற்பாடு காரணமாக எங்களுடைய சிவன் தரிசனம் தடைபட்டது. கேதார்நாதரை தரிசனம் செய்யமுடியாத எங்களின் மனநிலை, பஞ்சகேதாரையும் தரிசனம் செய்ய வேண்டும் என்ற மனநிலையை தூண்டியது. பஞ்சகேதார் தரிசனம் என்பது மிகவும் கடினமான யாத்திரைகளில் ஒன்றாகும். யாத்திரைக்கு அழைத்து செல்லும் பலரும், பஞ்சகேதார் யாத்திரை அழைத்து செல்ல தயங்குவர். இவர்களுக்கு இடையில், “தமிழ் அஞ்சல்” இவர்கள் மூலமாக நாங்கள் இந்த கடினமான பயணம் செய்ய முடிவெடுத்தோம்.
பஞ்சகேதார்.
1. கேதார்நாத் - (11755-அடி) சிவபெருமானின் முதுகு பகுதி.
2. மத்மகேஷ்வர் - (11450-அடி) சிவபெருமானின் வயிற்று பகுதி.
3. துங்கநாத் - (12073-அடி) சிவபெருமானின் கை மற்றும் தோள்
4 .ருத்ரநாத் - (11800-அடி) ஈஸ்வரனின் முகம்.
5. கல்பேஷ்வர் - (7217 –அடி) மகேஷ்வரனின் ஜடாமுடி.
No comments:
Post a Comment