பஞ்சகேதார் -1. கேதார்நாத் (1.10.2024- இரண்டாவது முறை).
ஜோதிர்லிங்கத்தில் ஒன்றாகவும், சார்தாம் யாத்திரையில் மூன்றாவது இடமாகவும் உள்ள, மிகவும் புகழ்பெற்ற இந்த தலத்துக்கு(சார்தாம் யாத்திகர்களாக) 2022 ஆம் ஆண்டு நாங்கள் சென்றோம். இயற்கை இடற்பாடு காரணமாக எங்களுடைய சிவன் தரிசனம் தடைபட்டது. கேதார்நாதரை தரிசனம் செய்யமுடியாத எங்களின் மனநிலை, பஞ்சகேதாரையும் தரிசனம் செய்ய வேண்டும் என்ற மனநிலையை தூண்டியது. பஞ்சகேதார் தரிசனம் என்பது மிகவும் கடினமான யாத்திரைகளில் ஒன்றாகும். யாத்திரைக்கு அழைத்து செல்லும் பலரும், பஞ்சகேதார் யாத்திரை அழைத்து செல்ல தயங்குவர். இவர்களுக்கு இடையில், “தமிழ் அஞ்சல்” இவர்கள் மூலமாக நாங்கள் இந்த கடினமான பயணம் செய்ய முடிவெடுத்தோம்
.
பஞ்சகேதார்.
1. கேதார்நாத் - (11755-அடி) சிவபெருமானின் முதுகு பகுதி.
2. மத்மகேஷ்வர் - (11450-அடி) சிவபெருமானின் வயிற்று பகுதி.
3. துங்கநாத் - (12073-அடி) சிவபெருமானின் கை மற்றும் தோள்
4 .ருத்ரநாத் - (11800-அடி) ஈஸ்வரனின் முகம்.
5. கல்பேஷ்வர் - (7217 –அடி) மகேஷ்வரனின் ஜடாமுடி.
1. கேதார்நாத் (பஞ்சகேதாரில் முதல் தரிசனம்)
சீதாப்பூர் என்ற இடத்தில் இரவு தங்கி, (1.10.2024) அதிகாலை இறைவனை வழிபட குதிரையில் கிளம்பினோம். கௌரிகுண்ட் என்ற இடம் வரை நடந்து வந்து,
உமாபதி சமேத கௌரி அம்மனை வழிபட்டு பின் குதிரையில் பயணித்தோம். இந்த ஆலயம் தேவாரபாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக உள்ளது. குதிரை மற்றும், நடந்து செல்பவர்கள் மட்டுமே இவ்வழியாக செல்கின்றனர். ஹெலிகாப்டரில் பயணிப்பவர்கள் நேரடியாக ஹெலிபட் சென்று விடுகின்றனர். உமாபதியை வழிபடாமல் சென்றதே எங்களின் (2022ஆம் ஆண்டு) யாத்திரை தடைக்கு காரணம் என்று நான் நினைத்தேன்.
குதிரை நிறுத்தும் இடத்தில் இருந்து மீண்டும் இரண்டு கி.மீ. நடந்து கோர்நாத் கோவிலை அடைய வேண்டும். குதிரை பயணம் மிகவும் கடினமாக இருக்கும். இறைவனை வழிபட்டவுடன் நமது பயண துன்பம் தொலைந்து விடுகிறது. நாங்கள் இரவு 7 மணிக்கு சீதாப்பூர் திரும்பினோம். கனமழை காரணமாகவும் ஹெலிகாப்டர் சேவை நிறுத்தப்பட்டதாலும் சில யாத்திகர்கள் மறுநாள் காலை திரும்பினர். புகைபடம் மற்றும் கானொளி பகிரந்துள்ளேன்.
ஆதிசங்கரர் சிலை.
No comments:
Post a Comment