ஜோதிர்லிங்கத்தில் ஒன்றாகவும், சார்தாம் யாத்திரையில் மூன்றாவது இடமாகவும் உள்ள, மிகவும் புகழ்பெற்ற இந்த தலத்துக்கு(சார்தாம் யாத்திகர்களாக) 2022 ஆம் ஆண்டு நாங்கள் சென்றோம். இயற்கை இடற்பாடு காரணமாக எங்களுடைய சிவன் தரிசனம் தடைபட்டது. கேதார்நாதரை தரிசனம் செய்யமுடியாத எங்களின் மனநிலை, பஞ்சகேதாரையும் தரிசனம் செய்ய வேண்டும் என்ற மனநிலையை தூண்டியது. பஞ்சகேதார் தரிசனம் என்பது மிகவும் கடினமான யாத்திரைகளில் ஒன்றாகும். யாத்திரைக்கு அழைத்து செல்லும் பலரும், பஞ்சகேதார் யாத்திரை அழைத்து செல்ல தயங்குவர். இவர்களுக்கு இடையில், “தமிழ் அஞ்சல்” இவர்கள் மூலமாக நாங்கள் இந்த கடினமான பயணம் செய்ய முடிவெடுத்தோம்.
பஞ்சகேதார்.
1. கேதார்நாத் - (11755-அடி) சிவபெருமானின் முதுகு பகுதி.
2. மத்மகேஷ்வர் - (11450-அடி) சிவபெருமானின் வயிற்று பகுதி.
3. துங்கநாத் - (12073-அடி) சிவபெருமானின் கை மற்றும் தோள்
4 .ருத்ரநாத் - (11800-அடி) ஈஸ்வரனின் முகம்.
5. கல்பேஷ்வர் - (7217 –அடி) மகேஷ்வரனின் ஜடாமுடி.
2. மத்மகேஷ்வர் (தரிசனம்-4.10.2024)
பஞ்சகேதாரில் இரண்டாவது தலமாக தரிசனம் செய்யப்படுகிறது. இந்த தலம் சிவபெருமானின் வயிற்று பகுதியாய விளங்குகிறது.
சீதாப்பூரில் இருந்து ரான்சி என்ற இடத்திற்கு பயணித்தோம். இந்த ரான்சி என்ற இடம் மலையேற்றம் செய்பவர்களுக்கு தங்கும் இடமாக மட்டுமே உள்ளது.
இங்கிருந்து 14.கி.மீ தொலைவுள்ளது மத்மகேஷ்வர். இந்த 14 கி;மீ. ரும் இமயமலை ஏற்றமே. குதிரை மற்றும் நடந்து மட்டுமே இங்கு செல்ல முடியும். நாங்கள் குதிரையில் பயணித்தோம்.
அனுபவம்.
குதிரை ஏறி சில மீட்டர்கள் சென்ற உடன், குதிரை ஒரு ஒற்றை அடி பாதையில் செல்ல ஆரம்பித்தது. உடனே படி போன்ற அமைப்பில் குதிரை இறங்க ஆரம்பித்தது. இரண்டுபக்கமும் பல அடிகள் ஆழமான பகுதி, சக பயணிகள் பலர் குறிப்பாக பெண்கள் கூச்சல்இட ஆரம்பித்தனர். எனக்கும் பயம் அதிகமாக இருந்தது. உடனே என் கணவர் பயந்து குதிரை விட்டு இறங்கிவிடாதே என்று சத்தமாக கூறினார். பிறகு சில இடங்களில் நடந்து செல்ல வேண்டி இருந்தது. குதிரை ஏறும்போது முன்பக்கமாகவும், குதிரை இறங்கும்போது பின் பக்கமாகவும் சாய்ந்து கொள்ள வேண்டும். ஆகே, பீச்சே என்ற இரண்டு ஹிந்தி வார்தைகள் உடனே கற்றுக்கொண்டேன்.
இறங்கும் நேரத்தில் பின் கழுத்து முதல், இடுப்பு முதுகு எலும்புவரை வலி அதிகமாக வருகிறது. என் கணவரின் அறிவுசார்ந்த வார்தைகளால் நாங்கள் 12 மணிக்கு உச்சிகால பூஜை பார்த்து மாலை 7 மணிக்குள் சாகர் திரும்பினோம். இந்த குறுகலான படிகளில் பலர் நடந்தே ஏறி இறங்கி வந்ததால் (இருட்டிவிட்டதால்) இரவு கோவில் அருகில் டென்டில் தங்கினர். இரவு 6.மணி தரிசனமே செய்ய முடிந்ததாலும். பலர் இரவு தங்க நேர்ந்தது.
அம்மன் கோவில் ரான்சி.
ரான்சியில் இறங்கியவுடன், அருகில் இருந்த அம்மன் கோவிலுக்கு சென்றோம். நவராத்திரியில் அம்மன் தரிசனமும் (மலைமகள்) கோவிலில் நடை பெற்ற ஹோமமும் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்தியது.
No comments:
Post a Comment