சுமார் 12 ஆம் நூற்றாண்டின் துளுவ அரசர் வீரபாகு என்பவரால் கட்டப்பட்டது. விநாயகர் கோவில் என்று பெயர் இருந்தாலும், மூலவர் சிவபெருமான்தான். பிராகாரத்தில் விநாயகர் சன்னதியுள்ளது. புலியை வேட்டையாட குறிவைத்த அம்பானது, பசுவை வதம் செய்தது, இதன் காரணமாக சிவனை பிரதிஷ்டை செய்து வழிபட்ட இடமே இந்த சராவு விநாயகர் ஆலயம். மங்களுரில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது.
ஆனேகுட்டா விநாயகர்.
கும்பாசி என்ற இடத்தில் அமைந்துள்ளது. நல்ல இயற்கை எழில் நிறைந்த இடத்தில் அமைந்துள்ளது. கர்நாடகா மாநில ஆன்மீக சுற்றுலாதலங்களில் ஒரு சிறந்த இடத்தை பிடித்துள்ள கோவிலாகும்.
இடுகுஞ்சி விநாயகர்.
கர்நாடகா மாநிலம் உத்ரகன்னடா மாவட்டம் இடுகுஞ்சி என்ற ஊரில் அமைந்துள்ளது. ஆண்டிற்கு ஒரு மில்லியன் பக்கர்கள் வரகூடிய கோவில் என்று கோவில் நிர்வாகம் கூறுகிறது. 5 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலாகும்.
மங்களுரில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோவிலாகும். 1912 ஆம் ஆண்டு “அதிஷாஹோயகேபஜார்கோரப்பா” என்பவரால் கட்டப்பட்ட கோவிலாகும்.
இந்தியாவின் மேற்கு கடற்டகரை மற்றும் மேற்கு தொடச்சிமலை பகுதியில் வாழ்ந்த வில்லவர்(எ)பில்லவர் என்று அழைக்கப்பட்டவர்களே ஆரம்பகால சேர பேரரசை உருவாக்கியவர்கள். அவர்கள் சிவபெருமான் மீது அதிக பக்தி கொண்ட காரணத்தால் ஒரு கோவில்கட்டி வழிபட நினைத்;து உருவாக்கியதே இந்த ஆலயமாகும்.
கோவில் உருவாக காரணமாக இருந்த கோரப்பா என்பவர் “நாராயணகுரு” என்பவரை ஆன்மீக குருவாக கொண்டு, அவரின் வழிகாட்டுதல்படி இந்த கோவிலை அமைத்தார். 1912 ஆம் ஆண்டு நிலம் மற்றும் நிதியை கோரப்பா என்பவரே வழங்கினார். சிவலிங்கம் நாராயணகுரு என்பவரால் கொண்டுவரப்பட்டது.
1991-ல், 60 அடி கோபுரமும் கோவிலும் புதுபிக்கப்பட்டது. நாராயகுருவின் பளிங்கு சிலையும் நிறுவப்பட்டது. 2007-ல் ஹனுமானுக்கு தனி சன்னதியும், அதன் பிறகு சாய்பாபாவிற்கு தனிசன்னதியும் உருவாக்கப்பட்டுள்ளது. கோவில் மிகவும் ரம்யமாக உள்ளது. புகைப்படமும், கானொளியும் இதை பறைசாற்றும்.
கர்நாடகா மாநிலம் உத்ரகன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தலம் கோகர்னா என்று அழைக்கப்படுகிறது. பெங்களுர் மற்றும் மங்களுரில் இருந்து பேருந்து மற்றும் புகைவண்டி மூலம் பயணிக்கலாம். Hubballiயில் இருந்து பேருந்து வசதியுள்ளது.
புராணகதை.
ஆத்மலிங்கத்தை (பிராணலிங்கம் (அ) அமிர்தலிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது) ராவணனின் தாயார் இலங்கைமாநகர் நலன் வேண்டி பூஜித்துவந்தார். இதனால் பொறாமையடைந்த இந்திரன் இந்த லிங்கத்தை கடலில் வீசினான். இதன்காரணமாக அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டு சிவனை பூஜிகலானார். தாயார் வருத்திகொண்டதை கான இயலாத மகன் ராவணன் கைலைக்கு சென்று கடும் தவம் (சிவதாண்டவம் ஸ்லோகம்) செய்து சிவனை உமையுடன் தரிசித்து, பிராணலிங்கத்தை பெற்றுக்கொண்டான். இதை இலங்கையில் பிரதிஷ்டை செய்ய விருப்பம் கொள்கையில், லிங்கத்தை இலங்கை கொண்டுசெல்லும் சமயம், அமிர்தலிங்கத்தை தலையில் சுமந்து செல்ல வேண்டும் என்றும், பூமியில் வைக்க கூடாது, அப்படி வைக்க நேரிட்டால், மீண்டும் எடுக்க முடியாது என்று ஈசன் கூறுகிறார். ராவணனின் அழிவில்லா அரசால், தீமை ஏற்படுமென்று தேவர்கள் விநாயகரை வேண்டி லிங்கபிரதிஷ்டையை தடுக்க வேண்டுகின்றனர்.
விநாயகர் ராவணனின் மடியில் நீர் சுரக்கசெய்து, மாடு மேய்க்கும் சிறுவனாக அவன் முன் தோன்றுகின்றார். ராவணன் இயற்கை உபாதை தாங்க முடியாமல், மாடு மேய்க்கும் சிறுவனை அணுகி சன்று நேரம் இந்த லிங்கத்தை வைத்துக்கொள்ளுமாறு பணிக்கிறார். ராவணன் வர காலதாமதம் ஏற்படுவதாலும், மாடுமேய்க்கும் சிறுவனால் அதிக நேரம் பளு தூக்கமுடியாமையாலும் கீழே வைத்து விடுகிறான், மாடுமேய்க்கும் சிறுவனாக வந்த விநாயகர். இதை கண்ட ராவணனுக்கு கோபம் ஏற்பட மாடு மேய்க்கும் சிறுவனை விரட்டி சென்று இருதியாக ஒரு பசுமாட்டை கையில் பிடிக்கிறான் ராவணன், அது பூமிக்குள் புதைந்து, ராவணனின் கையில் காதுமட்டுமே பிடிபடுகிறது. இதன்காரணமாக இந்த இடம் கோகர்ணா என்ற பெயர் பெற்றது. (கோ என்றால் பசு- கர்ணம் என்றால் -காது) .
கோவில் சிறப்பு.
1. சிவலிங்கம், ஒரு கொட்டை பாக்கு அளவில் ஆவுடையாரில் அடங்கியுள்ளது.
2.இத்தல வழக்கப்படி தொட்டு, (மனதில் உணர்ந்து) நீராட்டி அனைவரும் மலர் சூட்டலாம்.
3.உள்ளங்கை அளவு உள்ள பள்ளத்தின் நடுவில், கொட்டைபாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் உள்ளது.
4. 276 திருமுறைபாடல் (தேவாரப்பாடல்) பெற்ற திருதலத்தில் துளுவதேசத்தில் அமைந்துள்ள ஒரே தலம்.
5. நாவுக்கரசர், ஞானசம்மந்தரால் பாடப்பொற்ற தலம்.
6. அப்பர் அருளிய “அங்கமாலையில்” இந்த கோகர்ணகோவிலை சுற்றாத கால்களால் பயனென் என்று குறிப்பிடுகிறார்.
வரலாற்று குறிப்பு.
கி.பி.345 முதல் 365 வரை ஆட்சி செய்யத மயூரசர்மா என்ற அரசர் இந்த கோவிலின் முதல் கட்டுமானம் செய்தார்.
4ஆம் நூற்றாண்டில் காளிதாசர் எழுதிய “ரகுவம்சம்”; என்ற நூலில் இந்த கோவில் பற்றிய குறிப்புள்ளது.
7ஆம் நூற்றாண்டில் அப்பர் மற்றும் சம்மந்தரால் இந்த தலம் பாடப்பட்டுள்ளது.
1336 முதல் 1646 வரை விஜயநகரபேரரசால், கட்டுமானம் வளர்ச்சியுற்றது.
17ஆம் நூற்றாண்டில் சிவாஜி கோகரணத்தில், இராணுவத்தை கலைத்து, மகாபலேஷ்வரை வழிபாடு செய்யதார்.
1676ல் பிரையர் என்ற ஆங்கிலேயர், கோகர்ணநாதரைபற்றிய ஆன்மீக கட்டுரை ஒன்று எழுதினார்.
சமகால தலங்கள். (பஞ்ச ஈஸ்வரஸ்தலங்கள்)
1.கோகர்ணா 2. முருடேஷ்வர் 3. குணவந்தேஷ்வர் 4. தாரேஷ்வர் 5. ஷெஜ்ஜேஷ்வர் என்ற இந்த ஐந்து தலங்களும் சமகால தலங்களாகவும் கோகர்ணா ஆத்மலிங்கத்தின் பகுதிகளாகவும் கருதப்படுகிறது.
முருடேஷ்வர்.
கர்நாடகா மாநிலம் உத்தரகன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ள ஈஸ்வரதலம். மிகவும்; பழமைவாய்ந்த இந்த சிவஸ்தலம் தற்காலத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. ஆத்மலிங்கத்தின் அங்கமாக திகழும் இந்த ஆலயம் 2008-ல் கட்டப்பட்ட 20 நிலை கோபுரத்தாலும் மிக உயரமான சிவன் சிலையாலும் படகு சவாரி மற்றும் கடற்கரை சூழலாலும் தற்சமயம் சிறந்த சுற்றுலாதலமாக விளங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்துள்ளது.
குணவந்தேஷ்வர்
ஆத்மலிங்கத்தின் அங்கமான மற்றொரு சிவாலயம். தற்பொழுது கட்டுமானப்பணி நடந்துவருகிறது. சிவனையும் நந்திகேஸ்வரரையுமே தரிசனம் செய்ய முடிந்தது. அம்மன் சிலை எங்குள்ளது என்பதே தெரியவில்லை. தைமாதம் அம்பிகை தரிசனம் கிடைக்காதது எனக்கு வருத்தமளித்தது. கோவில் குளம் மிக ரம்யமாக இருந்தது. கானொளி பதிவிடுகிறேன்.
ஷெஜ்ஜேஸ்வர்
ஆத்மலிங்கத்தின் அங்மான மற்றொரு சிவன்கோவில். 3மணிநேரம் பயணம் செய்ய வேண்டும். புகழ்வாய்ந்த சுற்றுலா இடமான Goa அருகில் உள்ளது. 130கி.மீ க்கு குறைவாகதான் உள்ளது. இந்த ஸ்தலதரிசனம் எங்கள் அட்டவணையில் இல்லை. யாத்திரை ஒருங்கினைப்பாளர் மூலம் அறிந்த ஒரு புண்ணிய பூமி. இத்தல தரிசனம் கிடைக்க சிவபெருமானை இறைஞ்சுகிறேன்.
தாரேஷ்வர்
ஆத்மலிங்கத்தின் மற்றொரு அங்க சிவாலயம். அட்டவனையில் இருந்தும் எங்களால் தரிசிக்கமுடியாமல் போன ஷேத்ரம்.
கர்நாடகா மாநிலம், மங்களுர் மாவட்டம், ஊர் பெயர்-கத்ரி.
வரலாறு
பரசுராமருக்கு ஷத்ரியர்கள் மேல் ஏற்பட்ட கோபம் காரணமாக, கண்ணில் தென்பட்ட ஷத்ரியர்களை கொன்று குவித்தார். பாவம் தீர சிவனை வணங்கிய நேரத்தில் சிவபெருமான் நானே மஞ்சுநாதராக கத்ரியில் வீற்றிருக்கிறேன். அதனால் கத்ரி சென்று தவம் செய்யுமாறு பணித்தார். இன்றளவும் பரசுராமர் கத்ரி தலத்தில் தவம் மேற்கொள்கிறார் என்ற நம்பிக்கையுள்ளது.
கோவில் சிறப்பு
மூவலர் திருவுருவம் உலோகத்தினாலானது. தென்னிந்திய ஆலயத்தில் உலோக மூர்த்தி கொண்ட மிகவும் பழமையான ஆலையமாகும். அபிஷேக நீரானது விக்ரகத்தின் மேல் தேங்காமல் வழிந்தோடும் தன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளது. நீர்தேக்க தொட்டியாக ஏழு தீர்த்தங்கள் உள்ளன. நீர்ருற்றும் உள்ளது, இந்த நீரை கொண்டு பக்கதர்கள் அருகில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். மலை உச்சியில் பாண்டவர் குகை உள்ளது. பிரமீடு அமைப்புடன் மேற்கூறை அமைக்கப்பட்டடுள்ளது.
வரலாற்று சிறப்பு.
பத்தாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த கோவில், 14ஆம் நூற்றாண்டில் கருங்கல் கோவிலாக அமைக்கப்பட்டது. கி.பி. 968 ஆம் ஆண்டு குந்தவர்மபூபேந்திரன் என்ற மன்னனால் பஞ்சஉலோகத்தினால் ஆன திரிலோகேஷ்வர் விக்ரகம் உருவாக்கப்பட்டது. வாழைவனமாக விளங்கியதால் இந்த இடம் கதலி என்று அழைக்கப்பட்டு, தற்பொழுது கத்ரி என்று அழைக்கப்படுகிறது. விஜயநகரபேரரசர் காலத்தில் இந்த தலம் கதலி என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. இக்கோவிலில் உயரமான தீபஸ்தம்பம் உள்ளது. லட்சதீபோற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மைலாப்பூர் பெருமாள் கோவில்கள். (தரிசனநாள்-25.12.2023).
மாதவப்பெருமாள் கோவில்.
ஆதிகாலத்தில் மைலாப்பூர் மயூரபுரி என்று அழைக்கப்பட்டது. பிரம்மாண்ட புராணம் மற்றும் மயூரபுராணத்தில், 5 பகுதிகளில் (இடங்களில்) இந்த கோவில் பற்றிய சிறப்பு கூறப்பட்டுள்ளது.
காசியப்ப முனிவர் உட்பட பல முனிவர்கள், கலிதோஷம் நீங்க, வேண்டுதல் செய்ய, இடத்தை பரிந்துரைக்குமாறு ஸ்ரீமன்நாராயணனை வேண்டினர். அதற்கு நாராயணன் மயூரபுரி என்ற இடத்தில் உள்ள புஷ்கரணிக்கு அருகில் அமைந்துள்ள, ப்ருகு முனிவர் ஆசிரமத்தை பரிந்துரை செய்தார், என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமிர்தவல்லி தாயார் பிருகு முனிவருக்கு மகளாக இந்த இடத்தில் வளர்ந்துவந்த சமயத்தில், ஸ்ரீமன் நாராயணர் மாதவ மூர்த்தியாக வந்து, இந்த தலத்தில் தாயாரை காண்கிறார். பிருகு முனிவர் மாதவ பெருமாளை ஆதரித்து அமிர்தவல்லியை மணக்க வேண்டுகிறார். பங்குனி உத்திரத்திரத்தன்று மணமுடித்து கல்யாணபெருமாளாக காட்சி தருகிறார், மாதவபெருமாள். இந்த மயூரபுரி, பேயாழ்வார் அவதாரதலம் என்றும் இந்த இரண்டு மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆயுதங்களில் ஒன்றான “நந்தகம்” மே பேயாழ்வாரின் அம்சம் என்றும், “குருபரம்பராப்ரபாவம்” என்ற நூல், இந்த கோவில் கிணற்றில் தான் பேயாழ்வார் அவதரித்தார் என்று தெரிவிக்கிறது. இந்த நூலில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களின் சிறப்பும் கூறப்பட்டுள்ளது. தாயாரின் சன்னதியில் பேயாழ்வாரின் புடைப்பு சிற்பங்கள் அமைந்துள்ளன.
ஆதிகேசவபெருமாள் கோவில்.
இத்தல தாயார் மயூரவல்லி, 5நிலை ராஜகோபுரத்துடன், உள்ள இந்தகோவிலில், பெருமாள் நின்ற திருமேனியுடன், அருள்பாலிக்கிறார். இக்கோவிலுக்கு மிக அருகிலேயே இரண்டு பெருமாள் கோவில்கள் உள்ளன. இவை அனைத்தும் (நான்கு கோவில்களும்) பாலாலயம் செய்யப்பட்டிருந்தது. கேசவ பெருமாள் கோவிலுக்கும் மாதவ பெருமாள் கோவிலுக்கும் குறைந்தது 1 கி;மீ; தொலைவுவிருக்கும். இந்த இரண்டு கோவில்களின் புராணங்கள், ஒன்றுக்ஒன்று,அதிக தொடர்புடையதாக உள்ளன.