ஆறுமுகநாவலர்.
எங்களின் ஆறுநாள் இலங்கைபயணத்தில், இவரின் சிலையை நான்குநாட்கள் ஏதாவது ஒரு இடத்தில் பார்த்திருப்பேன். தமிழிலும், சைவசமயத்திலும் மிகுந்த ஆர்வம் உள்ளவர் என்பது தெரியும். மேலும் அறிய அவல் கொண்டேன். நேற்று வள்ளலார் பிறந்த தினம்., (5.10.23) ஆறுமுக நாவலர் வள்ளலார் மீது வழக்கு தொடுத்தார் என்பதும் நினைவிற்கு வந்து, காரணம் அறிய அவா ஏற்பட்டதே இந்த blog-கிற்கான காரணம்.
இளமைபருவம்.
இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் என்ற இடத்தில், கந்தசாமிபிள்ளை, சிவகாமி அம்மையாருக்கு 1822 ஆம் ஆண்டு மகனாக பிறந்தார். சுப்பிரமணிய உபாத்தியாயர், சரவணமுத்து புலவர், சேனாதிராச முதலியார் போன்றவர்களிடம் கல்வி கற்றார்.
சிறப்பு
உரைநடை வித்தகர், தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி, தமிழ்காவலர், சைவக்காவலர், என்று பல சிறப்பு பெயர் பெற்றவர். இராமசாமி, நடுவன், சைவன், இரக்கம் என்று பல புனைப்பெயர்களை கொண்டவர். சைவ சமயசாரம், சிவாலய தரிசன விதி, கிருத்துவமத கண்டன நூல்கள், மருட்பா (அருட்பாரவை எதிர்த்து எழுதியது) என்று பல நூல்கள் எழுதியுள்ளார்.
குறிக்கோள்.
தமிழ், சைவம் இரண்டையும் இரண்டு கண்களாக கொண்டு, இவைஇரண்டும் தழைக்க திருமணவாழ்வையை துறந்தார். யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் என்ற கல்லூரியில் ஆங்கிலம் படித்து, ஆசிரியராகவும் பணியாற்றினார். அவர் ஆங்கில புலமையை கண்டு பெர்சிவல் என்ற பாதரியார் Bable-ளை தமிழில் மொழிபெயர்க்குமாறு பணித்தார்.
அச்சு பதிப்பு.
1851-ல் முதலில் “திருமுருகாற்றுப்படை”, மற்றும், திருக்குறள்- “பரிமேல்அழகர் உரை” அவற்றை பதித்தவரும் (Printing) இவரே.
சமூகஉணர்வு.
1874 –ல் “இலங்கை பூமிசரித்திரம்”; என்ற இதழில், வறுமை, துன்பம், பாவம், இந்த மூன்றிக்கும் காரணம் மதுபழக்கம் என்ற, உயர்ந்த சிந்தனையை சமூகத்தில் உண்டு செய்து. குடிபழக்கம் குறைய தொண்டு செய்தவர்.
அங்கிகாரங்கள்.
சென்னை பல்கலைகழகத்தின் முதல் பட்டதாரி. 1971. ஆக்டோபர் 29 ஆம் தேதி இலங்கை அரசு இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, கூற்று- நற்குணத்தினால் சைவம் என்னும் பயிரை வளர்த்த எழிலன் . நீதியரசர்-சதாசிவஐயர் கூற்று- நாவலரை போன்று முன்னும் இன்னும் தமிழ் வித்வான் இல்லை. தமிழ், சைவம், ஒழுக்கம் மூன்றும் ஒருசேர விளைத்தவர்.
வள்ளலார் மீதான வழக்கு ஏன்?
தொழுவூர் வேலாயுதம், என்ற வள்ளலாரின் மாணவர், 1867 ஆம் ஆண்டு, ஒரு நூல் வெளியிட்டார். அதில்-
ஆசிரியர்-திவருட்பிரகாசவள்ளலார்.
நூற்பெயர்-திருவருட்பா.
நூல்பதிப்புபெயர்-திருமுறை.
என்று குறிப்பிட்டிருந்தார். ஆறுமுக நாவலருக்கு தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், உள்ளிட்ட 12 திருமுறைமுகள் மட்டுமே திருமுறை என்று, வள்ளலாரின் அருட்பாவை கருத்தை எதிர்த்தார். இதன்காரணமாகவே கடலூர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் பெரிதும் பேசப்பட்ட வழக்காகவும், வழக்கு நடந்தநேரம் மக்கள் குவிந்திருந்தனர் என்பதும் ஒரு பெரிய செய்தியானது.
தீர்ப்பு.
வழக்கிற்காக அருட்பிரகாசர் நீதிமற்றத்தில் நுழைந்ததும், நீதியரசரை தவிற ஏனைய மக்கள் அனைவரும் மரியாதை நிமித்தமாக எழுந்துநின்றனர், ஆறுமுகநாவலர்உட்பட. இதை அடிப்படையாககொண்டே, திருவருட்பா திருமுறையாக ஏற்றுக்கொள்ள உகந்ததானது.