அகற்றுதல் (தேசியகொடி அவமதிப்பு சட்டம் 1971).

 அகற்றுதல்.

இந்த வலைப்பதிவின் நோக்கம்.

பூங்காவில் நடைபயிற்சியின் போது தேசியக்கொடி குப்பை போன்று கிடந்தது. (அகற்றும் முறையறியாமல்). தேசியகொடி அவமதிப்பு சட்டம் பற்றி அறிந்துகொள்வோம். 

ஒரு பொருளை (கழிவு, குப்பை) வேண்டாம் என்று அல்லது தேவை முடிந்தது என்று தூக்கிபோடுதல், பிறருக்கு கொடுத்தல், இடம் மாற்றுதல் (பிரதான இடத்தை விட்டு மறைவான இடம் அல்லது வீட்டின் புழக்கடை பகுதியில் போடுதல் இவற்றை நாம் அகற்றுதல் என்று சொல்லுவோம்.

ஓவ்வொரு பொருளை அகற்றுவதற்க்கும் ஒரு முறை உள்ளது. குறிப்பாக சில பொருளை அகற்றுவதற்க்கு சட்டம், மற்றும் வரையரை செய்யப்பட்ட வழிமுறைகள் உள்ளன.  உதாரணமாக மருத்துவகழிவு, இதற்கு, சட்டத்திற்கு உடபட்ட, வரையறை செய்யப்பட்ட வழிமுறை உள்ளது. மேலும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பயன்படுத்தும் டயாப்பர் (Diaper) கூட அகற்வதற்க்கு வழிமுறைகள் உள்ளது.

 புகைப்படம். (தேசியக்கொடி குப்பை போன்று)


தேசியகொடி பற்றிய அறியதகவல்கள்.

1. வடிவமைத்தவர் - சுரையாதாப்ஜி அவர்கள்.

2.தேசியகொடி நமது நாட்டின் போர்கொடியாகவும் விளங்குகிறது.

3.வண்ணம், பிரகாசம்,  அகலம், நீளம், துணியின் அடர்த்தி, (காதி என்ற கைத்தறி துணியினால் மட்டுமே இருக்க வேண்டும);. இவையனைதிற்க்கும் ஒரு கட்டுப்பாடுள்ளது.

4. சர்வதேச  முறைக்கு ஏற்றார் போல் 1964 முதல் மெட்ரிக் அளவு முறையாக மாற்றப்பட்டது. 

5. 12க்கு குறைவான நெசவாளர்களே இந்த பணியை செய்கின்றனர்.

தேசியகொடி அவமதிப்பு சட்டம் 1971, இரண்டாவது பிரிவின்படி.

1. தேசியசின்னங்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். 


2. எரிப்பது சேதப்படுத்துவது, இழிவுபடுத்துவது, இவ்வாறான செயல்களில் ஈடுபடுவர்களுக்கு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். (3ஆண்டுகள் சிறைதண்டனை, அபராதம், மற்று கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

3. அகற்றும் (அகற்றுதல்- இதற்குதான் மேலே உள்ள விளக்கம்.) போது கண்ணியம், மரியாதையுடன் செயல்பட வேண்டும்.   


ஸ்ரீபெரம்புதுர். (ராமானுஜர் ஜென்மபூமி)

 ஸ்ரீபெரம்புதுர். (ராமானுஜர் ஜென்மபூமி) தரிசனநாள் - 4.3.2023.


தலவரலாறு.

கைலாய பூதகணங்கள் சிவபெருமானின் சாபத்திற்க்கு ஆளாகியதால், விமோசனம் பெற மகாவிஷ்ணுவை வேண்டினர். அனந்தன் என்ற சர்பத்தை (பாம்பு) கொண்டு தீர்த்தம் உண்டாக்கி, அந்த கரையில் மகாவிஷ்ணு காட்சி கொடுத்து விமோசனம் கொடுத்தார். நன்றி கடனாக பூதகணங்கள் எழுப்பிய கோவிலே இந்த ஆதிகேசவ பெருமாள் கோவில்;. பூதகணங்கள் எழுப்பிய கோவில் ஆதலால் இந்த ஊர் பூதபுரி (புராணபெயர்) என்று அழைக்கப்பட்டது.


ராமானுஜர்.

கேசவசோமயாஜி, காந்திமதி- தம்பதியருக்கு 1017 ஆம் ஆண்டு; ராமானுஜர் மகனாக அவதரித்தார்.

ராமரனுஜரின்  மாமா “பெரியதிருமலைநம்பி” இவருக்கு “இளையாழ்வார்” என்று பெயர் சூட்டினார். இலக்குவணன் போன்றே இருந்தமையால் இந்த பெயர் சூட்டினார்.

அனுஜன் என்றால் இளையவர் என்று பொருள். ராமனுக்கு இளையவன் - “ராமானுஜன்”.

“யதிராஜர்”; என்ற பெயரும் உண்டு. யதி- என்றால் சன்யாசி ராஜர் என்றால் தலமைப்பண்பு என்று பொருள். (இந்த இடத்தில் தாயாரின் பெயரை சொல்வதே சிறப்பு) இக்கோவில் தாயார் “யதிராஜநாதவல்லி” 


ராமானுஜர் சன்னதி சிறப்பு செய்திகள்.

தீபாவளி முதல் தை மாதம் ஹஸ்த நட்சத்திரம் வரை, வெண்ணீரில் அபிஷேகம் செய்கின்றனர்.

குளிர்காலங்களில் இளையாழ்வாருக்கு, கோட், போர்த்த கம்பளி, உடல் முழுவதும் வெல்வெட் அங்கி, உல்லன்சால்வை இவற்றைஅணிவிக்கின்றனர்.


பெருமாள் சன்னதி சிறப்பு.

ஆடி மாதம் பூரம் முதல் ஆவணி மாதம் பூரம் வரையிலும். மார்கழி மாதத்திலும், ஆண்டாள் நாச்சியார் ஆதிகேசவபெருமாள் சன்னதிலேயே எழுந்தருளுகிறார்.


நித்திய சொர்கவாசல் தலம்.

ராமானுஜர் அவதரித்த தலம் ஆதலால் நித்திய சொர்கவாசல் தலம் என்று அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று ஆதிகேசவபெருமாளும், ராமானுஜரும் “பூதகால்மடண்டபத்தில்”“எழுந்தருளுவர். அன்று மணிக்கதவு (சிறியகதவு) திறப்பர்.

சித்திரை திருவிழா.

கோவிலுக்கு எதிரே உள்ள மண்டபத்தில் சித்திரைதிருவிழா கொண்டாடப்படுகிறது.

ராமானுஜர் அவதரித்த நட்சத்திரம் அன்று ஊஞ்சலிட்டு, தாலாட்டி, சங்கில் பால் தரும் வைபவம் நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருமாலிஞ்சோலை, உள்பட 36 திவ்யதேசங்களில் இருந்து பரிவட்ட மரியாதை செய்யப்படுகிறது.

வெண்ணிறயுடை திருநாள் - கூரத்தாழ்வார் இவரின் காவியுடைஅணிந்து சென்று (ராமானுஜராக வேடம் பூண்டு)  மன்னின் தண்டனையை ஏற்கிறார். (தண்டனை-இரண்டு கண்ணும் அபகரித்தல்). கூரத்தாழ்வாரின் நினைவாக அன்றைய தினம் ராமானுஜருக்கு வெண்ணிர ஆடை அணிவிக்கப்படுகிறது.

செல்லபிள்ளை மடியில் அமர்ந்து திருவீதியுலா.

திருநாராயணபுரம் பெருமானை மன்னன் மகள் விருப்பத்திற்காக டெல்லிக்கு எடுத்துசெல்கின்றனர். பெருமாளை மீட்க ராமானுஜர் டெல்லி சென்ற போது, ராமானுஜர் மடியில் சிலையாகவே வந்து பெருமான் அமர்கிறார். அன்று முதல் செல்ல பிள்ளை பெருமாள் என்றே அழைக்கப்படுகிறார். அந்த நிகழ்ச்சியின் வெளிப்பாடே இந்த செல்லப்பிள்ளை திருவீதியுலா.


120 ஆண்டுகள் வாழ்ந்த ராமானுஜர், அடுத்தப்பிறவியில், மணவாள மாமுனியாக அவதரிக்கிறார். கோவிலின் இடதுபுறத்தில் மணவாளமாமுனிக்கு தனி கோவில் எழுப்பபட்டுள்ளது.


நூற்றாண்டுவிழா அர்பணிப்பு.

 நூற்றாண்டுவிழா அர்பணிப்பு. 


நூற்றாண்டு விழா காணும் ஒரு மாமனிதர் பற்றியது இந்த வலைபதிவு. இந்த மாமனிதர் என்னுடைய மாமனார் என்பதே, இதற்கான, அறிமுகம்.

மரியாதைக்கு உதாரணம்.

என்னுடைய மாமனாரும், என்தந்தையும் தூரத்து உறவினர்கள். என்னுடைய அப்பா அவரின் பள்ளி இறுதி படிப்பை முடித்துவிட்டு, தபால் தந்தி துறையில் உயர் அதிகாரியாக பணிபுரிந்த, எனது மாமனாருக்கு உதவியாளராக (அவரது வீட்டிலயே) பணிபுரிந்து வந்தார். என்தந்தை, அதிகாரி திரு. கணேசனை விட 18 ஆண்டுகள் சிறியவர். இதன் காரணமாக, எனது தந்தையை பெயர் சொல்லியே அழைப்பார். இவரின் மூன்றாவது மகன், திரு. ராமநாதனுக்கு என்னை, மணம் முடித்தவுடன், சம்மந்திக்கு உரிய மரியாதையுடன், உறவை தொடர்ந்தார். இந்த மரியாதை உதட்டில் இருந்து வருவதல்ல, உள்ளத்திலும் உள்ளது என்பதை நான் அவர் செயல்கள் மூலம் அறிந்திருந்தேன். 

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், கணிதம், ஜோதிடம், என்று பல துறையிலும் ஆளுமைபெற்றிருந்தார். நேரமேலாண்மை, பக்தி, ஒழுங்கு, உற்சாகம் இவரின் சிறப்பு இயல்புகள்.

 நேரமேலாண்மை.

அதிகாலை கண்விழிப்பது, இறைப்பணி, அலுவலகப்பணி, சுயவேலை, வீட்டுவேலை, உணவருந்துவது, படுக்கைக்கு, செல்வது இவையனைத்திலும் 90 சதவிகிதம் ஒழுங்குமுறையை கடைபிடித்துவந்தார்.

பக்தி.

மதசடங்கு செய்வது (சந்தியாவந்தனம்) ,(மூன்று காலமும் ) நாள் மட்டும் அல்லாது காலம் தவறாமலும் செய்து வந்தார்.

80 வயது வரை பௌர்ணமி தினத்தன்று, அவருடைய அலுவல்களை முடித்துவிட்டு வந்து, நீராடி சத்தயநாராயணா பூஜை செய்ய தவறியதில்லை. (இது ஒரு உதாரணம்).

ஒழுங்கு.

செய்திதாள் வாசிப்பது, அவரின் ஆடைகளை துவைத்துகொள்வது, நல்ல நாள்பார்க, கல்வியில் சந்தேகம் இதற்காக யார் இவரை அனுகினாலும், அவர் வேலையை ஒதுக்கிவிட்டு உடனே செய்வார்.

உற்சாகம்.

தீபாவளி போன்று கொண்டாட்டதிலும், கூட்டத்திற்க்கு அஞ்சாமல், புது துண்டு, வேட்டி, சட்டை வாங்குவதில், உற்சாகம் காட்டுவார்.

பூஜா காலங்களில் இறைவனுக்கு, பூ, பழம், தேங்காய் வாங்குவதில் சலிக்கமாட்டரர். (உதாரணம்- விநாயகர் சதுர்த்திக்கு விளாம்பழம் வாங்குவது- ஒரு பழம் கூட சோடை போகாது).

முத்தாய்ப்பு.

பல கட்டுரைகளும் எழுதியுள்ளார். நான் அறிந்தது, “ஒளவையாரின், ஆத்திச்சூடியில்”, “ஏற்பது இகழ்ச்சி” “ஐயம் இட்டு உண்” என்ற இரண்டுவாசகமும் முரன்பாடாக  உள்ளது என்று அவரின் கருத்தை வெளியிட்டு, பிற தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள் , மற்றும் பேராசிரியர்களின் கருத்தை கேட்க, காகிதத்தில் அச்சடித்து கொடுத்தார். என்னுடைய தந்தையும் பிற தழிழ் ஆர்வலர்களிடமும் இதை கொடுத்தது என்னால் மறக்கமுடியாத சம்பவம் ஆகும். நானும் இதை படித்து என்னுடை கல்லூரி பேராசிரியர்களிடம் காண்பித்து மகிழ்திருக்கிறேன்.  

80 வயதில் 100 பக்கங்கள் கொண்ட சுயசரிதை புத்தகம் (38 வருட அலுவலகப்பணி அனுபவம் பற்றியது) ஆங்கிலத்தில் வெளியிட்டது. 

சைவ சித்தாந்தம் பட்டைய படிப்பும், இளங்கலை வணிகவியலும் தொலைதூர கல்வியில் படித்தது.

22 ஆண்டுகள் நான் இவர்களுடன் சேர்ந்து வாழ்ந்ததில் பெருமையும், சில நற்பண்புகள் கற்றதை மகிழ்சியுடன் நினைவு கூறுகிறேன்.


மக்கள்தொகை – ஒரு பார்வை

 மக்கள்தொகை – ஒரு பார்வை


2027 ஆம் ஆண்டு உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உருவாகலாம், என்ற ஐ.நா. அமைப்பின் தகவலை அடிப்படையாக கொண்டதே இந்த வலைப் பதிவு.

ஒரு சமூகத்தின் உயர்வு, தாழ்வு, அனைத்துவகையான பிரச்சனைகளிலும், மக்கள்தொகை என்பது பெரும்பங்கை வகிக்கிறது. ஓவ்வொரு குடிமகனும் இதை சிந்திருத்தல் நாட்டு வளர்ச்சி,  மட்டுமல்லாது, சுயவளச்சிக்கும் இன்றியமையாதது என்பது நன்கு புரியும்.

மக்கள்தொகை பற்றிய கூடுதல் தகவல்கள்.

1. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கு எடுக்கப்படும்  என்பது அனைவரும் அறிந்ததே. 

2. உள்துறை அமைச்சகம் (Ministry of Internal Offers) இந்த பணியை செய்கிறது.

3. 1980 - கணக்கெடுப்பு முதல் பல புதுமுறைகள் பயன்படுத்தப்பட்டன.

4. 1981 - முதல் பலவகையான கூடுதல் முறைகள் செயல்படுத்தப்பட்டன.

5. தேசியவரைபடங்களுடன், கிராம மற்றும் நகர வரைபடங்கள் உள்ளடக்கிய வீட்டின் எண் மட்டுமல்லாமல், வீடு இல்லாதலர்களின்( வீடு இல்லாமல் பொது இடத்தில் வசிப்பவர்களின); விபரங்களுடன் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறுகிறது. 

6. பாலினம், மொழி, அறிந்த பிற மொழிகள், சாதி, மதம், வயது, கல்வி தகுதி, தொழில், வருமானம், உறவுமுறை, சாதி, பிறந்த இடம் (நாடு உள்பட), வசிக்கும் ஊர், குடிபெயர்ந்த இடம், குடிபெயர்ச்சிக்கான காரணம், பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, உயிருடன் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, முன்பு வசித்த ஊர், வசித்த காலம் என்று மிகவும் ஆழமான புள்ளி விபரங்கள் கணெக்கெடுக்கப்படுகிறது.

மக்கள்தொகை கணிப்பின் வரலாறு.

1. 5000 ஆண்டுகளுக்கு முன்பே சுமேரியகள் வரி விதப்பிற்காக மக்கள் தொகை கணக்கெடுத்தனர். (சுமேரியர்களின் நாகரீகம் பற்றி நாம் நன்கு அறிந்திருப்போம்).

2. இந்தியாவில் மன்னர்கள் ஆட்சி காலத்தில், (கி.மு. 270 ஆம் ஆண்டில்  இருந்து, கி;.பி. 23 நூற்றாண்டுவரை) மக்கள்தொகை கணிக்கப்பட்டது.

3. கௌடில்யரின் அர்தசாஸ்தரத்தில், வரி நோக்கத்திற்காக புள்ளி விபரம் சேகரிக்கப்பட்டது என்பது அறியப்படுகிறது.

4. 16ஆம் நூற்றாண்டில் அக்பர் ஆட்சி காலத்தில் புள்ளி விபரம் கணக்கெடுக்கப்பட்டது.

5. 17,18 ஆம் நூற்றாண்டுகளில் முழுவடிவம் பெற்றது மக்கள்தொகை கணெக்கெடுப்பு.

மக்கள்தொகை அதிகரிக்க காரணமாக உள்ள காரணிகள் (உதாரணம்)


___________________________________________________________________________________உலகிலேயே நம் நாட்டில் தான் முதல் முதலாக 1952 ஆம் ஆண்டு, “தேசியகுடும்பகட்டுப்பாடு” என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.”

ூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூூ

சாதி, மதம், பொருளாதரம், குடும்பதொழில், நாகரீக வளர்ச்சி  குறைவு, கல்லியறிவுயில்லாமை, திருமணவயது, என்று நீண்டுகொண்டே செல்கிறது.

மால்தஸ் கோட்பாடு. (Malthusian Theory)

உணவு உற்பத்தியானது கூட்டல் விகிதத்திலும்,( 2.4.6.8…) மக்கள்தொகை பெருக்கமானது பெருக்கல் விகிதத்திலும் (2,4,16,32….) அதிகரிக்கிறது. அதனால் மக்கள்தொகை பெருக்கம் என்பது சமுகத்தின் பெரும் பிரச்சனையாகும் என்பதே இவர் கோட்பாடு.

முந்தைய கருத்துக்கள். (மால்தஸ் கோட்பாடுக்கு முன்பு)

1. மக்கட்பெருக்கம் அரசருடைய வெற்றி – பைபிள்.

2. மக்கட்தொகை ராணுவ முன்னேற்றத்திற்க்கு அவசியம் - ஹேரோடோடஸ் (Herodotus)

3. மக்கள் தொகை பெருக்கம் நாட்டிற்க்கு ஆற்றலை அளிக்க கூடிய சொத்து.- மெக்தியாவாலே.(Machiavelle)

4. மக்கட்தொகை நாட்டின் ராணுவத்திற்க்கும், ஆற்றல், மற்றும் வளர்ச்சிக்கும் உதவுகிறது – முசொலிக்.( 

5. சிறுவயது திருமணம், 10 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு வரிவிலக்கு – பிரான்சின் கோல்பார்ட்.

பிளாட்டோ, அரிஸ்டாட்டில் - போன்றோர் மக்கள்தொகை பெருக்கம் வாழ்க்கை தரம் குறையும் என்று எச்சரித்தினர்.

நம்நாட்டின் முயற்ச்சி.

1 .குடும்பகட்டுப்பாட்டை மக்களிடையே கொண்டு சென்றது.

2. விளம்பரம் செய்து, சில வாசகங்கள் முலம் மக்களை விழிப்படைய செய்தது. “நாம் இருவர் நமக்கிருவர்” என்ற வாசகத்தை சில ஆண்டுகளுக்கு பிறகு “ஒன்று பெற்றால் ஒளிமயம்” என்று மாற்றியது. கட்டுக்குள் வராத நிலையில் “ஒன்று பெற்றால் ஒளிமயம்” அதற்க்கு மேல் “அல்லல்மயம்” என்று அச்சம் ஏற்படும் வகையில் அச்சுறுத்தியது.

3. அரசு அலுவலகங்களில், “குடும்பக்கட்டுப்பாடு” செய்து கொண்டவர்களுக்கு ஊக்கத்தொகை.

4.அரசுபள்ளியில் ஒற்றை பெண்குழந்தைகளுக்கு பல சிறப்பு அம்ச திட்டங்கள்.

5. அரசு மருத்துவமனையில் குடும்பக்கட்டுபாடு செய்து கொண்டவர்களுக்கு சில பரிசுகளும் ஊக்கத்தொகையும்.

இவ்வாறு பல, முயற்சிகள் மேற்கொண்டும் நாம் அல்லல் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

2035 ஆம் ஆண்டுக்கு பிறகு மக்கள் தொகை பெருக்கம் குறைய வாய்பிருப்பதாக இதே ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது. நாம் இந்த மக்கள்தொகை பெருக்கம் என்ற துயரில் இருந்து விடுபட முயற்ச்சிப்போம்.

தகவல்கள திரட்டு – 1. அண்ணாமலைப் பல்கலைக்கழகம். தொலைதூரகல்விஇயக்கம் – பாடபுத்தகங்கள். மற்றும் விக்கிபீடியா.



திருமால்பூர் (தேவாரபாடல் பெற்ற தலம்)

 திருமால்பூர் (தேவாரபாடல் பெற்ற தலம்) – தரிசனநாள்-4.3.2023.

அஞ்சனாட்சி உடனுறை மணிகண்டீஸ்வரர்;.

அமைவிடம். 

சென்னையில் இருந்து புறப்படும் மின்சாரரயில்களில் சென்றடையும் ரயில் நிலையத்தில் ஒன்றாக திருமால்பூர் அமைந்துள்ளது. தாம்பரத்தில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது. ராணிபேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் கோவிலை கொண்டஊராகும்.

தலபுராணம்.

குபன் என்னும் அசுரனுக்காக, திருமால் “ததீசி” முனிவருடன் சண்டையிட்டு சக்ராயுதத்தை இழந்தார். தினம் 1000 தாமரை மலர் கொண்டு சிவனை பூசித்த வேலையில் ஒருநாள் ஒரு மலர் குறைந்த காரணத்திற்காக, திருமால் அவரின் கண்னை எடுத்து பூஜிதார். சிவபெருமான் பெருமாளுக்கு “


செந்தாமரைகண்ணன்”; என்ற பெயரையும் சக்ராயுதத்தையும் வழங்கி அருள் செய்தார். 

கோவில் சிறப்பு.

1. 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த தலம்.

2.திருஞானசம்மந்ததர், திருநாவுக்கரசர் இவர்களால் பாடல் பெற்ற தலம்.

3. நினைத்தாலே முக்தி கிடைக்கும் தலம்.

4.பெருமாள் சக்ராயுதத்தை பெற்றமையால், ஹரிசக்கரம் என்ற பெயரையும் இந்த ஊர் பெற்றிருக்கிறது.

5.பராந்தக சோழனால் கட்டப்பட்ட ஆலயம்.

மாசி தேரோட்டம் முடிந்து நிற்க்கும் தேர்.


சிவனை வணங்கும் திருமால்.


கொடிமரம் மற்றும் பலிபீடம்.


அஞ்சனாட்சி அம்மன் சன்னதி.


கோவில் கோபுரம்.



உதயாபூர் -குளிர்கால அனுபவம்.

 உதயாபூர் -குளிர்கால அனுபவம். ( 12.12.2022 to 12.1.2023)

50 ஆண்டுகளுக்கு மேல், தமிழ்நாட்டிலேயே  பிறந்து வளர்ந்த எனக்கு, கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் 30 நாட்கள் குளிர் கால வாழ்கை மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவில் பல வட மாநிலங்களில் சுற்றுலாவாக சென்று பனியையும் குளிரையும் பார்த்த எனக்கு தினசரி வாழ்கை குளிரில் வாழ்ந்தது, உற்சாகத்தை ஏற்படுத்தியது.  10 நாட்களுக்கு மேல் நாங்கள் கடும் குளிரை சந்தித்தோம். 

பாத்திரம் துலக்குவது, துணிதுவைப்பது, ஏன் குளிப்பது கூட சாதனையாக தோன்றியது. உடல் மேலே விடும் சுடு நீர் பாதத்தை தொடுகையில் குளிர்ந்து விடுகிறது.

நானும் என் கணவரும் 30 நாட்களும் “சூரிய சோறு” ( நிலா சோறு போன்று) சாப்பிட்டோம். 

வீட்டு வேலைகளை முடித்து விட்டு நான் காலை 9.30 மணிக்குதான் என்னுடைய நடை பயிற்ச்சியை துவங்குவேன். கம்பளி சட்டை போட்டுக்கொண்டு அதன் மேல் சால்வை போர்த்திக்கொண்டு வெய்யிலில் நடப்பது சொர்கத்தில் உலாவருவது போன்று இருக்கும்.

“நிழலின் அருமை வெய்யலில் தெரியும்” என்று நாம் சொல்வோம். குளிரின் சுகத்தை நான் வெய்யிலில் ரசித்தேன்.


“ரணக்பூர்” என்ற இடத்தில் உள்ள சமண  கோவிலுக்கு குளிர் காரணமாக செல்ல முடியாதது மட்டுமே எனது மன வருத்தம்.  

நடைபயிற்ச்சியின் போது நான் எடுத்த புகைப்படம் மற்றும் கானொளிகள்.

சமணர் கோவில்.



கோவர்தணசாகர் லேக்.


நான் தினமும் வழிபட்ட ஓம்காரேஸ்வரர் மந்திர்(கோவில்).



வீட்டு சுற்று சுவரில் உதய்பூர் மக்கள் வரைந்திருந்த படங்கள்.


நம்மூர் காகம் போன்று எங்கும் காணப்பட்ட பறவை. ஆனால் காகம் அந்த ஊரில் இல்லை.


இரண்டு கம்பளி சட்டையே அணிந்து கொண்டிருந்ததால்;, நான் தனியா பேரம் பேசி (எனக்கு ஹிந்தி தெரியாது) வாங்கிய கம்பளி ஆடை. 




உதய்பூர் பிரதானசுற்றுலா இடங்களை பற்றி ஒன்பது வலை பதிவு வெளியிட்டுள்ளேன்.  பதிவு முகவரி. aasanam.blogspot.com






சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...