தனுஷாதாம் (ராமாயணதலங்கள்-2).
தனுஷாதாம், ராமர், சீதைக்கு சுயம்வரம் நடந்த இடமாகும். இந்த இடம் ஜனக்பூரில் இருந்து 10.கி.மீ. தொலைவில் தனுஷ் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய ஊர். சீதாதேவிக்கு இங்குதான் திருமண சுயம்வரம் நடைபெற்றது. (சுயம்வரம் - ராஜகுல பெண்கள் கணவரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு) சிவதனுஷ் முறித்த இடம் ஆதலால் தனுஷாதாம் என்ற பெயர் பெற்றது. (தனுஷ் -வில் என்று பொருள்.) சீதையின் தந்தை ஜனகர், மகள் திருமணததிற்கு (சிவதனுஷ்) “சிவவில்” என்ற பெயரை கொண்ட விலை நாண் ஏற்றுபவர்கே தனது மகளை திருமணம் செய்து கொடுப்பேன் என்று திருமண கட்டளையாக கூறுகிறார். மிகவும் பெரியதும் சக்திவாய்ந்ததுமான இந்த வில்லை கையால் எடுப்பதே மிகவும் கடினமாகும். சீதை, சிறுமியாக இருந்தகாலத்தில், இந்த வில் வைத்திருந்த பெட்டிக்கருகில், விழுந்த பந்தை, மிக எளிதாக (வில் கொண்ட பெட்டியை) நகர்தி விட்டு, எடுத்து சென்றார் என்று, ராமாயண வரலாறு கூறுகிறது . இந்த வல்லமை கொண்ட பெண்னிற்க்கு வல்லமை கொண்டவனே மணமகனாக வரவேண்டும் என்று இந்த நிபந்தனை விதிக்கிறார் ஜனகர். இந்த வில்லை ராமர் மிக எளிதாக எடுத்து முறித்து விடுகிறார் என்று, ராமாயணகாவியம் கூறுகிறது.
முறிந்த வில்லின் நிலை.
நாண் ஏற்றும் முன்பே இந்த வில் 3ன்று துண்டுகளாக உடைகிறது. மேல் பாகம் ஜனக்பூரில் விழுந்தது. நடுப்பகுதி இந்த இடத்திலேயே விழுந்தது. விழுந்த இடம் இன்றளவும் அனைவராலும் வணங்கப்படுகிறது. அடிப்பகுதி ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் விழுந்தது என்று, ராமாயண காவியத்தின் மூலமாகவும், தொல்லியல் துறையும் ஆய்வு மூலமாகவும் அறிகிறோம்.
No comments:
Post a Comment