நேபாளம்- முக்திநாத். (32 Days Tour sep 2022)
வழித்தடம்.
காத்மாண்டுவிலிருந்து போக்ரா என்ற இடத்திற்க்கு செல்ல வேண்டும். சாலைவழி பயணம் குறைந்தது எட்டு மணிநேரமாகும். போக்ரா விமானநிலையத்தில் இருந்து ஜாம்சம், என்ற இடத்திற்க்கு சிறிய விமானத்தில் 30 நிமிடம், பயணிக்க வேண்டும். அல்லது தரை வழி மார்கம் என்றால் 10 மணிநேரத்திற்க்கு குறையாமல் கண்டகி நதி கரையோரமாகவே பயணிக்க வேண்டும். ஜாம்சம்னில் இருந்து, 17 கி.மீ. ஜீப்பில் பயணித்து, கோவில் அருகில் செல்ல வேண்டும். பின்பு 2.5.கி.மீ நடைபயணம்(அ), குதிரை,(அ) டோலியில் கோவில் சன்னதிக்கு (3170 மீட்டர் உயரத்தில் உள்ளது முக்திநாத்) செல்லலாம். நாங்கள் 6.9.2022 அன்று ஏகாதசி புண்ணிய காலத்தில், இயற்கையின் நல் ஒத்துழைப்புடன் கிருஷ்ணரை வழிபட்டு பக்தியில் மகிழ்ந்தோம். 7ஆம் தேதி காலை மோசமான வானிலை காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு நாங்கள் பேருந்தில் போக்ரா திரும்பினோம். நாங்கள் நடந்துசென்று வழிபட்டோம். நடப்பது கடினமாக இல்லை. மிகவும் முடியாதரர்கள் குதிரை அல்லது டோலி பயன்படுத்தலாம்.
முக்திநாத் சிறப்பு.
108 திவ்யதேசத்தில் ஒன்று. திருமங்கையாழ்வார், பெரியாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. பிரபந்தத்தில் இந்த ஷேத்ரத்தை சாளக்கிராமம் என்று குறிப்பிட்டுள்ளனர். பெருமாள் சிலாரூபமாக (சுயம்புவாக) இருந்து அருள்பாலிக்கும் இடங்களில் முக்திநாத்தும் ஒன்று என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. ( ஏனனய இடங்கள் ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, நைமிசாரண்யம், வானமாமலை பெருமாள்(நாங்குநேரி), புஷ்கரம், பத்ரிநாத்.) தவளகிரி,அன்னபூர்ணா சிகரத்தில் இருந்து இந்த காளிகண்டகி நதி வருகிறது. கோமுகத்தில்(பசுமுகம்) இருந்து 108 தீர்தங்கள் வருகின்றன.
ஷேத்ரவரலாறு.
கண்டகி என்ற பெண் சிறந்த விஷ்ணுபக்தை மற்றும் பேரழகி என்றும் தெரிகிறது. இந்த அழகியிடம் பல ஆண்களும் செல்கின்றனர் என்றும், ஒருநாள் கிழவன்வடிவத்தில் சென்று இந்த பக்தையை மிகவும் சோதனைக்கு உள்ளாக்கினார் விஷ்ணு என்றும், இந்த அம்மையாரின் பொறுமை மற்றும் அர்பணிப்பை கண்டு இந்த பெண்ணிற்க்கு மகா விஷ்ணுவாக காட்சி கொடுக்கிறார். இந்த நங்கை இறைவனை தனது மகனாக ஏற்றுக்கொண்டு, உலகம் உள்ளவரை காளிகண்டகி என்ற நதியாகி மக்களுக்கு உதவியும், இதில் நீராடுபவர்களுக்கு பாவவிமோசனமும் தருகிறார். விஷ்ணுபகவான் சாளகிராமம் என்ற கல் வடிவில் கண்டகி என்ற பக்தைக்கு மகனாக பிறப்பதாக வரலாறு கூறுகிறது. சாளக்கிராமம் என்ற இந்தக்கல் மகாவிஷ்ணுவின் வடிவம் என்று பூலோக மக்களால் வணங்கப்படுகிறது. Jamson Airport MukNath
Gandaki River.
No comments:
Post a Comment