நேபாளம்- பசுபதிநாதர் கோவில், ஜல்நாராயன் கோவில், குகேஷ்வரி சக்திபீடம்.
எங்களின் ஆன்மீக யாத்திரையின் தொடக்கமாக, நேபாள நாட்டிற்கு சென்றோம். சென்னையில் இருந்து உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் என்ற இடத்திற்கு சென்று, அங்கிருந்து 14 மணி நேரம் பேருந்தில் பயணித்து நேபாளத்தின் தலைநகரமான காட்மாண்டு சென்றடைந்தோம்.
கோரக்பூர்.
கோரக்பூரில் பார்ப்பதற்க்கு பல புகழ்பெற்ற இடங்கள் இருந்தாலும். கோரக்நாதர் என்ற சிவாலயத்திற்க்கு மட்டுமே சென்றோம். ராப்தி என்ற நதிக்கரையில் உள்ளது இந்த ஊர். புகழ் பெற்ற கீதா அச்சகம், 1922 ஆம் ஆண்டில் மகாத்மாகாந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் நடை பெற்ற சௌரி, சௌரா சம்பவத்தில் ஏற்பட்ட மிக பெரிய வன்முறை காரணமாக இந்த இயக்கத்தையே மகாத்தா திரும்ப பெற்றார். இந்த சௌரி சௌரா என்ற இடம் இங்குதான் அமைந்துள்ளது. தீன் தயாள் உபாதயாயா, மதன் மோகன் மாளவியா, டாக்டர் ஏ.பி.ஜே. அபதுல்கலாம், இவர்களின் பெயரில் பல்கலைகழகங்களும் அமைந்துள்ள இடம்.
உலகத்திலேயே மிக நீண்ட நடைமேடை கொண்ட ரயில் நிலையமாக கோரக்பூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது.
பசுபதிநாதர் கோவில்.
நேபாள நாட்டின் தலைநகரமான காத்மாண்டுவில், பல புராதன கட்டிடங்கள், 2015 ஏப்ரல் 25 அன்று (Because of Earthquake) இடிந்து விழுந்தன. இந்த கோவில் இமயமலைதொடரின் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளது. பாக்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள உலகளவில் பகழ் பெற்ற சிவன் கோவிலாகும். “இந்துமதநாடாக” இருந்தவரை இந்த பசுபதிநாதர் தேசிய கடவுளாக இருந்தார்.
வரலாறு.
இமயமலையில் இருந்து சிவபெருமான் இங்குவந்து தங்கினார் என்றும், சிவபெருமான் மான் வடிவில் இருந்த போது, மான்கொம்பு கீழேவிழுந்து லிங்க வடிவம் பெற்றது, அதன் மேல் மாடு பால் சுரந்ததை வைத்து இக்கோவில் உருவானது என்று பல செய்திகள் உள்ளன. கோவில் உருவான காலம் யாராலும் கணக்கிட முடியவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக உள்ளது. ஆதிசங்கரர், மற்றும் மல்லா மன்னர்களால் இந்த கோவில் நன்கு விரிவடைந்து, புகழ் பெற்றது. கேதார்நாத் தொடர்புடனும் ஒரு வரலாறு உள்ளது. இதை கேதார்நாத் தரிசன, blog- உடன் பார்போம்.
குகேஷ்வரி சக்கி பீடம்.
பசுபதிநாதர் கோவில் மிக அருகிலேயே அமைந்துள்ளது இந்த கோவில். ஆதி சக்தி என்றும் அழைக்கப்படுகிறது. பிரதாப் மல்லா என்ற மன்னரால் 17ஆம் நூற்றாண்டில் புதுபிக்கப்பட்டது. 51 பாகமாக பூமியில் விழுந்த அம்பிகையின் உடல் பாகத்தில் இது இடுப்பு பகுதியாகும்.
ஜல்நாராயன்.
பூதநீலகண்டர் (Budhani Kantha) கோவில் என்று அழைக்கப்படுகிறது. பாம்பனையில் துயிலும் ரெங்கநாதர். தூங்கும் வண்ணம் கண்களை மூடிக்கொண்டிருக்கிறார். 5 மீட்டர் நீளத்தில் இருக்கிறார் பெருமாள். சிவபுரி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த கோவில். கைலாஷ் மானசரோவர் செல்பவர்கள் இங்கு வந்து தரிசித்த பின்பே கைலாஷ் செல்கின்றனர். (பயணநாள் 4.9.2022).
No comments:
Post a Comment