சித்ரகூடம். Epic Ramayana Incidental Place-5.

 சித்ரகூடம். (ராமாயணகாவிய தலம்-5)

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பந்தல்கண்ட் என்ற அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது இந்த இடம். சித்ரகூடம்,  உத்ரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. வரலாறு, மற்றும் தொல்லியல் துறை சிறப்புவாய்ந்த பகுதியாக உள்ளதால் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்கிறது. இந்த 2022 ஆம் ஆண்டிலேயே சிறந்த வனப்பகுதியாக திகழ்கின்ற இந்த வனப்பகுதி , திரேதாயுக நிலையை யோசிக்கும் போது ஆர்வமும், அச்சத்தையும் உண்டு செய்கிறது. உலக காலத்தை 4 யுகங்களாக பிரிக்கின்றனர். ராமாயணம் இரண்டாவது யுகமான திரேதாயுகத்தில் நடைபெற்றது என்று ஆன்மீகவாதிகளாலும், ஆராய்ச்சியாளர்களாலும் கூறப்படுகிறது. தற்சமயம் 4வது யுகமான கலியுகம் நடைபெறுகிறது.

இராமரின் 14 ஆண்டுகால கானகவாழ்வில், 10 ஆண்டுகளுக்கு மேல் சித்ரகூட காட்டில் அனுசியா, அத்ரி, மார்கண்டேயர் போன்ற முனிவர்களுடன் தங்கி, இங்கு தவம் செய்ததாக ராமாயணத்தில் கூறப்படுகிறது.

நாங்கள் பிரயாக்ராஜ்-ல் தங்கி ஒரு நாள் சுற்றுலாவாக சித்ரகூடம் சென்றதால் சில இடங்களுக்கு மட்டுமே செல்லமுடிந்தது. சென்ற இடங்களில் படங்களும், videoகளும்.

ஆஞ்சநேயர் கோவில்.


அனுசியாதேவி ஆசிரமம்.


ராமாயணபடக்காட்சி காட்சியகம்.


குப்த்கோதாவரி (குகை).





பெருமாள் கோவில்.

காக்காசுரன்.  அசுரன் காகம் வடிவில் வந்து சீதாதேவியை துன்புறுத்திய இடம்.



 Manthagini River at Chitrakoot.




சீதாமரி. Epic Ramayana Incidental Places 3and 4.

 பீகார் மாநில சீதாமாரி.


பீகார்மாநிலத்தில் நேபாளத்திற்கு அருகிலேயே இந்த இடம் அமைந்துள்ளது. ஜனகர் என்ற அரசருக்கு நிலத்தை உழும் சமயத்தில் நிலத்தில் ஒரு குழந்தை கிடைத்தது. அதுவே சீதை என்று நாம் ராமாயணகாவியத்தின் மூலம் அறிகிறோம். சீதை கிடைத்த இடமே இந்த சீதாமாரி. இந்த இடத்தில் ராமர்சீதைக்கு ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ளமக்கள் பலர் திரளாக இங்கு வந்து வணங்குகின்றனர்.

உத்ரபிரதேச சீதாமரி.


இந்த இடம், சீதாதேவி, அவரின் தாய் பூமாதேவியுடன், சென்ற இடம். (பூமிக்குள் சென்ற இடம்) வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் சீதாதேவி ,அவரின் இரண்டு மகன்களுடன் இங்கு இருந்த காட்டில் வசித்துவந்தார். ராவணனை கொன்ற வெற்றியுடன் அஸ்வமேத யாகம் செய்தார் ராமர். யாகத்தில் பயன்படுத்திய குதிரை எந்த பகுதி எல்லாம் கடந்து செல்கிறதோ, அந்த இடம் அனைத்தும், யாகம் செய்து குதிரையை அனுப்பும் மன்னருக்கு சொந்தம் என்று அந்த கால கட்டத்தில் ஒரு வழக்கம் இருந்தது. அதன் படி ராமரின் குதிரை சென்றது. வால்மீகி முனிவர் ஆசிரமத்தை கடக்க முயற்சித்த சமயம், ராமரின் இரண்டு புதல்வரக்ளும்,


அந்த குதிரையை வால்மிகி ஆசிரமத்தில் கட்டிபோட்டனர். இதன் காரணமாக ராமருக்கும், அவரின் புதல்வர்கள் லவ,குசனுக்கும் சண்டை மூண்டது. சீதை அங்கு சென்று ராமர்தான் அவர்களின தந்தை என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்து, மகன்கள் இருவரையும் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு, அவரது தாய் பூமா தேவியுடன. பூமிக்கடியில் சென்று விடுகிறார் என்று, காவியம் கூறுகிறது. லவனும், குசனும், தந்தையாகிய ராமனுடன், அயோத்திக்கு சென்றுவிடுகின்றனர். இலக்குமியின் அவதாரமாகிய சீதையின் அவதார காலம் இதனுடன் முடிவடைகிறது. சீதாதேவி, பூமாதேவியுடன் சேர்ந்த இடமே இந்த சீதாமாரி.   

 Idol of SeethaDevi.


தனுஷாதாம். Epic Ramayana Incidental Place- 2.

 தனுஷாதாம் (ராமாயணதலங்கள்-2).


தனுஷாதாம், ராமர், சீதைக்கு சுயம்வரம் நடந்த இடமாகும். இந்த இடம் ஜனக்பூரில் இருந்து 10.கி.மீ. தொலைவில் தனுஷ் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய ஊர். சீதாதேவிக்கு இங்குதான் திருமண சுயம்வரம் நடைபெற்றது. (சுயம்வரம் - ராஜகுல பெண்கள் கணவரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு) சிவதனுஷ் முறித்த இடம் ஆதலால் தனுஷாதாம் என்ற பெயர் பெற்றது. (தனுஷ் -வில் என்று பொருள்.) சீதையின் தந்தை ஜனகர், மகள் திருமணததிற்கு (சிவதனுஷ்) “சிவவில்” என்ற பெயரை கொண்ட விலை நாண் ஏற்றுபவர்கே தனது மகளை திருமணம் செய்து கொடுப்பேன் என்று திருமண கட்டளையாக கூறுகிறார். மிகவும் பெரியதும் சக்திவாய்ந்ததுமான இந்த வில்லை கையால் எடுப்பதே மிகவும் கடினமாகும். சீதை, சிறுமியாக இருந்தகாலத்தில், இந்த வில் வைத்திருந்த பெட்டிக்கருகில், விழுந்த பந்தை, மிக எளிதாக (வில் கொண்ட பெட்டியை) நகர்தி விட்டு, எடுத்து சென்றார் என்று, ராமாயண வரலாறு கூறுகிறது . இந்த வல்லமை கொண்ட பெண்னிற்க்கு வல்லமை கொண்டவனே மணமகனாக வரவேண்டும் என்று  இந்த நிபந்தனை விதிக்கிறார் ஜனகர். இந்த வில்லை ராமர் மிக எளிதாக எடுத்து முறித்து விடுகிறார் என்று, ராமாயணகாவியம் கூறுகிறது. 

முறிந்த வில்லின் நிலை.


நாண் ஏற்றும் முன்பே இந்த வில் 3ன்று துண்டுகளாக உடைகிறது. மேல் பாகம் ஜனக்பூரில் விழுந்தது. நடுப்பகுதி இந்த இடத்திலேயே விழுந்தது. விழுந்த இடம் இன்றளவும் அனைவராலும் வணங்கப்படுகிறது. அடிப்பகுதி ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் விழுந்தது என்று, ராமாயண காவியத்தின் மூலமாகவும், தொல்லியல் துறையும் ஆய்வு மூலமாகவும் அறிகிறோம்.   


ஜனக்பூர். Epic Ramayana Incidental Place-1.

 ஜனக்பூர் (ராமாயண தலங்கள் எண்-1)


ஜனக்பூர் என்ற இடம் ராமாயணகாவியத்தலைவி சீதா தேவி பிறந்த இடம்.  அவரின் தந்தை ஜனகர் ஆண்ட இடமாதலால் ஜனக்பூர் என்று அழைக்கப்படுகிறது.  தற்பொழுது இந்த இடம் நேபாள நாட்டில் உள்ளது. காட்மாண்டுவில் இருந்து 225 கி.மீ. தொலைவில் உள்ளது. மிதிலை என்ற இடத்தின் அரசனான ஜனகரின் நினைவாக 18 நூற்றாண்டில் ஜனக்பூர் என்ற இந்த நகரம் உருவாக்கப்பட்டது.  இந்நகரத்தின் வடமேற்கில் ராமர் முறித்த வில் கிடைத்ததாக தொல்லியல் துறை அதன் ஆய்வில் வெளியிட்டது. இந்த இடம் தற்பொழுது தனுஷ் என்று அழைக்கப்படுகிறது இந்த மாவட்டம் தனுஷ் மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது.


இந்த மாவட்டத்தின் தலைநகரமே ஜனக்பூர். 1805 ஆம் ஆண்டு இந்த நகரின் மையப்பகுதியில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் சீதை அரண்மனை (அல்லது) கோவில் கட்டப்பட்டது. கங்கா சாகர், தனுஷ் சாகர் என்ற பெயரில் குளங்கள் உள்ளன. (தரிசனநாள் -8.9.2022)

கூடுதல் தகவல்கள்.

8.9.2022 உடன் எங்களது, நேபாள பயணம் முடிவடைந்தது. நேபாள நாட்டிற்கு  செல்ல Passport  தேவையில்லை. அவர்கள் ரூபாயின் மதிப்பைவிட நமது நாட்டு ரூபாயின் மதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் நாம் வாங்கும் பொருட்கள் நமது ரூபாய் மதிப்பிற்க்கு கணக்கிட்டு வாங்கிக்கொள்கின்றனர். மிக சிறிய கடைகளில் நமது ரூபாய் வாங்க மறுக்கின்றனர். அங்கும் அவர்களின் பணத்தை rupee என்றே சொல்கின்றனர்.  

PALACE VIDEO.

GANGA POND AARATHI.
NEPAL RUPEE.





 




நேபாளம்- முக்திநாத்.

 நேபாளம்- முக்திநாத். (32 Days Tour sep 2022)

வழித்தடம்.



காத்மாண்டுவிலிருந்து போக்ரா என்ற இடத்திற்க்கு செல்ல வேண்டும். சாலைவழி பயணம் குறைந்தது  எட்டு மணிநேரமாகும். போக்ரா விமானநிலையத்தில் இருந்து ஜாம்சம், என்ற இடத்திற்க்கு சிறிய  விமானத்தில் 30 நிமிடம், பயணிக்க வேண்டும். அல்லது தரை வழி மார்கம் என்றால் 10 மணிநேரத்திற்க்கு குறையாமல் கண்டகி நதி கரையோரமாகவே பயணிக்க வேண்டும். ஜாம்சம்னில் இருந்து, 17 கி.மீ. ஜீப்பில் பயணித்து, கோவில் அருகில் செல்ல வேண்டும். பின்பு 2.5.கி.மீ நடைபயணம்(அ), குதிரை,(அ) டோலியில் கோவில் சன்னதிக்கு (3170 மீட்டர் உயரத்தில் உள்ளது முக்திநாத்) செல்லலாம். நாங்கள் 6.9.2022 அன்று ஏகாதசி புண்ணிய காலத்தில், இயற்கையின் நல் ஒத்துழைப்புடன் கிருஷ்ணரை வழிபட்டு பக்தியில் மகிழ்ந்தோம். 7ஆம் தேதி காலை மோசமான வானிலை காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு நாங்கள் பேருந்தில் போக்ரா திரும்பினோம். நாங்கள் நடந்துசென்று வழிபட்டோம். நடப்பது கடினமாக இல்லை. மிகவும் முடியாதரர்கள் குதிரை அல்லது டோலி பயன்படுத்தலாம்.

முக்திநாத் சிறப்பு.


108 திவ்யதேசத்தில் ஒன்று. திருமங்கையாழ்வார், பெரியாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. பிரபந்தத்தில் இந்த ஷேத்ரத்தை சாளக்கிராமம் என்று குறிப்பிட்டுள்ளனர். பெருமாள் சிலாரூபமாக (சுயம்புவாக) இருந்து  அருள்பாலிக்கும் இடங்களில் முக்திநாத்தும் ஒன்று என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. ( ஏனனய இடங்கள் ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, நைமிசாரண்யம், வானமாமலை பெருமாள்(நாங்குநேரி), புஷ்கரம், பத்ரிநாத்.) தவளகிரி,அன்னபூர்ணா சிகரத்தில் இருந்து இந்த காளிகண்டகி நதி வருகிறது. கோமுகத்தில்(பசுமுகம்)  இருந்து 108 தீர்தங்கள் வருகின்றன. 

ஷேத்ரவரலாறு.

கண்டகி என்ற பெண் சிறந்த விஷ்ணுபக்தை மற்றும் பேரழகி என்றும் தெரிகிறது. இந்த அழகியிடம் பல ஆண்களும் செல்கின்றனர் என்றும், ஒருநாள் கிழவன்வடிவத்தில் சென்று இந்த பக்தையை மிகவும் சோதனைக்கு உள்ளாக்கினார் விஷ்ணு என்றும், இந்த அம்மையாரின் பொறுமை மற்றும் அர்பணிப்பை  கண்டு இந்த பெண்ணிற்க்கு மகா விஷ்ணுவாக காட்சி  கொடுக்கிறார். இந்த நங்கை இறைவனை தனது மகனாக ஏற்றுக்கொண்டு, உலகம் உள்ளவரை காளிகண்டகி என்ற நதியாகி மக்களுக்கு உதவியும், இதில் நீராடுபவர்களுக்கு பாவவிமோசனமும் தருகிறார். விஷ்ணுபகவான் சாளகிராமம் என்ற கல் வடிவில் கண்டகி என்ற பக்தைக்கு மகனாக பிறப்பதாக  வரலாறு கூறுகிறது. சாளக்கிராமம் என்ற இந்தக்கல் மகாவிஷ்ணுவின் வடிவம் என்று பூலோக மக்களால் வணங்கப்படுகிறது. Jamson Airport MukNath  


Aviation Photographs.

Gandaki River.






நேபாளம்- பசுபதிநாதர் கோவில், ஜல்நாராயன் கோவில், குகேஷ்வரி சக்திபீடம்.

 நேபாளம்- பசுபதிநாதர் கோவில், ஜல்நாராயன் கோவில், குகேஷ்வரி சக்திபீடம்.


எங்களின் ஆன்மீக யாத்திரையின் தொடக்கமாக, நேபாள நாட்டிற்கு சென்றோம். சென்னையில் இருந்து உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் என்ற இடத்திற்கு சென்று, அங்கிருந்து 14 மணி நேரம் பேருந்தில் பயணித்து நேபாளத்தின் தலைநகரமான காட்மாண்டு சென்றடைந்தோம். 

கோரக்பூர்.

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...