திருவான்மியூர் மருந்தீஸ்வரர் (தரிசன நாள் 27.2.2022).

 



அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத மருந்தீஸ்வரர். இறைவன் மேற்கு முகமாகவும், அம்மன் தெற்கு முகமாகவும், விநாயகர், முருகன் கிழக்கு முகமாகவும் வீற்றிருக்கின்றனர். 7நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு வாயில்களை கொண்டுள்ளது, இக்கோவில். 

பெயர் காரணம். 

அகத்தியருக்கு இறைவன் மருந்து மூலிகைகள் பற்றி உபதேசம் செய்ததால் மருந்தீஸ்வரர் என்ற பெயர் கொண்டார். தென்திசை நோக்கி பயணித்த வால்மிகி முனிவருக்கு கிழக்கு கடற்கரையோரத்தில் வன்னி மரத்தடியில், ஈசன், “உமையுடன் நான் இங்கிருக்கிறேன்” என்று அசரீரி முலம்  முனிவருக்கு உணர்த்தி, காட்சி அளித்தமையால் திருவான்மியூர் என்று பெயர் பெற்றது. 





தீர்த்தம்.

இறைவன் தலையில் உள்ள கங்கையில் இருந்து விழுந்த 5 துளிகள் 5 தீர்த்தங்களாகின.  ஜன்மநாசினி, காமநாசினி, பாபநாசினி, ஞானதாயினி, மோட்சதாயினி என்ற இந்த 5 தீர்தங்களில், கிழக்கு கோபுர எதிரில் தெப்பகுளமாக பாபநாசினியும், கோவில் உட் பகுதியில் ஜன்மநாசினி என்ற இரண்டு குளங்கள் மட்டுமே உள்ளன்.

தலமகிமை. 

வால்மீகி முனிவர் மூலம் பிரம்மனால் அமைக்கப்பட்ட கோவில். 11 நாட்கள் பங்குனி பிரம்மோற்சவத்தை பிரம்மனே ஏற்படுத்தி இறைவனை வழிப்பட்டார் என்று தல புராணம் கூறுகிறது.

காமதேனு.

காஸ்சிப முனிவரால் சாபம் பெற்ற காமதேனு மருந்தீஸ்வரர் திருமேனியில் பால் சுரந்து சாபம் நீங்கப்பெற்றது. இதனால் ஈஸ்வரன் பால் வண்ணநாதர் என்றும், அருள் செய்கிறார். திருப்பாற்கடலில் கடைந்த அமுதத்தால் பிரதிஷ்டை செய்ததால் அமுதீஸ்வரர் என்றும் வணங்குகிறோம். நான்கு வேதங்களும் பூஜித்ததால் வேதபுரீஸ்வரர்ஆக காட்சி தருகிறார். திருநாவுக்கரசர், திருஞானசம்மந்தரால் தேவார பாடலும், அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றுள்ளது.


  


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...