இரவுநேரம் என்னுடைய 4மாத பேத்தி வாசல் கதவை திறக்கும் சத்தம் கேட்ட நான், பேபி எங்கம்மா போன? என்று கேட்டதற்கு பாட்டி, Babyhug கடைக்கு, சென்றேன் என்று கூறிவிட்டு பாட்டி கடையில் புடவை இல்லை என்று சொல்லிவிட்டார்கள் என்றாள் . நான் மிவும் ஆச்சரியமாக என்ன புடவையா என்றேன், ஆமாம் பாட்டி கடையில் எனக்கு Dress, பக்கத்து வீட்டு ஷியாம் போடுவது போல் Dress மட்டும் தான் இருந்தது, நான் உடனே அழுதேனா கடையில் உள்ள அக்கா அழாதே நான் உன்னுடைய பாட்டிக்கு புடவை வாங்கி தருகிறேன் என்று சொல்லி உடனே வாங்கி கொடுத்தார் நன்றாக உள்ளதா? என்று என்னை கேட்டாள். ஆ… புடவை சூப்பர் என்று சொல்லி வாயைப்பிளந்து கொண்டு எழுந்த எனக்கு புரிந்தது இவை அனைத்தும் கனவுதான். நான்கு மாத குழந்தை எப்படி பேசும்? கடைக்கு செல்லும்? கொரோனா காலத்திற்க்கு முன்பு ஒரு தனியார் பள்ளியில் குழந்தைகளுக்கு கதை செல்லுவதற்காக, பிரத்யேகமாக கதை ஆசிரியராக நான் பணிஅமர்தப்பட்டிருந்தேன். அப்பொழுது அவர்களுக்காக பல புத்தகங்கள் படித்தேன். அதில் “ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன்” அவர்களின் கதைகள் படித்தேன். இவரின் கதைகள் படித்து குழந்தைகளுக்கு சொல்லி அவர்களை கவர்வது எனக்கு கடினமாக இருந்த போதிலும், விலங்குகள், பறவைகள், பொருட்கள், போன்றவை பேசுவது போன்று எழுதபட்டிருந்தது என்னை மிகவும் கவர்ந்தது. ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி உலக குழந்தைகள் புத்தக தினம் ஆண்டர்சன் பிறந்தநாள் அன்று கொண்டாடப்படுகிறது. 1967 ஆம் ஆண்டு முதல். நான் தற்பொழுது என்னுடைய பேத்தியுடன் வசிப்பதாலும், ஆண்டர்சன் கதை நினைவாலும், உருவாகிய சிந்தனையே கனவாக வந்தது. அது மட்டும் அல்லாமல் இரவு என்னுடைய புடவையில் பேத்தி உச்சா வேறு போய்விட்டதால், எல்லாம் சேர்ந்தே எனது கனவுக்கு காரணம் என்று எனது அறிவு உணர்த்தியது. (17.3.2022) காலை எங்களின் அறை கதவை திறந்தால், கதவில் மாட்டியிருந்தது ஒரு பை. அதை திறந்தால் Happy Birthday Patti Shrvya என்று எழுதி அதில் எனக்கு பிடித்த Cotton Saree. என்னுடைய கனவு மெய்யானதை நினைத்து நான் 5 நாட்கள் ஆகியும் ஆச்சரியத்தில் திளைக்கிறேன்.
No comments:
Post a Comment