அஷ்டலெஷ்மி கோவில்.
ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் விருப்பத்தின் பேரில், முக்கூர் ஸ்ரீவரதாச்சாரியாரை, கோவிலை உருவாக்க, கருவியாக கொண்டு, 1974 ஆம் ஆண்டு இக்கோவிலுக்கு அடித்தளம் இடப்பட்டது. 1976 ஆம் ஆண்டு அகோபிலமட 44வது குருவான வேதாந்த தேசிக யதீந்திர மகாதேசிகன் அவர்களின் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
கோவில் அமைப்பு.
கோவில் அமைப்பு உத்திரமேரூர் சுந்தரராஜபெருமாள் கோவில் போன்றே மூன்று நிலையில் கட்டப்பட்டுள்ளது. கீழ் நிலையில் பெருமாளும் தாயாரும் வீற்றிருக்கின்றனர். ஆதிலெஷ்மி, தான்யலெஷ்மி, தைரியலெஷ்மி, ஒருநிலையிலும், சந்தானலெஷ்மி, விஜயலெஷ்மி, வித்யாலெஷ்மி, ஒரு நிலையிலும், தனலெஷ்மி தனியாகவும். அருள்பாலிக்கின்றனர். திருகோஷ்டியூர் பெருமாள் கோவிலும் இதே அமைப்பில் இருக்குமாம். (திருகோஷ்டியூர் பெருமாளை தரிசனம் செய்யும் பாக்கியம் இதுவரை நான் கிடைக்கப்பெறவில்லை.) 65 அடி நீளம், 45 அடி அகலம் கொண்ட இக்கோவில், 2012 ஆம் ஆண்டு, 7மில்லியன் ரூபாய் செலவில் புதுபிக்கப்பட்டது. புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமை லெஷ்மிக்கு மாவிளக்கு இடும் வழக்கம் மிகவும், சிறப்பாக நடைபெறுகிறது.
அறுபடைவீடு.
காஞ்சி பரமாச்சாரியாரின் வருப்பத்திற்கு இணங்க, 1985ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ராமசந்திரன் அவர்களால் தழிழக அரசு சார்பாக, இக்கோவில் திருப்பணிக்காக நிலம் வழங்கப்பட்டது. டாக்டர் அழகப்ப அழகப்பன் என்பவர் காஞ்சி பரமாச்சாரியாரின் ஆணையை ஏற்று இக்கோவிலை தோற்றுவித்தார்.
2016 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி குடமுழுக்கு செய்யப்பட்டது.
1. 1995- சுவாமிமலை சன்னிதி.
2;. 1998- ஸ்ரீ மகாவல்லபகணபதி, பழனி, திருத்தணி சன்னதிகள்.
3. 2002- திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை சன்னதிகளும் கட்டப்பட்டது. அறுபடைவீடு சன்னதிகளில் அந்த அந்த தலத்திற்கான திருப்புகழும், விநாயகர் சன்னதியில் “உம்பர்தருத் தேநுமணிக்” என்ற விநாயகர் துதி திருப்புகழும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. பைரவர், நவக்கிரஹம், இடும்பன் என்று ஏனைய சன்னதிகளையும் உள்ளடக்கிய இந்த கருங்கல் கோவில் மிக அற்புதமாக மன்னர்கள் கட்டிய கோவிலுக்கு இனையாக உள்ளது.
No comments:
Post a Comment