எமதண்டீஸ்வரர் ஆலகிராமம். (தரிசனநாள் 11.3.2022)

 

இருப்பிடம்.

பாண்டிச்சேரியிலிருந்து திண்டிவனம் செல்லும் பாதையில் தென்கோடிப்பாக்கம் என்ற இடத்தில் வலதுபுறம் திரும்பி சென்றாலும்; ஆ லகிராமத்தை  அடையலாம். நாங்கள் திண்டிவனம்-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை வழியா சென்று கூட்டேரிப்பட்டு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி 4 கிலோமீட்டர் தொலைவு சென்று ஆலகிராமத்தை சென்றடைந்தோம். 

தல வரலாறு.

மார்கண்டேயன் மீது வீசப்பட்ட பாசக்கயிறு சிவன் மேலும் விழுந்தமையால் உண்டான பாவம் காரணமாக தர்மத்தை செய்யவிடாமல் துன்பத்தில் தவித்த எமதர்மராஜன் பல தலங்களுக்கு சென்று சிவனை வழிப்பட்டார். ஆலகிராமத்திற்க்கு வந்து சிவனை வணங்கி தவம் இருக்கலானார். சிவன் யமனுக்கு காட்சி கொடுத்து, கோவிலுக்கு எதிரே உள்ள குளத்திலேயே கங்கையை வர செய்து அதில் எமனை நீராட செய்து அவரின் பாவம் நீக்கினார். அதனாலேயே எமதண்டீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

கோவில் சிறப்பு.

1. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த தலம் 2015 ஆண்டு திருப்பனி செய்த போது விநாயகர், முருகன், விஷ்ணு, லகுலீசுவரர், ஆகிய தெய்வ திருமேனிகள் கிடைத்தன. விநாயகர் 75 செ.மீ., உயரம், 40 செ.மீ., அகலம் கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட விநாயகர், பிள்ளையார்பட்டி விநாயகரை விட பழமைவாய்ந்தவர் என்று கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பிள்ளையார்பட்டி விநாயகர் 6ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்றும், இவர் 4 முதல் 6ஆம் நூற்றாண்டிற்க்கு உட்பட்டவர் என்று தெரிவிக்கிறார்கள். அதனால் இவர் ஆதிவிநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

2. லகுலீசுவரர். 

சிவனின் 28வது நாமமே லகுலீசவரர் என்பதாகும். அகோரிகளே இந்த வடிவத்தை வணங்குவார்கள் என்றும் தெரிவிக்கின்றனர். 

3. திரிபுரசுந்தரி அம்மன்.

6அடி உயரத்தில் நீலோத்பலம் மற்றும் தாமரை கொண்டும், வலதுகரம் அபயம் அளித்தும், இடதுகரம் வரம் அருளும்படியும் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். வாரத்தின் ஏழு நாட்களும் அம்மனின் முகபாவம் மாறுபட்டுகொண்டே இருக்குமாம். 

4. பிரதோஷநந்தி.



பிரதோஷம் மிக சிறப்பாக நடைபெறுகிறது.. பிரதோஷ நேரத்தில் நந்திக்கு அபிஷேகம் செய்யும் போது, சுவாசிப்பதை நன்கு உணரமுடியும் என்று அர்சகர் கூறினார்.

5.காஞ்சி மகாபெரியவர்.

காஞ்சி மகாபெரியவர் அவரின் யாத்திரை காலங்களில் 1943, 52, 66, 69, 72, என்று 5முறை எமதண்டீஸ்வரரை தரிசனம் செய்துள்ளார் என்று இங்குள்ள அவரின் படம் நமக்கு எடுத்து காட்டுகிறது.







No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...