இந்த திவ்யதேசத்தின் புராணப்பெயர் திருஎவ்வுள். இது 59வது திவ்யதேசம் ஆகும். திருமங்கைஆழ்வார், மற்றும் திருமழிசைஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.
கோவில் வரலாறு.
சாலிஹோத்ரர் என்ற முனிவர் அரிசியை மாவாக்கி உணவு சமைத்து அடியவர்களுக்கு கொடுத்து பின் தானும் உண்டு வந்தார். ஸ்ரீமன் நாராயணனே அடியவராக வந்து உணவை உண்டுவிட்டு தனக்கு பசிதீரவில்லை என்று கூறி முனிவரின் பங்கையும் வாங்கி உண்டு விட்டு, நான் எவ்வுள்கிடக்க (இளைப்பாற) என்று அந்த முனிவரிடம் கேட்கிறார். முனிவர் காட்டும் இடத்திலேயே பெருமாள் சயனித்து விடுகிறார். பெருமாள், வலது கரம் முனிவரை அனுக்கிரகம் செய்வது போன்றே, சயனித்துள்ளார்.
திருக்குளம்.
குளம் மிக பெரியதாக உள்ளது. பிணி தீர்க்கும் குளம் என்று மக்களால் அழைக்கப்படுகிறது. வெல்லத்தை இக்குளத்தில் கரைத்தால் நமது துன்பமும், நோயும் கரையும் என்று கூறப்படுகிறது. நோய் தீர்க்கும் இடம் ஆதலால், வைத்ய வீரராகவபெருமாள் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். சிவபெருமான், தட்சனின் இறப்பு காரணமாக ஏற்பட்ட தோஷம் நீங்க இக்குளத்தில் நீராடி தோஷ நிவர்தி பெற்றார் என்று வரலாறு கூறுகிறது.
தாயார்.
வசுமதி என்ற பெயரில், தாயார் திலிபமகராஜாவுக்கு, மகளாக அவதரித்து வீரராகவனையயே கரம்பிடிக்கிறார். திலிபராஜாவுக்கு ஒரே மகள் என்பதால் மகளைப்பிரிய அரசனுக்கு மனம் இல்லாத காரணத்தால், பெருமாள் நான் இங்கேயே தங்கி விடுகிறேன் என்று வாக்குறுதிஅளிக்கிறார்.
தை அம்மாவாசை சிறப்பு.
தை மாதம் அம்மாவசையன்று இறைவன் காட்சி கொடுத்தமையால், இன்நாளில் மக்கள் திரளாக தரிசனத்திற்க்கு வருகின்றனர்.
சிவன் கோவில்.
அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத தீர்தீஸ்வரர். பல்லவ மன்னன் காலத்தில் கட்டப்பட்ட கோவில், 3 நிலை கோபுரத்துடன்; வழக்கமான சிவன் கோவில் போன்ற இறை சன்னதிகளுடனும், வள்ளலார் சாமிகளுக்கும் ஒரு தனி சன்னதயும், அமைக்கப்பட்டிருந்தது. புனரமைபுப்பணி நடைபெறுகிறது.
;
No comments:
Post a Comment