திருநின்றவூர் (20.1.2022- தரிசன நாள்)


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 29 கி.மீ. தொலைவில், திருவள்ளுர் மாவட்டத்தில்  உள்ளது.

பக்தவச்சல பெருமாள் கோவில்.

திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில். 58 வது திவ்யதேசம். 




கோயில் வரலாறு.

சமுத்திர ராஜனுடன் கோபம் கொண்ட அலைமகள், இங்கு வந்து நின்றமையால் திருநின்ற ஊர் என்று அழைக்கப்படுகிறது. சமுத்திர ராஜன் திருமகளின் கோபம் தீர்க்க, பலவாராக வேண்டுகிறார். அப்பொழுது “என்னை பெற்ற தாயே” என்று சொன்னதால். இந்த தலத்தில் தாயாரின் பெயர் என்னை பெற்ற தாயார் என்று அழைக்கப்படுகிறது. சமுத்திர ராஜன் பலவாராக வேண்டியும் திருப்பாற்கடல் திரும்பாததால், திருமாலும் லஷ்மி தேவியை அழைக்க விழைகிறார். பக்தனுக்காக  திருப்பார்கடலில் இருந்து திருநின்றஊருக்கு வந்தமையால் பக்தவச்சல பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீ இருதயாலீஸ்வரர் திருக்கோவில்.

பூசலார் நாயனார் மனதினால் எழுப்பிய கோவில். 63 நாயன்மார்களில் ஒருவரான பூசலார் என்பவர் ஒரு லிங்கத்தை காண்கிறார். அங்கு ஒரு சிவாலயம் கட்ட எத்தனிக்கிறார் அதற்கான பொருள் வசதி அவரிடம் இல்லாததால் மனதிலேயே ஒரு ஆலயத்தை கட்டுகிறார். காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன் ஒரு சிவாலயம் கட்டி குடமுழுக்கு நாள் குறிக்கிறார். ஆதே நாளில் பூசலாரின் மனக்கோவில் குடமுழுக்கும் அதே நாளில் அவர் குறித்துள்ளதால், இறைவன் மன்னின் கனவில் வந்து பூசலாரின் மனதினால் கட்டிய கோலிலை பற்றி கூறி, பூசலாரின் பக்தியை பல்லவ மன்னன் மூலம் உலகுக்கு எடுத்து காட்டி, பூசலாரின் மனக்கோவில் போன்றே,  மன்னனின் உதவியடன் கட்டியதே, இந்த இருதயாலீஸ்வரர் கோலில். சிவனுக்கு அருகிலேயே பூசலார் சிலையும்  அமைந்துள்ளது.  


ஏரிகாத்த ராமர் கோவில்.

பக்கதவச்சல பெருமாள் கோவில் பின்புறத்தில் ஏரிக்கரையில் கோவில் கொண்டுள்ளார், ஏரி காத்த ராமர். திருநின்றவூர் ஏரி தமிழ்நாட்டின் ஏழாவது பெரிய ஏரி என்று கூறப்படுகிறது. 16 கிராமங்களுக்க நீர் தேவையை பூர்த்தி செய்கிறது. 150 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக ஊரே வெள்ளத்தில் மூழ்கியது, ஆங்கிலேய ஆளுனர் மதுராந்தகம் ஏரியை, ராமர் காத்து அருளியதை, இவ்வூர் மக்கள் மூலம் கேட்டு, ராமபிரானை வேண்ட ஒரே நாளில், நீர் அனைத்ததும் ஏரியில் அடங்கியது. ஊரிமக்களின் ஒத்துழைப்புடன் கோவிலை நிர்மாணிக்க ஆனைபிறப்பித்தார்.  இந்த ராமரும் ஏரிகாத்த ராமர் என்றே அழைக்கப்படுகிறார். இந்த ஏரிக்கு வருணபுஷ்கரணி என்று பெயர். ராமர் 6அடிக்கு மேல் ஆஜானுபாகுவாக சீதை இலக்குவணன் உடன் அருள்பாலிக்கிறார்.


இந்த மூன்று கோவில்களும் அருகருகே அமைந்துள்ளன்.   






No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...