மரகதாம்பிகை உடனுறை பள்ளிகொண்டீஸ்வரர் என்ற இந்த தலம் ஆந்தரமாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வித்யாரண்யர் என்ற விஜயநகரபேரரசரால் கட்டப்பட்டது.
தல வரலாறு.
துர்வாச மகரிஷி சாபத்தால் இந்திரலோக பதவியை இந்திரன் இழந்தான். அசுரரை வெற்றியடைய பாரக்கடலை கடைந்து அமுதம் உண்டு பலம் பெறவேண்டும் என்று தேவர்களின் குரு பிரகஸ்பதி கூறுகிறார். மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக கொண்டு பாற்கடலை கடைகின்றனர். பாம்பு வலிதாங்கமுடியாமல் நஞ்சை கக்குகிறது. தேவரும், அசுரரும் சிவபெருமானை வேண்ட, ஈஸ்வன் சுந்தரரை அனுப்ப அவர் அனைத்து விஷத்தையும் நாவல் பழம் போல் உருட்டி சிவனிடம் கொடுக்க, இந்த நஞ்சினால் உலக மக்களுக்கு கேடு விளையும் என்று சிவன் விஷாபகரண மூர்த்தியாகி நஞ்சை விழுங்குகிறார். பார்வதி அம்மை பயந்து அவரது கழுத்தினை விட்டு இறங்காதவாறு தடுக்கிறார். இங்கிருந்து கைலாயம் செல்லும் வழியில் அம்பிகையின் மடியில் தலைவைத்து சற்று இளைப்பாறிய இடமே இந்த சுருட்டப்பள்ளி என்று ஸ்கந்தபுராணமும், சிவபுராணமும் கூறுகிறது.
ஆலைய சிறப்பு.
- பள்ளிகொண்ட கோலம்.
அம்பிகையின் மடியில் தலைவைத்து பள்ளி கொண்டகோலத்தில் சிவன் இருக்கும் ஒரேவொருதலம்.
- தம்பதியர் தலம்.
விநாயகர் சித்தி, புத்தியுடனும், தர்மசாஸ்தா பூர்ண, புஷ்கலையுடனும், குபேரன் கௌரிதேவியுடனும், தட்சணாமூர்த்தி மனைவி தாராவுடன் தாம்பத்ய கோலத்திலும், அருள்பாலிக்கின்றனர்.
- பிரதோஷ வழிபாடு துவங்கிய இடம்.
பிரதோஷவழிபாடு என்பது முதலில் இத்தலத்தில் துவங்கியது. இதைதொடர்ந்தே பிற சிவன் கோவில்களில் நடைமுறைபடுத்தப்பட்டது.
4. துவாரபாலகர்களுக்கு பதிலாக சங்கநிதியும், பதுமநிதியும் இருக்கின்றனர். அம்பிகை சன்னதிக்கு வெளியில் இருபுறமும் காமதேனுவும், கற்பகவிருட்ஷமும் உள்ளது.