திருமூர்த்தி மலை கோவில், மற்றும் அணை

 


திருமூர்த்தி மலை கோவில், மற்றும் அணை. (பார்வையுற்ற நாள் 11.11.2021);.

திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருமூர்த்தி மலை சிறந்த சுற்றுலா இடமாகவும், ஆன்மீக தலமாகவும் அமைந்துள்ளது. அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு இரண்டு கி.மீ. முன் கரிவரதராஜப்பெருமாள் என்ற கோவிலை தரிசனம் செய்தோம். இந்த வனப்பகுதியில் அகத்தியர் தவமிருந்தார் எனவும், இறைவன் திருமணக்கோலத்தை பொதிகை மலையில் கண்டு களித்தது போன்று, மீண்டும் காண இறைவனை வேண்டியதை குறிப்பால் உணர்திய இடம், என்ற வரலாறு உள்ளது. இறைவன் அமணலிங்கேஸ்வரர். இங்கு அமைந்துள்ள எட்டுக்கால் மண்டபத்தில் அனுசியா தேவி மூன்று மூர்திகளையும் (பிரும்மா, விஷ்ணு, சிவன்) குழந்தையாக உருமாற்றி பாலூட்டிய இடம், இதனாலேயே  இந்த இடம் திருமூர்த்தி மலை என்று அழைக்கப்படுகிறது. 

திருமூர்த்தி அணை.

இந்த நீர் தேக்கம் ஆனைமலைத்தொடரின் வடக்கு சரிவில் ,உற்பத்தியாகும் பாலாறு நதியின் குறுக்கே கட்டப்பட்ட நீர்தேக்கம். (பாலாறு ஆழியாற்றின் கிளையாறு) 1967 ஆம் ஆண்டு விவசாய நீர் பாசனத்திற்காக கட்டப்பட்டது. இங்கு 2000 ஆம் ஆண்டு நுன் புனல் மின் நிலையம் அமைக்கப்பட்டது. மின் விநியோகம் 2002ல்  துவக்கப்பட்டது. 1337 அடி நீர்தேக்க மட்டமும், 1935 மில்லியன் கன அடி கொள்திறனும் கொண்டது.  


            










No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...