அனுவாவி (7.12.2021 தரிசன நாள்) 

கோயமுத்தூர் மாவட்டம் கோயமுத்தூர் புறநகர் பகுதியான பெரிய தடாகம் (ஆனை கட்டி வழித்தடம்) என்ற இடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. வள்ளி தெய்வானையுடன் சுயம்பு மூர்த்தியாக நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். சஞ்சீவிமலையை சுமந்து சென்ற போது அனுமனுக்கு தாகம் ஏற்பட இந்த மலை முருகனை வேண்டியதில் முருகனால் உருவாக்கப்பட்டது ஒரு ஊற்று. இந்த நீர் ஊற்று எங்கு உருவாகிறது என்பது இதுவரை யாராலும் அறியபடவில்லை. மலைஅடிவாரத்தில் இருந்து 500படிகள் கொண்டது கோவில். முன்மண்டபத்தில் விநாயகர், வீரபாகுவும், பத்து படி கட்டு உயரத்தில் அருணாச்சலேஸ்வரர் என்ற பெயரில் சிவ பெருமானும் நமக்கு அருள் பாலிக்கின்றனர். ஹனு என்பது அனுமனையும், வாவி(Bhavi)என்பது நீர்நிலையையும் குறிக்கும். இந்த கோவில் நேர் தென் புரத்தில் மருதமலை உள்ளது.

 





 


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...