திருமுருகன்பூண்டி (9.12.2001 தரிசனநாள்).
இறைவன் திருமுருகநாதர், இறைவி ஆவுடைநாயகி(எ)மங்களாம்பிகை. அவினாசி –திருப்பூர் சாலையில் அவினாசியில் இருந்து 6.5.கி.மி. தொலைவில் உள்ளது இந்த திருமுருகன்பூண்டி. பரிசு பொருளுடன் விநாயகர் கோவிலில் இரவை கழித்த சுந்தரரிடம், இறைவன் சிவபெருமான் பூதகணங்களை வேடுவர் வடிவில் அனுப்பி பொருட்களை கொள்ளையடிக்க செய்தார். விநாயகரின் உதவியை நாடிய சுந்தரருக்கு சிவன் குடியிருக்கம் இந்த தலத்தை விநாயகர் காட்டினார்.
“வேதமோதி வெண்ணீறு பூசி வெண்கோவணந் தற்றயலே ஓதமேவிய ஒற்றயூரையும் முத்தி நீர்மகிழ்வீர் மோதி வேடுவர் கூறை கொள்ளு முருகன்பூண்டி மாநகர்வாய் ஏதுகாரணம் ஏதுகாவல் கொண்டு எத்துக்கிங்கிருந்தீர் எம்பெருமானீரே”… என்று சிவனை கடிந்து பாட அவரது பாடலில் மகிழ்ந்து சிவ பெருமான் பொருட்களை திருப்பி அளித்து ஆசி வழங்கினார், என்று மரபு வரலாறு கூறுகிறது.
முருகப்பெருமான் சிவபெருமானை வழிபட்ட தலம் என்ற பெருமையையும் திருமுருகன்பூண்டி பெறுகிறது. இதன் காரணமாகவே சிவ பெருமான் முருகநாதேசுவரர் என்று அழைக்ப்படுகிறார்.
இத்தல திருப்புகழ்.
“அவசியமுன் வேண்டிப் பலகாலும் அறிவிணுணர்ந்தாடுக் கொருநாளில தவசெபமுந் தீண்டிக் கனிவாகிச் சரணமதும் பூண்டற் கருள்வாயே சுவதமொருந் தாண்டித் தகரூர்வாய் சடுசமயங் காண்டற் கரியானே சிவகுமாரன் பிண்டிற் பெயரானே திருமுருகன்பூண்டிப்பெருமாளே”. என்று அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
ஸ்ரீ கந்த குரு கவசம் ஆசிரியர் சாந்தானந்த சுவாமிகள் கவசத்தில் திருமுருகன்பூண்டியிலே திவ்யஜோதியானாய் நீ என்று இத்தல சிறப்பை ஆசிரியர்குறிப்பிட்டுள்ளார்.
முருகன் கோவில் என்றே மக்கள் இந்த கோவிலை அழைக்கின்றனர். கோவில் அமைப்பு அனைத்து சிவன் கோவில் போன்றே உள்ளது. அவிநாசிஅவிநாசியப்பர் கோவிலும் எங்கள் அட்டவணையில் (இரண்டாம் முறை) இருந்தது. நாங்கள் மாலை நான்கு மணிக்கு கோவையிலிருந்து கிளம்பியதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் மழை காரணமாக இறைவனை வழிபடமுடியாமல் திரும்பினோம்.
No comments:
Post a Comment