மேல்சித்தாமூர் ஜினாலயம், நெடுங்குன்றம் ராமர்.

 மேல்சித்தாமூர் ஜினாலயம், நெடுங்குன்றம் ராமர். (தரிசன நாள்-18.12.2021)

தமிழகத்தின் புகழ் பெற்ற சமண கோயில்களில்(ஜினாலயம்) ஒன்றாக மேல்சித்தாமூர் திகழ்கிறது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி –திண்டிவனம் சாலையில், அமைந்துள்ளது, இந்த ஜினாலயம். 7நிலை கோபுரம், கொடிமரம், விமானம் ஆகியவற்றடன் இந்து மத கோயில் போன்றே காட்சியளிக்கிறது. 16 ஆம் நூற்றாண்டில் ஆண்டுவந்த விஜயநகர பேரரசின் பிரதிநிதியாக செஞ்சியை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களின் ஆதரவுடன் கட்டப்பட்டது. இந்த ஜினாலயத்தில், பிரதானமாக 14 அடி உயரத்தில் கருங்கல்லில் செய்யப்பட்ட 23 வது தீர்தங்கரர், பாசுவநாதர் அருள்பாலிக்கிறார். சமணமதத்தில் இறைவன் என்று தனி உருவம் கிடையாது. இந்த பூவுலக மக்களுக்கு ஞான வழிகாட்டியவர்கள்  தீர்தங்கரர் என்று அழைக்கப்பட்டு, ஜினாலயங்களில் இவர்களை உருவங்களாக வடித்து வழிபாடு செய்கின்றனர். இந்த தீர்த்தங்கரர்கள் பகவான், அருகக் கடவுள் என்று அழைக்கப்படுகின்றனர். 24வது தீர்தங்கரர், சமண மதம் என்ற உடன் நாம் நன்கு அறிந்த மஹாவீரர் ஆவார்.  ஜின காஞ்சி ஜைன மடம் காஞ்சிபுரத்தில் இருந்து மேல் சித்தாமூருக்கு மாற்றப்பட்டது. சித்திரை மாதம் மகாவீர் ஜெயந்தி அன்று பாசுவநாதரை உற்ச்சவமூர்த்தியாக வைத்து தேர் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. 16 அடி தேரடி கட்டிடம் கட்டிட கலைக்கு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.

சமணர்கள் தமிழுக்கு கொடுத்த பொக்கிஷங்கள்.

2ஆவது நூற்றாண்டில் பரவிய சமண மதம் அளித்த, கல்வி கொடை என்பது மிகவும் பெரியது. பள்ளி என்ற வாழ்விடமே கல்விக்கூடமானது. பள்ளிக்கூடம் என்பதில் பள்ளி என்ற வார்த்தை சமணமதத்தின் கொடை என்றே சொல்லலாம்.  ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி, இவை மூன்றும்  சமண மத நூல்கள். அன்றாடம் நாம் பயன் படுத்தும் பழமொழி சமண மதத்தினரின் படைப்பே. நாலடியார், திரிகடுகம், ஏலாதி, நன்னூல், என்ற பல சிறந்த நூல்கள் சமண மதத்தினரால் எழுதப்பட்டதே ஆகும். 




நெடுங்குன்றம் ராமர் கோவில்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி-சேத்பட் வழி தடத்தில் அமைந்துள்ளது. 7 ஏக்கர் பரப்பளவில் 3 பிராகாரங்களை கொண்ட கோவில். முதல் பிராகாரத்தில் வலது புறத்தில் 100 கால் மண்டபம், இடது புறம் 16 கால் மண்டபம் அமைந்துள்ளது. இரண்டாவது பிராகாரம் ராஜகோபுரத்தின் இடதுப்புறத்தில்  தாயார் சன்னதி அமைந்துள்ளது. உற்சவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத விஜயராகவபெருமாள். 

யோகராமர்.

பிரதானமாக உள்ள ராமர், கையில் வில், அம்பு இல்லாமல் யோகநிலையில் அமர்ந்து, லெஷ்மணர், சீதையுடன் அருள்பாலிக்கிறார்.  ராவணன் வதம் முடிந்து அயோத்திக்கு திரும்பும் வழியில் சுகபிரும்ம ரிஷி ஆசிரமத்தில், ரிஷியின் விருப்பத்திற்க்கிணங்கி தங்கியதால் யோக நிலையில் அமர்ந்துள்ளார். அனுமன் அமர்ந்த நிலையில் வேதம் படித்துக்கொண்டிருக்கிறார். இதை ஸ்ரீராமர் கேட்பதாக ஒரு ஜதீகம் உள்ளது என்று இத்தலத்தின் அர்சகர் தெரிவித்தார். கோவில் மண்டபம் பிராகார சுவர் வேலைப்பாடுகள் அனைத்துமே மிக அற்புதமாக உள்ளது. கிருபானந்தவாரியார் சுவாமிகள் எழுதிய தசாவதார பதிகத்தில்

“சீல நெடுங்குன்றம் சீராமன் தானெடுத்த ஏல அவதாரம் யீரைந்தை – ஞாலமுய்ய  பாடி சுந்தரேசன் பரமனடி ஏத்தயீந்தான் நாடியோது வாருய்வார் நன்று.” என்று இத்தல சிறப்பை கூறியுள்ளார்.





















No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...