லேபாக்ஷி மற்றும் பெனுகொன்டா கோட்டை. (25.1.2025)
லேபாக்ஷி
அமைவிடம்
ஆந்திரமாநிலம், சத்யசாய் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோவில். இறைவன் வீரபத்திரராக மக்களுக்கு அருள்பாலிக்கிறார். பெங்களுரில் இருந்து 120 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
லேபாக்ஷி ஊர் பெயர் காரணம்.
ராமாயணகாவியத்தில் ராவணன் சீதையை கவர்ந்து இலங்கைக்கு செல்லும் நேரத்தில் ஜடாயு என்ற கழுகு ராவணனிடம் இருந்து சீதையைகாக்க ராவணனிடம் போர் செய்தது. ராவணன் இந்த பறவையின் இறக்கையை வெட்டிவிட்டு சென்றுவிட்டான். இந்த ஜடாயுதான் ராமனுக்கு, ராவணனால் சீதை கவர்ந்து செல்லப்பட்டாள் என்ற செய்தி தெரிவித்து, பின் இறந்து விட்டது. ராவணனுக்கும் ஜடாயுவுக்கும் போர்நடந்த இடமே இந்த லேபாக்ஷி என்ற இடம். லே என்றால் பெரிய, பக்ஷி என்றால் பறவை. இதன் காரணமாகவே இந்த ஊர் லேபாக்ஷி என்று அழைக்கப்படுகிறது. இதே போன்ற வரலாற்று கதை கேரள மாநிலத்திலும் உள்ளது. அந்த இடத்தில் கட்டப்பட்டதே ஜடாயு பூங்கா.
வீரபத்ரசுவாமி கோவில்
1530 ஆம் ஆண்டு விஜயநகர பேரரசு காலத்தில் அமைச்சராக இருந்த விருபுன்னநாயகா மற்றும் வீரன்னா என்பவர்களால் கட்டப்பட்டது. கொடிமரம் பலிபீடம், முன்மண்டபம், சுற்று பிரகாரம் அனைத்தும் ஒரு சாராதண கோவில் போன்று மேலோட்டமாக இருந்தாலும். மலையை குடைந்து கட்டிய பெரிய கோவிலாகும். ஒவ்வொரு தூண் சிற்பங்களும் மிக கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளது.
உட்பிரகாரம்.
வீரபத்ரசாமி நன்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, விளக்கேற்றி அர்சகர்களால் அர்ச்சிப்பட்டு நல்ல வழிபாட்டு தலமாகவே விளங்குகிறது. சிறியதாக உள்ள உட்பிரகாரத்தில், லிங்கதிருமேனியுடன் சிவபெருமானின் இரண்டு சன்னதிகளும், மற்றும் அம்மன் சன்னதி, பெருமாள் சன்னதிகளும் உள்ளது. இங்குவருபவர்களில் பெரும்பாலானோர் இந்த இடத்தை சுற்றுலாதமாகவே என்னி பார்வையிட வருகின்றனர். இந்த சன்னதிக்குள் சொற்பமான மக்களே வந்து வழிபாடு செய்கின்றனர்.
சிறப்பு.
ஆதாரம் இல்லாத தூண்.
நாகம் குடைபிடித்த லிங்கம்.
இங்கு பார்க்க வேண்டியது.
1. வீரபத்ரசாமி கோவில்
2. கழுகு சிலை
![]() |
கழுகுசிலை அருகில் ராவணன் பாதம் |
3. பெரிய நந்தி
இவை மூன்றும் ஒரு கி.மீ. தொலைவைவிட மிக குறைவான இடைவெளியில் அமைந்துள்ளது.
கழுகுசிலை அருகில் ராவணன் பாதம்.
பெனுகொண்டா கோட்டை.
அமைவிடம்
ஆந்திரமாநிலம் அனந்தபூரில் இருந்து, 70கி.மீ. தொலைவில் உள்ளது. லேபாக்ஷியில் இருந்து 50கி.மீ. தொலைவில் உள்ளது.
மிக சிதிலம் அடைந்த நிலையில் உள்ள மிக சாதாரணமான கோட்டை. இந்த இடம், ஹொசால்யர், சாலுக்கியர், விஜயநகர அரசு, மராட்டியர், திப்புசுல்தான், நிஜாம், நவாப் என்று அனைவராலும் ஆட்சிசெய்யப்பட்ட இடம். மிக சிதிலம் அடைந்த ஒரு நரசிம்மர் கோவில் இருந்ததாக தெரிகிறது. இளைஞர்கள் அதிகமாக Bike raiding செய்ய இங்கு வருகின்றனர்.
Excellent collection. Detailed description in brief. Super Mam
ReplyDelete