Big Bull Temple (நந்தி கோவில் பசவன்குடி, தரிசனம்-8.2.2025)
Dodda கணபதி.
நந்தி கோவில் நுழைவாயில் அருகில் இந்த விநாயகர் கோவில் அமைந்துள்ளது. ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை, 18 அடி உயரமும், 16 அடி அகலமும் கொண்டது. பெங்களுர் மக்களை மிகவும் கவர்ந்த கோவில் இதுவும் ஒன்றாகும்.
Big Bull Temple
அமைவிடம்
பெங்களுர் நகரத்தை உருவாக்கிய கெம்பகௌடா என்பவரால் கட்டப்பட்ட கோவிலாகும். பெங்களுர் நகரத்தின் தெற்கு பகுதியான பசவன்குடி என்ற இடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. Green Line National College Metro அருகில் அமைந்துள்ளது.
கோவில் சிறப்பு.
4.6 மீட்டர் உயரமும், 6.1 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பெரிய நந்தியை கொண்டதே இந்த கோவில். பக்தர்களையும், மற்றும் சுற்றுலா பயணிகளையும் மிகவும் கவர்ந்த கோவிலாகும். நந்தியின் பின்புறம், சிவபெருமானின் மிக சிறிய சன்னதியுள்ளது. எண்nணையும், வெண்ணையும் பக்தர்களால் சார்தப்படுவதால் இந்த நந்தி கருமையான தோற்றத்துடன் உள்ளது.
கோவில் வரலாறு.
பசவன்குடி என்ற இடம் கடலை விளைய கூடிய நிலமாக இருந்தது. இங்கு விளைந்த கடலைகளை மாடு தின்று அழித்தது. இதன் காரணமாக இந்த பகுதி விவசாயிகள், நந்தி தேவனுக்கு கோவில் அமைப்பதாக சிவபெருமானிடம் பிரார்த்தித்து கொண்டனர். இதன் காரணமாக உருவானதே இந்த கோவில். 1537 ஆம் ஆண்டு கெம்பகௌடா என்பவரால் உருவாக்கப்பட்டது.
Bull Rock Garden
இந்த பெரிய நந்தி கோவில் அருகில் ஒரு இயற்கை எழில் நிறைந்த அடர் தோட்டம் உள்ளது. மக்கள் இங்கு நடைபயிற்ச்சி செய்கின்றனர். மற்றும் Meanual Jim ஒன்றும் உள்ளது. கர்நாடகா மாநிலத்தின் புகழ் பெற்ற, கெம்பகௌடா, விஸ்வேஸ்வரையா, குட்டப்பா மற்றும் மோக்ஷகுண்டம் போன்ற தலைவர்களின் சிலைகளும் உள்ளன.
வால்மீகி ஆசிரம மகாசமஸ்தான ஆதிகுரு பீடம்
இங்கு ஆஞ்சநேயர், சிவன், ராமர் மற்றும் அம்மனுக்கு சிறியதாகவும், தனி தனியாகவும் கோவில்கள் அமைத்திருந்தனர்.
No comments:
Post a Comment