சுப்ரமணியசுவாமி கோவில் ஹலசூர்

 சுப்ரமணியசுவாமி கோவில் ஹலசூர் (தரிசனநாள். 8.12.2024)

அமைவிடம்.





கர்நாடகா மாநிலம் பெங்களுர் நகரப்பகுதியில் ஹலசூர் என்ற மெட்ரோ ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது. (Purple line)

தலவரலாறு.




மைசூர் மகாராஜா ஒருவர், அவரின் தாய்மாமாவிறக்கு கண் நோய் ஏற்பட, அவரை காண்பதற்காக சென்றுள்ளார். செல்லும் வழியில் ஒரு எறும்புபுற்றை கண்டவுடன், என் மாமாவிற்கு கண்நோய் குணமடைந்தால், நான் இந்த இடத்தில் ஒரு கோவில் கட்டுகிறேன் என்று இறைவனை வேண்டி கொண்டதன் அடிப்படையில் கட்டப்பட்டதே இந்த கோவிலாகும். 

அறுபடைவீடுகளில் ஒன்றான “திருத்தனி” போன்று முருகன் இங்கு வீற்றிருக்கிறார்.  மலேசியா நாட்டில் உள்ளது போல் இங்கும் உயரமான ஒரு முருகன் சிலை வடிக்கப்பட்டுள்ளது. பலதோஷங்களுக்கு பரிகாரமாகவும், குறிப்பாக சர்பதோஷநிவர்தி (நாகதோஷம்) தலமாகவும் விளங்ககிறது. இரண்டு வாயில்களை கொண்ட இந்த கோவில் சோமேஷ்வர் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளது. கோவில் எதிரில் உள்ள குளத்தில் தெப்போற்சவம் ஆண்டு தோறும் நடை பெறுகிறது.

சோமேஸ்வர் கோவில்.


அமைவிடம்.

கர்நாடகா மாநிலம் பெங்களுர் நகரபகுதியில் ஹலசூர் என்ற மெட்ரோ ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது. (Purple line)




சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவிலாகும்.  பின் கெம்பகௌடா மற்றும் விஜயநகர அரசர்களால் கட்டுமானபணி  மேம்படுத்தப்பட்டன. பெங்களுரின் பழமையான கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இறைவன் காமாட்சி சமேத சோமேஸ்வர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சிவபெருமான் மகாகாலேஷ்வர் போன்று முக அமைப்பு மீசையுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தார். கற்பகிரக சுற்று பரகாரத்தில், நாயன்மார்கள், மற்றும் கணபதி, முருகன், துர்கை சன்னதிகள் உள்ளன. வெளிபிரகாரத்தில், முதலில் கோவிலுக்குள் நுழைந்தவுடன், வலது பக்கத்தில் விநாயகர் சன்னதியும், இடது பக்கததில், ஈசன் பீமாசங்கர், சந்ரமௌலீஸ்வரர், நஞ்சுண்டேஸ்வரர்,  என்ற பெயரில் தனிதனி சன்னதிகளில், அருள்பாலிக்கின்றனர். கர்நாடக மாநில சிவன் கோவில்களில் நந்திகள் அனைத்தும் மிக பிரம்மாண்டமாக காட்சி தருகின்றன.






No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...