மல்லேஷ்வரம் (தரிசனம்- 8.12.2024).
ஸ்ரீதட்ஷிணமுக நந்தி தீர்த்த கல்யாணி ஷேத்ரம்.
அமைவிடம்.
கர்நாடக மாநிலம், மல்லேஸ்வரம் என்ற பெங்களுர் நகரப்பகுதியில் அமைந்துள்ளது.
வரலாறு
பூமியில் புதையுண்டு இருந்த இந்த கோவில் 1997 ஆம் ஆண்டு மீட்டு எடுக்கப்பட்டது. சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ததாக கருதப்படுகிறது.
கோவில் சிறப்பு.
நந்தியின் வாயில் இருந்து தொடர்ந்து விழும் நீரானது, கீழே இருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் இயற்கையாக அமைந்துள்ளது. லிங்கத்தின் மீது விழும் அபிஷேக நீரானது,அதன் கீழ் இருக்கும் தெப்பக்குளத்தில் சேர்க்கப்படுகிறது. இதைதவிர விநாயகர், முருகன், நவகிரகங்கள் என்று மூன்று சன்னதிகள் உள்ளன. மிக இயற்கையான சூழலில் அமைந்துள்ளது இந்த தெய்வீகம் நிறைந்த இடம்.
காடு மல்லேஸ்வரர் கோவில்.
அமைவிடம்.
கர்நாடக மாநிலம், மல்லேஸ்வரம் என்ற பெங்களுர் நகரப்பகுதியில் அமைந்துள்ளது.
வரலாறு
வெங்கோஜி என்ற அரசரால்,17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில், காட்டு பகுதியில் அமையப்பெற்றதால், காடு மல்லேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த அரசர் வெங்கோஜிராவ் தஞ்ஜாவூரையும் ஆட்சி செய்த காரணத்தால், இந்த கோவில் திராவிட பாணியில் அமைந்துள்ளது. தற்காலத்திலும் ஒரு நல்ல சூழலில் அமைந்துள்ளது மகிழ்சியளிக்கறது.
மேற்கண்ட இந்த இரண்டு கோவில்களையும் தேடி சென்று வழிபட்டபோது, கீழே குறிப்பிட்ட இந்த இரண்டு கோவில்களையும் தரிசனம் செய்யும் வாய்ப்புபெற்றோம்.
ஸ்ரீ கங்காதேவி கோவில்;
ஸ்ரீதட்ஷிணமுக நந்தி தீர்த்த கல்யாணி ஷேத்ரம் கோவிலுக்கு நேர் எதிரே உள்ளது.
கங்கம்மா என்பது கங்கை நதியாகவும், கங்கா என்ற அம்மனாகவும் மக்களால் வழிபடப்படுகிறது.
ஸ்ரீலெஷ்மி நரசிம்மர் கோவில்.
இந்த கோவிலும் கங்காமாதா கோவிலை தொடந்து இருந்தது. இந்த ஆலயம் 1982 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாம். பெங்களுர் நகர மக்கள் தரிசனம் செய்யும் கோவில்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.

No comments:
Post a Comment