பூரி ஜெகன்நாதர்.
ஓடிசாமாநிலம் பூரி என்ற ஊரில் அமைந்துள்ளது இந்த ஜெகன்நாதர் கோவில். 10ஆம் நூற்றாண்டுக்கு முந்தயது என்று அனைவராலும் நம்பப்படுகிறது. 10ஆம் நூற்றாண்டுமுதல் புனரமைப்பு செய்யப்படுகிறது. இங்கு நடக்கும் ரதயாத்திரை தேர்திருவிழா உலகப்புகழ்பெற்றதாகும். ஜெகன்நாதர், பாலபத்ரா(பலராமர்), சுபத்ரா அவர்களே பிரதான கடவுளாகும். இறைவனுக்கு கால நேரத்திற்;கு ஏற்றவாறு அலங்காரம் செய்கின்றனர்.
இந்த பிரதான மூன்று இறைவனும், மரத்தினால் உருவாக்கப்பட்ட தெய்வங்களாகும். இதன் காரணமாக 12 அல்லது 19 வருடங்களுக்கு ஒருமுறை பிரதான கடவுள்கள் மாற்றப்படுகின்றனர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
கூடுதல் தகவல்;.
நம் தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்;டத்தில் அமைந்துள்ள திருக்கோவிலூர், திருவிக்ரமபெருமாள் மரத்தினால் ஆனவர். என்னுடை தஞ்சாவூர் ஒவிய ஆசிரியர், பெருமாள் புனரமைப்புக்கு (வடிவமைப்பு செய்ய) சென்றிருந்தார்.
------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்கந்தபுராணம், பிரும்மபுராணம் இவைகளில் ஜெகன்நாதர் கோவில் பற்றிய குறிப்புள்ளது.
மற்ற சன்னதிகள்
விமலா (பிமலா).
இந்த விமலா தேவி சன்னதி முக்கிய சக்தி பீடங்களில் ஒன்றாகும். தேவியின் தொப்புள் விழுந்த இடம். மஹாளய அம்மாவாசைக்கு எட்டு நாட்கள் முன்பாகவே தொடங்கி, 16 நாட்களுக்கு சிறப்பு பூஜை நடை பெறுகிறது.
காஞ்சி விநாயகர்(உச்சிஷ்டகணபதி).
கஜபதி புருஷோத்தமன் என்ற மன்னர், காஞ்சி இளவரசி பத்மாவதியை மணமுடிக்கிறார். இதன் காரணமாக காஞ்சி இளவரசர் அளித்த அன்பளிப்பே இந்த விநாயகர்.
முக்தி மண்டபம், சூரியா, சரஸ்வதி, புவனேஸ்வரி, நரசிம்மர், ராமர், ஹனுமான், ஈஷானேஸ்வரர் என்ற சன்னதிகளும் உள்ளது.
மஹாபிரசாதம்.
நாள் ஒன்றுக்கு, 6முறை பிரசாதம் செய்யப்படுகிறது. கங்கா, யமுனா என்ற பெயர் கொண்ட கிணற்றில் இருந்து, நீர் எடுத்து மகாலட்சுமி தேவியின் மேற்பார்வையில் உணவு சமைக்கப்படுகிறது. மதியம் வழங்கப்படும் பிரசாதம் சிறப்பானதாக கருதப்படுகிறது.
பயண அனுபவம்.
கோவில் வாசலில் இருந்து பிரகாரம் முழுவதும் தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருக்கின்றனர். மிக கவனமாக நடக்க வேண்டும். மதியம் தரப்படும் மகாபிரசாதம் மிக சிறப்பாக கூறுகின்றனர். மதியம் 12 மணிக்கு சாமிதரிசனம என்று நேரத்தை கணக்கிட்டு சென்றால், மகா பிரசாதம் சாப்பிட (கிடைக்க) நல்ல நேரமாக இருக்கும். கோவில் கோபுரத்தில் கொடி ஏற்றுவதும் மிக சிறப்பான நிகழ்வாகும் இதற்க்கு பூரியிலேயே நாம் தங்கவேண்டும். அப்பொழுதுதான் கொடியேற்றத்தை தரிசிக்க முடியும்.
புகைப்படம் எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதால் கோவிலுக்கு வெளியில் எடுத்த புகைபடத்தை பகிர்கிறேன்.