திருமுல்லைவாயில் (தரிசனநாள்-23.4.2022).

 திருமுல்லைவாயில் (தரிசனநாள்-23.4.2022).






ஊர் பற்றிய செய்திகள்.

கொடிஇடைநாயகி சமேத மாசிலாமணீஸ்வரர் என்ற இந்த ஆலயம் தற்போழுது திருமுல்லைவாசல் என்று அழைக்கப்டுகிறது. தேவார பாடல் பெற்ற தலங்களில் இரண்டு தலங்கள் திருமுல்லைவாசல் என்ற பெயரை கொண்டுள்ளதால் இந்த ஊர் வடதிருமுல்லைவாசல் என்றும் சீர்காழிக்கு அருகில்உள்ள தேவாரபாடல் தலம் தென்திருமுல்லைவாயில் என்று அழைக்கப்படுகிறது. திருவள்ளுர் மாவட்டம் ஆவடி வட்டத்தில் அமைந்துள்ளது இந்த இடம்.

திருதாயுகத்தில்- இரத்தினபுரம்.

திரேதாயுகத்தில்- வில்வவனம்;.

துவாபரயுகத்தில்- சண்பகவனம்.

கலியுகத்தில் முல்லைவனம். என்று அழைக்கப்பட்டது.

தலவரலாறு.

ஓணன், வாணன், காந்தன் என்ற குரும்பர்கள் மீது காஞ்சி அரசன் தொண்டைமான் படை எடுத்தார், குரும்பர்கள் படையை விரட்டி அடித்தனர். சோர்வுடன் தொண்டைமான் பாசரைக்கு திரும்பினான். வரும்வழியில் யானையின் காலில் முல்லை கொடி சுற்றிக்கொண்டது. தொண்டைமான் யானையின் முதுகில் அமர்ந்திருந்தப்படியே கொடியை வெட்டினார். அந்த இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வரவே மன்னன் திடுக்கிட்டு இறங்கிப்பார்த்தார்.  இறைவனின் திருஉருவ லிங்கத்தை கண்டு கண்ணீர்பெருகியது, உடல்வியர்த்து போனது. உடனே அவரின் உடைவாளால் கழுத்தை அறுத்துக்கொள்ளும் சமயம்,இறைவன் தோன்றி “மன்னா வாளால் வெட்டுண்டாலும் மாசிலாமணியாக இருப்போம்” என்று சொல்லி “நிறுத்துக”. என்றார். நந்தியின் உதவியுடன் குரும்பர்களை வெற்றிகொண்டு, குரும்பர்களின் வெள்ளெருக்கு தூண்களை கருவறையின் வாயிலாக கொண்டு, மாசிலாமணீஸ்வரர்க்கு கோவில் அமைத்தார். மகாமண்டபம், பட்டி மண்டபம், கல்யாணமண்டபம் அமைத்து  வழிப்பட்டார்.

சிறப்புகள்.

1. வெட்டுண்டமேனியாதலால் நித்ய சந்தனகாப்பு.

2. அம்பாள், ஈஸ்வரன் இரண்டு கருவறைக்குள்ளும், கல்வெட்டுகள் உள்ளன.

3.சுந்திரமூர்த்திநாயனாரால் பதிகமும், வள்ளல் சாமிகளால் அருட்பாவும், அருணகிரிநாதரால் திருப்புகழும் பாடல் பெற்ற இடமாகும். சேக்கிழாரின் பெரியபுராணத்திலும் இக்கோவில் பற்றிய குறிப்புள்ளது.

4. இரண்டு வாயில்கள், 16 கால் மண்டபம்.


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...