காளிகாம்பாள் கோவில் மற்றும் இரட்டை கோவில்கள். (தரிசன நாள்.17.4.2022).

சென்னை (St.George Fort) பாரிமுனையில் நான்கு நூற்றாண்டுகளை கடந்து. விஸ்வகர்மா என்ற சமூகத்தினரால் நிர்வகித்து பராமரிக்கப்பட்டு வருகிறது. கடற்கரையில் அமைக்கப்பட்ட இந்த காளி, புனித George கோட்டை வரவுக்கு பின்பு, 1678ஆம் ஆண்டு முதல் பாரிமுனை தம்பு செட்டி தெருவில் உள்ள கோவிலில் அருள்பாலிக்கிறார். அங்குசம், பாசம், நீலோத்பல மலர், வரதமுத்திரை இவற்றடனும், சோமன், சூரியன், அக்னி என்ற மூன்று கண்களுடனும், நவரத்தின மணிமகுடம் சூடி கொண்டு, இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டு கொண்டு அமர்ந்து அருள்பாலிக்கிறாள் அம்பிகை.

                                   

1. 1980 –ல் 10 மீட்டர் உயரம் கொண்ட ராஐகோபுரம் அமைக்கப்பட்டது.

2. 2014 –ல் புதிதாக ராஐகோபரம் நிறுவப்பட்டது.

3. 1677- ஆம் ஆண்டு மராட்டிய பேரரசர் சத்ரபதி Sivaji  இக்காளியை வழிப்பட்டார் என்று, கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

4. சுதேசமித்திரன் பத்திரிக்கையில் மகாகவி சுப்ரமணியபாரதியார் பணியாற்றிய போது பாரிமுனையில் தங்கி இருந்த காலத்தில், இந்தகாளியை வழிபட்டார். “யாதுமாகி நின்றாய் காளி” என்ற பாடல் இந்த காளியை நினைந்து புனையப்பட்டதேயாகும்.

இரட்டைகோவில்.

               

சென்னி மல்லிகேஸ்வரர், சென்னி கேசவ பெருமாள் கோவில், என்ற இரண்டு கோவில்களும் பாரிமுனையில் அமைந்துள்ளது. 1757 ஆம் ஆண்டு பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனி அவர்களின் வணிக வசதிக்காக கோவிலை இடித்தனர். மணலி முத்துகிருஷ்ண முதலியாரின் முயற்சியில் மீண்டும் இந்த கோவில்கள் 1762 ஆம் ஆண்டு உயிர்தெழுந்தது.

மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் திருக்கோவில். 

கோவில் நுழைவாயிலில் மணிமண்டபம் காணப்படுகிறது. கிழக்குமுகமாக மல்லீகேஸ்வரர் சன்னிதியும், தெற்கு நோக்கி பச்சைகல் திருமேனி யுடன் தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் அம்பிகை காட்சி தருகிறார். மஹாதேவர், தட்சிணாமூர்த்தி, கைலாசநாதர், காசிவிஸ்வநாதர், ஆதிபுரீஸ்வரர், பைரவர், நடராஐர், என்ற பலரையும் தரிசனம் செய்யலாம். இந்த சிவாலயம் பாரிமுனை லிங்கிசெட்டி தெருவில் அமைந்துள்ளது. கேசவ பெருமாள் கோவிலை பற்றி நாங்கள் தரிசித்த அன்று தெரிந்திருக்கவில்லை.     


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...