திருவலிதாயம். (தரிசன நாள்-23.4.2022).
ஜெகதாம்பிகை உடனுறை திருவல்லீஸ்வரர் கோவில். சென்னையில் பாடி என்று அழைக்கப்படும் இடமே திருவலிதாயம் என்று அழைக்கப்பட்டது. ஆவடி செல்லும் சாலையில் பாடி லூகாஸ் டி.வி.எஸ். பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள படவேட்டம்மன் கோவிலுக்கு நேர் எதிர் சாலையில் அமைந்துள்ளது இந்த கோவில்.
குருபகவான் தலம்.
நவகிரகங்களில் ஒன்றான வியாழன் என்று சொல்லப்படும் குருபகவான் தான் செய்யத பாவம் நீங்க, மார்கண்டேய மகரிஷி வழிகாட்டுதல் படி இந்த கோவில் தீர்தத்தில் நீராடி, இறைவனை வழிப்பட்டார். குருபகவான் வழிபட்ட தலம் ஆதலால் பிராகாரத்தில் ஈஸ்வரனை நோக்கியப்படி யானைவாகனத்தில் அமர்ந்தகோலத்தில் குருபகவானுக்கு தனிசன்னதியுள்ளது.
திருவல்லீஸ்வரர்.
பரத்வாஜர் வலியனாக பிறந்ததால் மிகவும் வருந்தினார். கொன்றைமரத்திற்கு அடியில் இருந்த லிங்கத்தை பூஜித்து வணங்கினார். திருவல்லீஸ்வரர் பறவைகளின் தலைவனாகும்படி அருள்செய்தார். இதனாலேயே திருவல்லீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.
வலியன்.
வலியன் என்றால் பறவை என்று பொருள். வலியன் பறவை, இரட்டைவால் குருவி என்றும் கரிக்குருவி என்றும் வழக்கத்தில் அழைக்கப்படுகிறது. பறவை ஆராய்சியாளர்கள் வலியன் என்பதை பரத்வாஜ் என்றும் குறிப்பிடுவார்கள் என்ற குறிப்புள்ளது.
கோவில் அமைப்பு.
கோவில் வளாகத்தினுள் புறாக்கள் அதிகமாக உள்ளன. ஆன்மீக நூல்நிலையம் உள்ளது. நீர்நிலைகள் பாதுகாப்பின் தேவை பற்றிய பதாகைகள் உள்ளன. மிக தூய்மையாக பராமரிக்கப்படுகிறது. பசுமடம், மற்றும், தேவாரம், திருவாசகம், திருமந்திரம் தாங்கிய பலகைகள் என்று கூடுதல் சிறப்புடன் ஆலையம் காட்சி அளிக்கிறது.
கமலி, வல்லி உடனுரை விநாயகர்.
பிரும்ம புத்திரிகளான கமலி, வல்லியை விநாயகர் இந்த தலத்தில் திருமணம் செய்துகொள்கிறார். இவர்களின் உற்சவமூர்த்தி சிலையை இங்கு காணலாம்.
தேவாரத்துடன் திருபுகழ், திருவருட்பா பாடல்களும் பாடல் பெற்ற தலமாக திருவலிதாய ஆலையம் காட்சியளிக்கிறது.
No comments:
Post a Comment