நாடக மேடை


                                                       
                                                   

நாடக மேடை

ஆறாம் வகுப்பு கோடை விடுமுறைக்கு நான் என்னுடைய பெரியம்மாவீட்டிற்க்கு சென்றால் அங்கு என்னுடைய அக்கா இருவரும், அவர்களுடைய அத்தை வீட்டிற்க்கு கிளம்பிக்கொண்டிருந்தார்கள். உடனே நானும் அவர்களுடன் கிளம்பிவிட்டேன். ஆனால் அங்கு என்னால் மனம் ஒன்றி இருக்க முடியவில்லை. திருச்சிக்கு மிக அருகில் உள்ள பொன்மலைப்பட்டி என்ற கிராமம்தான் அவர்களின் அத்தை வீடு,  தண்ணீர் பஞ்சம் வேறு, புகைவண்டி நிலையத்தில், வண்டி நிற்க்கும் நேரத்தில் தண்ணீர் பிடிக்க வேண்டும் இவ்வாறு பல வழிகளில் சமாளித்து வந்தார் அவருடைய அத்தை தண்ணீர் பஞ்சத்தை. இந்நிலையில் நான் வீட்டில் இருக்க சங்கடப்பட்டுக்கொண்டு வெளியில் சென்றேன். அவர்கள் வீட்டிற்க்கு மிக அருகிலேயே ஒரு மாதாகோவில் இருந்தது. அங்கு ஏதோ விழா நடக்கப் போகிறது, அதனால் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர். நான் அவர்களுடன் நன்கு பழக ஆரம்பித்தேன். உடனே அந்த ஆசிரியை நீ நாடகத்தில் நடிக்கிறாயா? மாதா வேடம் உனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றார். அவ்வளவுதான், எனக்கு மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை. ஏன் என்றால் நான் பள்ளிக்கூடத்திற்க்கு போவதே, கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறத்தான். உடனே சரி என்று சொல்லிவிட்டேன். அவர்கள் உடனே உனக்கு வசனம் ஒன்றுமே கிடையாது, “நான் இருக்கிறேன் மகனே உன் துயர் துடைக்க” என்று மட்டும் சொன்னால் போதும் என்றார். வேறு ஒருவர் வந்து என்னை யார்? எங்கிருக்கிறேன்,?என்ற விபரங்கனை கேட்டறிந்தார். நான் உடனே என்னுடைய அக்காவின் மாமா ,அத்தையின் பெயர் மற்றும் பிற விபரங்களை தெரிவித்தேன். அவர் உடனே வீட்டிற்க்கு சென்று என்னை நாடகத்தில் நடிக்க வைக்க அவர்களிடம் அனுமதி கேட்டார். உறவினர் தயங்கினாலும் நான் அவர்களை சம்மதிக்க வைத்துவிட்டேன். நாடகத்தில் ஒருவர் என்னிடம் வந்து அவருடைய துயரை சொல்லி அழுவார் நான் அப்பொழுதுதான். இந்த வசனத்தை சொல்ல வேண்டும். ஆனால் இந்த நாடகத்தில் நான் இடம் பெரும் காட்சி தான் இந்த Blog ன் உச்சம். மூன்றடி நீளம் உள்ள ஒரு பலகையில் நான்கு பக்கமும் ஒரு கயிறை கட்டி, பத்தடி உயரத்திற்க்கு என்னை தூக்குவார்கள், நான் கயிறை கூட பிடித்துக்கொள்ள முடியாது. ஏன் என்றால் ஒரு கையில் சிலுவையை வைத்துக்கொள்ள வேண்டும் மற்றொரு கையை அருள் செய்வது போல் காட்ட வேண்டும். ஒத்திகை நேரம் முழுவதும் அந்த பலகையில் என்னை நிற்க்கவைத்து என்னை மேலும் கீழுமாக கூறையின் மேல் நின்று என்னை இருவர் கயிறை கொண்டு தூக்குவார்கள். முதலில் பயமாக இருந்தாலும் பிறகு உற்ச்சாகம் கொண்டேன். மறுநாள் மாலை நிகழ்ச்சி ஆரம்பித்தது. எனக்கு முகச்சாயம், மற்றும் வெள்ளை நிறத்தில் ஒரு அங்கி, இடுப்பில் வெளிர் நீல நிறத்தில் ஒரு துணி கட்டப்பட்டது. தலையில் தங்க நிறத்தில் மினுமினுப்பாக ஒரு துணி அதன் மேல் கிரீடம் வைத்து, என்னை பலகையில் நிற்க்க வைத்து பத்தடி உயரத்தில் தூக்கிபிடித்து, பலவண்ண விளக்குகளை என் முகத்தில் ஒளிரவைத்து திரையை விலக்கியபின் பார்வையாளர்கள்  பயங்கர ஆரவார ஒலி எழுப்பினர். அவர்களுக்கு நான் அந்தரத்தில் நிற்பது போன்று தோன்றும். நாடகம் சிறப்பாக முடிவடைந்தது . தொடர்ந்து மூன்று நாட்கள் பொன்மலை பட்டியில் நான் இருந்தவரை “மாதா பொண்ணு” என்று ஒரே பிரபலம்தான்.  

4 comments:

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...