திக்கு திசை தெரியாமல்.
1984 செப்டம்பர்;, தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரியில் நான் சேர்ந்துஇருந்தேன்.அக்டோபர் 31 ஆம் தேதி எப்பொழுதும் போல் மாலை 3.30 மணிக்கு கல்லூரி நேரம் முடிந்து நான் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்க்கு வந்தால், அப்பொழுது; ஒரு பெண்மணி என்னிடம் வந்து, “ சீக்கிரம் வீட்டுக்கு போமா” மாண்புமிகு பிரதமர் இந்திராகாந்தி அம்மாவை சுட்டுடாங்களாம் என்றார். பயம், கவலை என்னை சூழ்ந்தது. பூண்டியில் இருக்கும் என்னுடைய வீட்டிற்க்கு செல்ல இரண்டு பேருந்துக்களில் பயணிக்க வேண்டும்.மீண்டும் கல்லூரிக்கே செல்ல முயன்றேன். ஆனால் அங்கு யாரும் இல்லை என்றால் என்ன செய்வது என்ற தயக்கம் ஏற்பட்டது. பேருந்து நிலையத்திற்க்கு நடக்க ஆரம்பித்தேன். அனைத்து கடைகளும் மிகவும் வேகமாக மூடிக்கொண்டிருந்தார்கள். தெருவில் ஒரு பெண்மணிக்கூடஇல்லை. பயம் கடுமையாக பற்றிக்கொண்டது. பேருந்து நிலையம் அருகில் பெரியம்மாவின் வீடு உள்ளது.(அம்மாவின் சித்தி பெண்) எனக்கு அவ்வளவு பழக்கம் கிடையாது அவர்களிடம். இருந்தாலும் அவர்வீட்டிற்க்N;க சென்று விட்டேன். பெரியப்பா தஞ்சை தலமை தபால் நிலையத்தில் பணி புரிந்ததால். என் அப்பாவிற்க்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிப்பது ஒன்றும் கடினமாக இல்லை. மறுநாள் உடுத்திக்கொள்ள உடை கூட கிடையாது. பிறர் ஆடையை பகிர்ந்து கொள்வதில் விருப்பம் இல்லை. தூக்கம் சரியாக இல்லை ,சாப்பிடபிடிக்கவில்லை, குளிக்காமல் இருந்ததால் அருவருப்பு உணர்ச்சிவேறு. மறுநாள் காலையில்; ஊருக்கு பேருந்து செல்கிறதா என்று பார்க்க சென்றேன். என் நல்ல நேரம் ஒரு நீடாமங்கலம் பேருந்து நின்று கொண்டிருந்தது. உள்ளே சென்று பார்தால் என்னை போன்ற மாணவிகள் இருந்தனர். நான் இருக்கும் மார்கத்தில் இருந்து இவ்வளவு பெண்கள் படிக்க வருவது எனக்கு அப்பொழுதுதான் தெரிந்தது. மன்னார்குடியில் இருந்து அப்பா பணிமாற்றம் காரணமாக பூண்டிக்கு வந்ததால் எனக்கு வசிக்கும் ஊர், படிக்கும் இடம் இரண்டுமே புதிதானது. நான் உடனே பெரியம்மாவிடம் சொல்லி விட்டு கிளம்பிவிட்டேன். பிறகுதான் சக மாணவிகள் மூலம் தெரிந்தது கல்லூரி முதல்வர், வெளியூர் மாணவிகளை கல்லூரி விடுதியில்; தங்க வைத்து, அனைத்து வழிதடங்களுக்கும் பேருந்து மூலம் வீட்டிற்க்கு பாதுபாப்பாக மாணவிகளை அனுப்பஎடுத்துக்கொண்ட முயற்ச்சியை அறிந்தேன். மனமார நன்றியை தெரிவித்துவிட்டு அறிவுபூர்வமாண முடிவு எடுக்கதெரிந்துகொண்டு பயணித்தேன்.
.
No comments:
Post a Comment