History of Tanjore Painting

தஞ்ஜாவூர் ஓவிய வரலாறு


தஞ்சாவூரை ஆண்ட  தஞ்சன் என்ற மகாராஜா, அவருடைய மக்கள் அனைவரும் பல செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிகவும்  ஆசைப்பட்டார். ஆனால் அக்காலத்தில் கல்வி என்பது அனைத்துதரப்பு  மக்களுக்கும் எளிமையாக கிடைத்து விடவில்லை. அதனால் பல நல்ல பயனுள்ள செய்திகளை சுவரில் ஒவியங்களாக வரைந்து அதனை மக்களின் பார்வைக்கு கொண்டு வந்தார். இதுவே சுவர் ஒவியத்திற்க்கு அடிப்படையானது. பின்னர் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த முதல் சரபோஜி மன்னர்,மற்ற மன்னர்களின் எண்ணங்களில் இருந்து மாறுபட்டிருந்தார். படை எடுப்பு பிற நாடுகள் ஆக்கரமிப்பு என்றில்லாமல், கலைஞர்ளை ஆதரித்து கலையை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார் அவரை தொடர்ந்து வந்த இரண்டாம் சரபோஜி மன்னர்,அவருடைய மூதாதையர்களின் உருவத்தை தர்பாரில் இருப்பது போன்ற வடிவத்துடன் சுவரில் வரைய முற்பட்டு அதற்கான புதிய முயற்ச்சியாக உருவத்தை சொதை (embossing) உருவில் செய்ய முற்பட்டார். இந்த உப்பல் வேலைக்கு,குண்டுமணி, புளியம்கொட்டை, பாகு, முட்டை வெள்ளைகரு என பல பொருட்களை பயன்படுத்தினர்.





 பிறகு வடமாநிலம் மற்றும் தென் மாநிலங்கள் இணைந்ததில் மராட்டியர்கள் பட்டு போன்ற உயர்தரமான துணிகளை பயன்படுத்தி அலங்காரம் செய்தல் மற்றம் ஓவியம் என்று பலவகையான கலைகளில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நாயக்க மன்னர்கள் தஞ்சையை ஆட்சி செய்தனர். நாயக்க மன்னர்கள் வைஷ்ணவ சம்பிரதாயத்தை பின்பற்றியதாலும் ,மகாவிஷ்ணு அலங்கார பிரியர் என்பதாலும் ,இந்த வகையான ஓவியங்களில் கிருஷ்ணர் கிருஷ்ணலீலைகள் இவற்றை அடிப்படையாக கொண்டே உருவாக்கப்பட்டன.


  ஆங்கிலேயரின் படைஎடுப்புகாரணமாக கலைஞர்களுக்கு ஏற்பட்ட நலிந்த நிலையை மேம்படுத்தும் “கைவினை கலைஞர்கள் அபிவிருத்தி திட்டம்” என்ற திட்டத்தை அரசு கொண்டுவந்ததால் பல மாற்றங்கள் இந்த ஒவியத்தில் ஏற்பட்டது. பால் ஊறும் தன்மை கொண்ட பலா மர பலகையில் செய்ய ஆரம்பித்து ,இப்பொழுது தண்ணீர் உறிஞ்சாத பிளைஉட்டில் செய்கின்றனர். தங்க ரேக் பயன்படுத்துவதால் ஒவியத்தின் விலை அதிகமாக இருப்பது மட்டுமல்லாமல் நீண்ட நாட்கள் நிலைத்திருக்ககூடியதாக உள்ளது. மற்ற வகையான ஓவியங்கள் போல் அல்லாமல் காலம் கடந்தும் பழமையானது(antique) என்ற பெருமையை பெறுகிறது. இந்த வகையான ஒவியங்கள் மூன்று வகைப்படுகிறது. அவையாவன ஸ்ரீரங்கம் உறையூர் மைசூர் என்று பெயர் கொண்டு ஒவியங்கள் செய்யப்படுகின்றன. விலை உயர்ந்த ஓவியமாக இருப்பதால் வீட்டில் வைத்துக்கொள்வதை மிகவும் கௌரவமாக மக்கள் கருதுகின்றனர்.


 முழுஇறை சிந்தனையுடன் செய்யப்படுவதால் வீட்டில் வைத்து வணங்கும் போது நல்ல அதிர்வலைகளை உருவாகிறது. எனது தஞ்ஜாவூர் ஓவிய ஆசிரியர் திரு. ஜே.வி.கணேசன் என்ற தேவநாதராமானுஜதாசர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  

4 comments:

  1. Yes I feel proud that I am having such one, that too done by you.

    ReplyDelete
  2. I too have such one (Goddess Rajarajeswari ,ofcourse done by you) which I feel a treasure for me

    ReplyDelete

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...