மச்சபுரீஸ்வரர் ஆலயம்.


கும்பகோணத்தை அடுத்துள்ள பண்டாரவாடை என்ற ஊரில் அமைந்துள்ளது இந்த ஆலயம். சாதாரணமாக, கோவில்கள் அனைத்தும் எதாவது ஒரு சிறப்பை கொண்டிருக்கும். ஆனால் இந்த தலத்தில் அமைந்துள்ள அனைத்து இறைவனும் ஒவ்வொரு சிறப்பை கொண்டு நமக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கின்றனர். அடிப்படையில் இது  ஒரு சிவாலயம். நான்கு வேதங்களையும் அசுரர்கள் அபகரித்து சென்றுவிடுவதால் பிரம்மா, காக்கும் தொழிலை கொண்ட திருமாலிடம் முறையிடுகிறார். திருமால், அந்த அசுரர்களை அழிப்பதற்காக மச்சாவதாரம்( மீன் வடிவம்) எடுக்கிறார். வேதங்களை கவர்ந்துகொண்டு சென்ற அசுரர்கள் பூமிக்கடியில் சென்றுவிடுவதால், அவர்களை எளிதில் சென்றடைய நீருக்கடியில் செல்ல மச்சஅவதாரம் எடுத்து அசுரர்களை அழித்து, வேதங்களை பிரம்மாவிடம் ஒப்படைக்கிறார்.அழிக்கும் தொழிலை கொண்ட சிவபெருமானின் பணியை திருமால் செய்ய நேர்ந்ததால், அவருக்கு உண்டான தோஷத்தை நிவர்த்தி செய்ய சிவபெருமானை நோக்கி தவம் செய்ததால், சிவலிங்கத்துடன் ஒட்டினால் போன்று ஒரு மீன் உள்ளது. சிவனும் திருமாலும் ஒருசேர அமைந்துள்ளதால், இத்தலத்தில் பெருமாள் கோவில் போன்று சொர்கவாசல் திறந்து, வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

மச்சாவதாரம் எடுத்து அசுரனை வதைசெய்யும் காலத்தில், உலகை காக்க, முருகன், இவரிடமிருந்து சங்கு மற்றும் சக்கரத்தை பெற்றுக்கொண்டதால், இத்தலத்தில் முருகப்பொருமான் சங்கு சக்கரத்துடன் வள்ளி தெய்வானை ஒரு சேர காட்சி தருகிறார். திருப்புகழில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமாளே என்றே முடியும், முருகப்பெருமான் சில காலங்கள் பெருமாளாக, காக்கும் பணியாற்றியமையால்தான் திருப்புகழில் பெருமாளே என்று முடிவடைகிறது என்று அந்த அர்சகர் சொன்ன விளக்கம் மிக பொருத்தமாக உள்ளதை நானும் உணர்ந்தேன். பல ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கொடுத்த விளக்கத்தை காட்டிலும் இந்த அர்சகரின் விளக்கம் மிகப்பொருத்தமாக(apt) இருந்தது.    

      வேதங்களை அபகரித்து சென்ற நேரத்தில் பூமியில் பிறக்கும் குழந்தைகள்  அசுரகுணத்துடன் இருக்கின்றனர். இவர்களுக்கு நல்ல குருவாக இருக்க, தட்சிணாமூர்த்தி வடிவத்தில் இருக்கும் சிவபெருமானின் சன்னதியில் பூதகணங்கள் தட்சிணாமூர்த்தியின் பாதத்தில்  இல்லாமல் இறைவனின் சிரசில் பூதகணங்கள் இருப்பது போன்று அமைந்துள்ளது, தட்சிணாமூர்தி சன்னதி. 

   திருமாலின் முதல் அவதாரமான மச்சாவதாரத்திலேயே அவர் இங்கு வந்து தவம் செய்தமையால் பல சித்தர்கள் ஆதிகாலத்திலேயே,  சிவனடியை வேண்டி, இங்கு வந்து  தவம் செய்ய ஆரம்பித்தனர். இதற்க்கு அச்சாரம் இட்டார் போல் பாபா சித்தரின் சன்னதியும்  இந்த ஆலையத்தில் உள்ளது.(ரஜினிகாந் பாபா பட சித்தர்) 

 அம்பிகை, காஞ்சி காமாட்சி போன்று  காமாட்சியாகவே, ஸ்ரீ சக்கரத்தில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். அம்பிகை, பாலா திரிபுரசுந்தரி போன்று குழந்தையின் மன மகிழ்ச்சியுடன்  இருக்கிறாளாம்.  மகிழ்வுடன் இருப்பதால் நித்திய அலங்கரத்துடன் காட்சி தருகிறாள். 13 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடுகிறார்கள். அம்பிகைக்கு நேரெதிரில்  உள்ள காளிக்கும் இவரின் மகிழ்ச்சி தொற்றிகொண்டதால். துர்கை அம்மனும் புன்னகை பூத்த முகத்துடன் இருக்கிறார். 

    நான் பார்த்த சிறப்பு இந்த கோவில் அர்சகரும் அம்பிகை போன்றே மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் காணப்பட்டார். அர்சகர் எனக்கு இந்த புராண கதையை கூற ஆசை, ஆனால் வரும் பக்தர்களில் பலரும் 1மணி நேரத்தில் நான் 3 கோவில்கள் முதல் 5 கோவில்கள் வரை பார்க்க  வேண்டும் என்று கூறுகின்றனர் என்று சொல்லி,  உங்களுக்கு விருப்பமா? என்று கேட்ட பின்னரே, புராணகதையை மிக உற்சாகத்துடன் எங்களுக்கு கூறினார். நானும் என் கணவரும் ஒரு மணி நேரத்திற்க்கு மேல் இந்த ஆலயத்தை வழிபட்டு இன்புற்றோம். 


நான் படித்த பள்ளிகள்

     முதல் வகுப்பு

    திருப்பூந்துருத்தி என்ற ஊரில் (தஞ்சாவூரில் இருந்து 20 கி;மி.இருக்கும்) என்னுடை அப்பா போஸ்ட் மாஸ்டராக இருந்த போது நான் அங்கேயே பிறந்து, முதல் வகுப்பம் படிக்கும் வரை இருந்தோம். முகமதியர் நடத்தி வந்த ஒரு தனியார் பள்ளி இது. வார விடுமுறை வெள்ளிக்கிழமை. மற்ற நாட்கள் பள்ளி உண்டு. இதை தவிர எனக்க வேறு எதுவும் நினைவில்லை.

இரண்டு முதல் நான்காம் வகுப்பு வரை

  T.B.Sanitorium  என்று அழைக்கப்பட்ட செங்கிப்பட்டிக்கு அப்பா பணிமாற்றம் செய்யப்பட்டு அரசினர் நடுநிலைப்பள்ளியில் படித்தேன். (நிஜ டோலக்பூர் என்ற பெயரில் இந்த ஊரைப்பற்றி ஒரு blog  போட்டுள்ளேன்) பெரிய கூடம்தான் முழு பள்ளியின் அளவே. எங்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வெளியூரில் இருந்துதான் வருவார்கள். . எனக்கு அந்தோனிசாமி என்று ஒரு ஆசிரியர் இருந்தார். அவருடைய மகன்கள் பெயர் சுதந்திரம் மற்றும் குடியரசு, பெயர்கள் வித்தியாசமாக வைத்ததால் நன்றாக நினைவருக்கிறது.பள்ளி வாசலில் மிக பெரிய கொடுக்காபுள்ளி மரம் இருக்கும். அருளாநந்தம் என்ற ஆசிரியர்  பாடல்கள் பாடி எங்களை ஊக்குவிப்பார். கேட்க அற்புதமாக இருக்கும்,ஆனால் அவர் இசை ஆசிரியர் கிடையாது பாடம் எடுப்பவர். நான் நன்றாக ஊர் சுற்றுவேன். புத்தகத்தை வைத்து படித்ததோ அல்லது ஆசிரியர்கள் நடத்திய பாடங்களோ என்நினைவுக்கு வரவில்லை.

ஐந்தாம் வகுப்பு.

  அப்பா இப்பொழுது திருக்காட்டுப்பள்ளி  தலைமை அஞ்சலகத்தில் clerk அதனால் நாங்கள் அருகில் உள்ள விஷ்ணம்பேட்டை என்ற கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தோம். அந்த கிராமத்தில் இருந்த பஞ்சாயத் யூனியன் தொடக்கப்பள்ளியில் படித்தேன். எனது வகுப்பு ஆசிரியரும் பள்ளியின் தலமை ஆசிரியருமான திரு.கோதண்டராமன் அவர்கள் இப்பொழுது கண்ணை மூடினாலும் எதிரே நிற்க்கும் அளவுக்க மனதில் படிந்தது மட்டுமல்லாமல் படிப்பை பற்றி என்னை யோசிக்க செய்தவரும் அவரே. 5ஆம் வகுப்பில் தான் எழுத படிக்க ஆரம்பித்தேன். ஆறாம் வகுப்பிற்க்கு அருகில் உள்ள திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமிஐயர்  உயர்நிலைப்பள்ளியில்தான் சேர வேண்டும். இந்த பள்ளியில் படித்து விட்டு சென்றவர்களில் ஒருவர்  கூட உயர்நிலைப்பள்ளியில் அதாவது ஆறாம் வகுப்பில் தோல்வி அடைந்ததே கிடையாது. நான் தோல்லி அடைந்து விடக்கூடாது என்பதற்காக மிகவும் கடினமாக முயன்று. எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்தார்.  அங்கேயே படித்த மாணவர்கள் அனைவருமே என் அளவு மக்கு கிடையாது. 

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை.

சர் சிவசாமி ஐயர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி திருக்காட்டுப்பள்ளியில் படித்தேன். below average  மாணவியாகவே  படித்து முடித்தேன். தையல் வகுப்பு எனக்கு மிகவும் புடிக்கும். எம்பிராய்டரி மற்றும் பல கைவேலைகளை இந்த நேரத்தில் கற்றுக்கொண்டேன்.  என்னுடைய ஆர்வம் எனக்கு புரிந்தது. மங்களம் என்ற இசை ஆசிரியை, பாட்டு வகுப்பில் சில நேரங்களில் கதை சொல்வார்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இது என்னுடைய கற்பனை வளத்தை அதிகரித்தது. பின் நாளில் நானும் கற்பனையாக பல கதைகளை சொல்வதில் திறமையும் ஆர்வமும் கொண்டேன்.  தற்பொழுது ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயாவில் மாணவர்களுக்கு என்னுடைய கற்பனையில் கதைகளை சிறப்பாக சொல்வதற்க்கு அடித்தளம் இட்டவர் இந்த ஆசிரியைதான். பெரிய பள்ளி ஆதனால் பலரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு.

 அப்பா இப்பொழுது பணி மாற்றம் காரணமாக அய்யம்பேட்டையில்  போஸ்ட் மாஸ்டராக பணியாற்றினார். புனித கேப்ரியேல் பெண்கள்  உயர்நிலைப்பள்ளியில் படித்தேன். பட்ட மேற்படிப்பு படித்து இருக்கிறேன் என்றால் அதற்க்கு இந்த பள்ளி தான் காரணம். Sister மோட்சராகினி என்னுடைய வகுப்பு மற்றும் ஆங்கில ஆசிரியை  என்னால் மறக்க முடியாத ஆசிரியை. என்வாழ்வின் முன்னேற்றத்திற்க்கு ஒளி ஏற்றியவர். பல நாடகங்களில் பங்கு கொண்டேன். என்னிடம் பேச்சு திறமை உள்ளது என்பதை உணர்ந்தேன். செஞ்சுலுவை சங்கத்தின் முலம் பல சமூக பணி செய்தேன். சமூக சிந்தனை வளர்ந்தது. எனது பல சமுக செயல்பாட்டுக்கு அடித்தளம் ஆனது. இன்று புதுச்சேரியில் சமூக செயல்பாட்டாளர் என்ற பெயரில் பல சமூக பணிகளை செய்து வருகிறேன். சமூக நலத்துறை முலம் பல கல்லூரி, பள்ளி நிகழ்ச்சிகளில் விழிப்புணர்வு பற்றி உரையாற்றுகிறேன்.

மேல் நிலை வகுப்புகள்.

 மன்னார்குடி அருகில் உள்ள திருமக்கோட்டையில் அப்பா போஸ்ட் மாஸ்டராக பொறுப்பேற்றார். திருமக்கோட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். மாணவரகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதுவும் எங்கள் வகுப்பில் 4 பெண்கள் மட்டுமே படித்தோம். ஊர் மிகவும் சிறியது. ஆனைத்து ஆசிரியர்களும் வெளியூரில் இருந்தே வருவர். Bus Break Down அல்லது வேறு பிரச்சனை என்றால் ஒருவருமே வரமாட்டார்கள். எப்படியோ பிளஸ் 2 முடித்தேன்.

பி.ஏ.பொருளாதாரம்.

தஞ்சாவூர் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் படித்தேன். அப்பா அருகில் உள்ள பூண்டி என்ற ஊரில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றியதால் நான் தினமும் பேருந்தில் பயணித்து கல்லூரிக்கு செல்வேன். கல்லூரியில் பல அனுபவங்கள் எனது பொது அறிவையும் சமூக பழக்க வழக்கங்கனையும் பெற்று தந்தது. எனது மேடைப் பேச்சு நன்கு வளர்ந்தது. கல்லூரி வருட மலரில் சிறந்த பேச்சாளர் மற்றும் பல பரிசுகளை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர் என்று புகைப்படத்துடன் வெளியிட்டு, என்னை கௌரவித்தனர்..  1987 –ல் பி;ஏ. பொருளாதாரம் முடித்தேன்.30 ஆண்டுகள் கழித்து பட்ட மேற்படிப்பை (சமூகவியல்) அண்ணாமலை பல்லலை கழகத்தில் தொலை தூர கல்வி மூலம் படித்துமுடித்தேன். 


தமிழ் தட்டச்சுப்பயிற்ச்சி.

 தமிழ் தட்டச்சுப்பயிற்ச்சி.

கல்லூரி நாட்களில் என்னுடன் பயின்றவர்களில் சிலபேர் தட்டச்சு பயிற்சி மற்றும் ;சுருக்கெழுத்து பயிற்சிக்கு சென்றனர். நானும் தஞ்சாவூர் வீனஸ் தட்டச்சுப்பயிலத்தில் ஆங்கில தட்டச்சும், சுருக்கெழுத்தும் சேர்ந்தேன.;  சுருக்கெழுத்தில் 25 பாடம் எழுதி எனக்கு ஆர்வம் இல்லாமல் பயிற்ச்சியை கைவிட்டேன். ஆங்கில தட்டச்சில் கீழ்நிலைமுடித்து, மேல்நிலை தொடர்ந்தவுடன் தமிழ் தட்டச்சுப்பயிற்ச்சியையும். தொடர்ந்தேன். தட்டச்சில் ஆங்கிலத்தில் மேல்நிலையும், தமிழில் கீழ் நிலையும் ஒரே நேரத்தில் தேர்வெழுதி இரண்டிலும். தேர்ச்சிபெறவில்லை. கல்லூரி படிப்பு முடிந்ததால் என்னால் பயிற்ச்சியை தொடர முடியவில்லை. திருமணத்திற்க்கு பிறகு சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள மாம்பலம் டெக்னிக்கள் பயிலகத்தில் ஆங்கில மேல்நிலையை முடித்து என்னடைய மாமனாரிடமே பணியாற்றலாம் என்று நினைத்த நிலையில், என்னுடைய மாமியாரின் கடும் எதிர்ப்பு காரணமாக என்னடைய எண்ணத்தை கைவிட்டேன். என்னுடைய மாமனார் ஒரு அலுவலகம் (Tax and Investment Consultancy ) நடத்திக்கொண்டிருந்தார். அவரிடம் இரண்டு பணியாளர்கள் இருந்தனர். அவர்கள் அல்லாத அவசர நிலையில் 4 கடிதம் அடித்துக்கொடுத்திருக்கிறேன். இவ்வளவுதான, என்னுடைய தட்டச்சு அனுபவம். புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தில் பகுதி நேர செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பொழுது, அங்கு இருந்த ஒரு செய்தி தட்டச்சு செய்யும் பணியாளர் என்னிடம் உங்களை போன்று செய்தி வாசிப்பாளர்கள் வர வில்லை என்றால் R.J(Radio Jockey) வாசித்துவிடுவார்கள். நாங்கள் வரவில்லலை என்றால் தான் கடினம் என்றார். மறுநாளே என்வீட்டின் அருகில் உள்ள தட்டச்சு பயிலகத்தில் என்னடைய தமிழ் தட்டச்சு பயிற்ச்சியை தொடர்ந்தேன்,  இரண்டு மாதத்திற்க்கு மட்டும் சுமார் ஒரு மணிநேரம் பயிற்ச்சிசெய்து என்னால் முடியும் என்ற நிலைக்கு வந்தவுடன் அதே வடிவில் உள்ள சங்கம் என்ற மென்பொருளை பதிவறக்கம் செய்ய முயற்ச்சித்தேன். என் நண்பர்கள் மத்தியில், மென் பொருள் பதிவிறக்கம் செய்து தருவார் என்று கூறி  ஒருவரை பரிந்துரைத்தனர். அவரை பல முறை கைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதில் இதோ வருகிறேன் என்பார் அவ்வளவுதான்.  இவ்வாறு பல முறை தொடர்பு கொண்டு  வெறுத்துப்போய் இந்த முயற்ச்சியை கை விட்டேன். சமூக நல துறையில் நான் ஓர் ஆண்டு காலம், அங்கு வரும் பெண்களுக்கு  மனஆறுதல் கூறியும், குடும்ப வன்முறை சட்டத்தின் உட்பிரிவுகளை தெரிந்து கொண்டு, அவர்களின் வழக்கை பதிவு  செய்ய அறிக்கையை எழுதியும் கொடுத்துக்கொண்டிருந்தேன்.  இன்நிலையில் அங்கு சந்தித்த ஒரு பெண், பாமினி என்ற மென் பொருளை பயன்படுத்துவதாக சொல்லி, அதனை எனக்கு மின் அஞ்சலும் செய்தார்.  குடும்ப நண்பரின் உதவியுடன் அதை வீட்டு கணிணியில் பதிவிறக்கம் செய்து கொண்டு பயிற்ச்சி செய்து. மாதாந்திர மற்றம் வாராந்திர பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகள் மற்றம் வாசகர்களின் கருத்துக்களை எழுதி மின்அஞ்சல் மூலம் அனுப்பினால் அந்த எழுத்துக்களை எல்லா கணினியும் ஏற்காது என்பதை தெரிந்து கொண்டு, பின் என்னுடைய மகனின் உதவியுடன் Bamini Unicode ல் Convert செய்து அனுப்ப கற்றுக்கொண்டேன். தற்சமயம் என்னடைய சிறிய மற்றம் சுவையான அனுபவங்களை  Blogகாக போட என்னுடைய தட்டச்சு பயிற்ச்சி பயன்படுகிறது. (இந்த தட்டச்சு பயிற்ச்சிக்கு உதவிய என்னுடைய தோழிகள் விஐயா மற்றும் கலைவாணிக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.)


என் இசைப்பயற்சி பயணம்.

                           என் இசைப்பயற்சி பயணம்.

ஆறாம் வகுப்பு படிக்கும் போது நான் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ளஆரம்பித்தேன். இதுவரை  கற்க வாய்பில்லாத ஊர்களில் நாங்கள் வசித்து வந்தோம். திருக்காட்டுப்பள்ளி அஞ்சல் அலுவலகத்தில் பணி மாற்றம் கிடைத்தது என் தந்தைக்கு  திருக்காட்டுக்கள்ளி, சர்.சிவசாமிஐயர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு சேர்ந்தேன். மதியம் 1 இருந்து 2 மணி வரை உணவு இடைவேளை அந்த நேரத்தில் சாப்பிட்டு விட்டு பின் எங்கள் பள்ளியில் பாட்டு ஆசிரியராக பணியாற்றிய மங்களம் ஆசிரியையிடம் பாட்டு கற்றுக்கொண்டேன். அந்த ஒரு மணிநேரத்தில் என்னை போன்ற வேறு சில மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியரும் கற்றுக்கொண்டார். பள்ளியில் பணியாளர்கள் அறையை ஒட்டி ஒரு அறை இருக்கும் அங்கு தான்  எங்களுக்கு வகுப்பு எடுப்பார். 95 சதவிகிதம் நான்தான் ஆர்மோனிய பெட்டியை எடுத்து வைத்து மற்ற மாணவிகள் எல்லாம் வந்த உடன் ஆசிரியரை அழைத்து வருவேன்.மீண்டும்  வகுப்பு முடிந்த உடன் ஆர்மோனிய பெட்டியை எடுத்துவைத்துவிட்டு வகுப்பு திரும்புவேன்.  இந்த மூன்று ஆண்டுகள் ஒன்பது வகையான பாடம் முடித்து, வர்ணம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.(நின்னுக்கோரி வர்ணம்)அப்பாவுக்கு பணி மாற்றம் அய்யம்யபேட்டைக்கு இது (தஞ்சாவூர் கும்பகோணம் மார்கத்தில் உள்ளது). அய்யம்பேட்டையில் போஸ்ட் ஆபீஸ்க்கு வரும் பலரிடமும் சொல்லி வைத்ததில் கிடைத்தார் சோனி பாகவதர்(அவருடைய இயற்பெயர்தெரியாது). இந்த வகுப்பில்; சிறிய மாற்றம் இங்கு ஆசிரியர் எனக்காக காத்துக்கொண்டிருப்பார். நான் இப்பொழுது அய்யம்பேட்டை புனித கேபிரியேல் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.  நான் சோர்வாகவும் பசியாகவுமே பள்ளியில் இருந்து வருவேன். இந்த நேரத்தில்  பாட்டு ஆசிரியர்வேறு எனக்காக காத்துக்கொண்டிருப்பது. மிகவும் சங்கடமாக இருக்கும். நான் உடனே வணக்கம் சொல்லி விட்டு வகுப்பை ஆரம்பித்து விடுவோம். முதல் நாள் நீ ஏற்கனவே பாட்டு கற்றுக்கொண்டு இருந்தாய் அல்லவா நீ ஒரு பாட்டு பாடு என்றார். நானும் பாடினேன். நீ நன்றாக தான் பாடுகிறாய் ஆனால் சொல்லி கொடுத்தது சரி இல்லை. நாம் முதலில் இருந்தே ஆரம்பிக்கலாம் என்றார். மீண்டும் சரளி வரிசை தொடங்கினோம். மங்களம் டீச்சருக்கு மாதம் 5ரூபாய் கட்டணம் ஆனால் சோனி பாகவதருக்கு 10ரூபாய் எனது பெற்றோர்கள் வேறு அவருக்கு தொண்டு செய்து கொண்டிருந்தனர். நன்கு வெற்றிலை பாக்கு போடுவார.; அப்பா அவ்வப்போது வாங்கி தருவார். அம்மா நல்ல பில்டர் காப்பி போட்டு தருவார். பாகவதர் ரொம்ப ஆசாரம் எங்களுடைய பழக்கங்களை அவரால் ஏற்று கொள்ளவே முடியாது. இதற்க்கு உதாரணமாக நடந்த சில சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். படிக்க மிக சுவாரஸ்யமாக இருக்கும். எங்கள் வீட்டில் கூடத்தில் தான் வகுப்பு நடக்கும். சுவற்றில் வரிசையாக கண்ணாடி டம்பளர் வைத்திருப்போம்.அப்பாவுடைய நண்பர்கள் வந்தால் காப்பி  மற்றும் டீ கொடுப்பதற்க்கு. அவர் அந்த கிளாசை பாரத்த உடன்; என்னிடம் இதில் யார் காப்பி குடிப்பார்கள்  என்று கேட்பார். நான் உடனே நாங்கள் குடிக்க மாட்டோம்;. என்பேன்;. ஆனால் அவர் நம்ப மாட்டார். மீண்டும் இரண்டு நாட்கள் கழீத்து இதையே கேட்பார். ஏன் என்றால் அவருக்கு நாங்கள் வாய்வைத்து குடிப்பமோ என்ற சந்தேகம். இதைத்தவிர என்னுடைய தாத்தா அந்த கூடத்தில் ஓர் பக்கமாக கட்டிலில் இருப்பார். அவர் எப்பொழுதம் டம்ளரில் விளிம்பு இருந்தாலும் வாய்வைத்துதான் குடிப்பார், ஏன் என்றால் அவருக்கு இரண்டு கண்ணும் தெரியாது. ஆனால் பாகவதர் அதை புரிந்து கொள்ளாமல், என்ன அதிசயம் ஒரு வயதானவர்; எச்சல் செய்து குடிக்கலாமா? என்று சொல்லிக்கொண்டே இருப்பார். என்னுடைய அப்பா வெளியில் அலுவலக விஷயமாக செல்லும் போது வேஷ்டி இல்லாமல்  Pant போட்டுக்கொள்வார். பாகவதர் பாட்டு எடுக்கும் நேரத்தில் என்னுடைய அப்பா Pant போட்டுக் கொண்டால் அவ்வளவுதான் பாகவதர் டென்ஷன் ஆகிவிடுவார். இவ்வாறு பல செயல்களுக்கு இடையில் என்னுடைய பாட்டு பயிற்ச்சியும் நடை பெற்று, அதே நின்னுக்கோரி வர்ணம் ஆரம்பித்தார் நம்பவே முடியாது உங்களால் அப்பாவுக்கு பணி மாற்றம் திருமக்கோட்டைக்கு. திருமக்கோட்டை என்பது மன்னார்குடியில் இருந்து15 கி.மீட்டர். இங்கு பாட்டு கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடையாது. அப்பாவுக்கு பூண்டிக்கு பணி மாற்றம் இது அப்பா எனக்காக கேட்டு வாங்கிக்கொண்டது. தஞ்சாவூர் அரசினர்  பெண்கள் கலைக் கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் சேர்ந்தேன்;. தஞ்சாவூரில் போழக்குடி கணேசஐயர் என்பவர் கர்நாடக சங்கீத  பாடகர் மிகவும் பிரபலமானவர். இவருடைய மகள் பூண்டியில் அவரது கணவருடன் வசித்துவந்தார். அவரிடம் தொடர்ந்தது என்னுடைய சங்கீத பயிற்ச்சி. ஆனால் தற்பொழுது நான் கீர்தனைகள் மட்டுமே கற்றுக்கொண்டேன். குறிப்பாக தமிழ் கீர்தனைகள் மட்டுமே. 18 வயது ஆகிவிட்டதால் என்னுடைய விருப்பம் நன்கு புரிந்தது. 1987 பி.ஏ பொருளாதாரம் முடித்துவிட்டேன். ஓரளவுக்கு பாடல்கள் கிருஷணலீலாதரங்கினி என கற்றுக்கொண்டேன் ஆனால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அல்ல. ஏன் என்றால் என்னுடைய ஆசிரியை மகப்பேறுக்காக தஞ்சாவூர் சென்று விட்டார். சூழ்நிலையால் எனக்கு தடை வருமே தவிர என்னால் முடியாது என்று நான் எதையும் நிறுத்தியது கிடையாது.1999 ஆம் ஆண்டு மகளுடன் நானும் சேர்ந்து கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டேன்;. சென்னை மீனம்பாக்கம் DGQA வளாக கேந்திரிய வித்யாலயாவில் எனது குழந்தைகள் படித்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு உள்ள பாட்டு டீச்சரிடம் எனது மகளும் நானும் பாட்டு கற்றுக்கொண்டோம். பள்ளி நேரம் முடிந்து தனி பயிற்ச்சி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார் பாட்டு டீச்சர். என் மகளையும் சேர்த்துவிட்டு நானும் எனது விருப்பத்தை தெரிவித்தேன். நானும்  அவர்களுடன் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஒரு 10 பாடல்கள் கற்றுக்கொண்டிருப்பேன். வந்தது சோதனை எனக்கு அல்ல என் ரூபத்தில் வந்தது பாட்டு டீச்சருக்கு. பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் பள்ளி இடம் மற்றும் மின்சாரத்தை பயன்படுத்தி சங்கீத ஆசிரியை சம்பாதிக்கிறார் என்று குற்றப்பத்திரிக்கை அனுப்பிவிட்டனர் பள்ளி முதல்வருக்கு. உடனே பள்ளியில் எந்த தனி பயிற்ச்சி வகுப்பும் எடுக்க கூடாது என்று ஒரு சுற்றரிக்கை வெளியிடப்பட்டது. அது மட்டுமல்லாமல் பாட்டு டீச்சரின் வாழ்வாதாரத்துக்கு இந்த தனி பயிற்ச்சி மூலம் கிடைத்த வருமானம் உதவியாக இருந்தது என்றும், என்னால் வருவாய் இழுப்பு எற்பட்டு விட்டது என்று அந்த ஆசிரியை என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார். எனக்கு வருத்தமாகவும் என் மேல் ஒரு பழியுணர்ச்சி ஏற்பட்டதாகவும் எண்ணி வருந்தினேன். இதேநேரத்தில் இதற்கு தீர்வு கானவும் முற்பட்டேன். இந்த நேரத்தில் கோடம்பாக்கத்தில் இருந்து வந்து கொண்டிருந்த டீச்சர் பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகில் குடிபெயர்ந்து வந்துவிட்டார். நான் அதை பயனிபடுத்திக்கொண்டு 5துக்கு மேற்பட்ட மாணவர்களை இசைப்பயிற்ச்சிக்கு தேர்வு செய்து கொடுத்தேன். என்மனது, சற்று திருப்தி ஏற்பட்டது.மகள் என்னுடைய சிறிய மாமியாரின் தோழியிடம் பாட்டு கற்றக்கொள்ள ஆரம்பித்தார். ஆனால் நான் தொடரவில்லை. 2003செப்டம்பர் மாதம் என் கணவருக்கு பணி மாற்றம் புதுச்சேரிக்கு. என் மகள் வாய்பாட்டில் விருப்பம் மில்லாமல் வீணை கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டாள். இந்தஇடத்தில் என்கணவரின் சங்கீத விருப்பம் பற்றி சொல்ல வேண்டியுள்ளது. அவரும் வாய்பாட்டு கற்றுக்கொண்டு தொடரமுடியாமல் போன கதையை என்னிடம் பல முறை சொல்லியுள்ளார். கி.விரமணராஜு(பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் பாடிய க.வீரமணி தம்பியின் புதல்வர்) தான் சென்னையில் சங்கிதம் கற்றுக்கொண்டிருந்தேன் என்று சொல்லுவார். பிறகு தபேலா கற்றுக்கொண்டிருந்தார். என்ன காரனமோ தெரியவில்லை. தீடீர் என்று ஒரு நாள் சென்னைக்குப்போய் YAMAHA KEYBOARD ஐ 425 வாங்கிவந்து விட்டு இனிமேல் கீபோடு கற்றுக்கொள்ள போகிN;றன்  என்று சொல்லி மேற்கத்திய இசை பாணியை பின்பற்றி கற்றுக்கொண்டார். ஏதோ வாசிப்பார் அடிப்படை பாடம் முடிந்தவுடன் "மண்ணில் இந்த காதல்இன்றி யாரும் வாழக்கூடுமோ "   மற்றும் "வாழ்வேமாயம்" என்றஅந்த இரண்டு பாடலையும் பாடி வாசித்தக் கொண்டே இருப்பார். எனக்கு இது மிகவும் எரிச்சல் ஏற்படுத்தியது. பேசாமல் கர்நாடக பாணியில் கற்றுக்கொண்டால் இறைவுணர் மேலோங்கும் எதற்கு இந்த வயதில் தேவை இல்லாத வேலை என்று நான் கருத்து தெரிவித்தேன்.  பணிமாற்றம்,பணி உயர்வு வேலை பளு காரணமாக தொடரமுடியாமல் போனது என் கணவருக்கு. கீபோர்டு வீட்டில் பயன்பாடு இல்லாமல் இருந்தது. எனக்கு மீண்டும் சங்கீதம் கற்றுக்கொள்ளும் சிந்தனையை தூண்டியது;. ஹார்மோனியம் வாசித்துக்கொண்டே பாடுவது போல் கீபோர்டு வாசித்துக்கொண்டே பாட கற்றுக் கொண்டால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. உடனே கீபோர்டில் கர்நாடக சங்கீதம் யார் கற்று தருவார்கள் என்று தேட ஆரம்பித்தேன்.(புதுச்சேரியில்) 2013 –ல் திரு.ஜகதீசனிடம் மீண்டும் வகுப்புக்கு போக ஆரம்பித்தேன். சரளிவரிசையில் இருந்து மீண்டும் தொடங்கினேன்.. இம்முறை நானும் என்னுடைய கணவரும் சேர்ந்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம். இவர் கீபோர்டு மட்டுமே வாசிப்பார் நான் உடன் பாடவும் பழகினேன். என் கணவருக்கு தொடர முடியாத சூழல் ஏற்பட்டது.  ஆனால்  எனது சங்கீதத்துக்கு  இடையூறு ஏற்படவில்லை;. இம்முறை ஆர்வம் அதிகமானது காரணமாக, இசைகலைமணி என்ற 4 ஆண்டு பட்டய படிப்பில்  அண்ணாமலை பல்பலைகழகத்தில் சேர்ந்து விட்டேன்;. வருடத்திற்க்கு பத்து நாட்கள் நேர்முக வகுப்பு நடக்கும். அதில் Prayer song  முதலில் அப்பரின் தேவாரம் பாடுவார்கள். "திவேட்களம்" என்று சொல்ல கூடிய இந்த சிவஸ்தலம் பல்கலைக்கழ வளாகத்தினுள் அமைய பெற்றது.  கம்பர் எழுதிய சரஸ்வதியை பற்றிய பாடலும், திருக்குறளும் பாடுவார்கள். இதை கேட்பது என் பிறவி பயனாகவே  கருதினேன். நான் மதிய உணவு இடைவேளையிலும், மாலை நான்கு மணிக்கு மேல் பல்கலைகழகத்தை நன்கு சுற்றிப்பார்பேன். இசை பிரிவு பல்கலைகழகத்தினுள்ளேயே இருக்கம். வீணை வயலின் மிருதங்கம் புல்லாங்குழல்  நாட்டியம் என்ற எல்லாபிரிவுக்குள்ளேயும் சென்று நன்கு ரசித்து பார்த்து அனைவரிடனும் பேசி பழகுவேன். வீணை பிரிவில் உள்ளவர்கள் நான் வாசிக்கிறேன் நீங்கள் தாளம் போடுகிறீர்களா? என்று கேட்பர் நான் உடனே எதிரில் அமர்ந்து அவர்கள் வாசிக்க தாளம் போடுவேன். இத்தகைய செயல்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கும்.இத்தகைய செயல்களை நான் மீண்ட சொர்கமாகவே கருதினேன். சில நேரங்களில் என் வயது தோற்றம், அதை பார்த்துவிட்டு என்னை சங்கீத பேராசிரியை என்று நினைத்து எனக்கு செலுத்தும் மரியாதையை ஏற்றுக்கொண்டு, மகிழ்ந்து, பின் நானும் உங்களை போல் மாணவிதான் என்பேன். 1984 பிளஸ் 2 முடித்ததும் திருவையாறு இசைக்கல்லுரியில் படிக்க விருப்பம் கொண்டேன் ஆனால் என்தந்தை இரண்டு பஸ் மாறி செல்ல வேண்டும்  கடினம் என்றும் வீடு திரும்ப  நேரம் எடுக்கும் என்றும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். பள்ளி அக்ரஹாரம் போஸ்டாபீசுக்கு பணி மாற்ற முயற்சி செய்தார். கிடைக்கவில்லை. பூண்டி தான் கிடைத்தது. அதனால் நான் இசைக்கல்லுரியில் சேராமல் கலைக்கல்லுரியில் சேர்ந்தேன். 1984 –ல் விட்ட இடத்தை (2013-14)  ல் கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்N;டன். 4ஆண்டுகள் ஆனால் நான் இரண்டு ஆண்டுகளே படித்தேன். பாடதிட்டம் கடினம் என்று சொல்வதை விட ஆர்வம் உள்ளவர்களுக்கு  நல்ல தீனி என்றே நான் சொல்வேன்.



 வயது காரணமாக voice அடிக்கடி தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருந்தது. நான் அப்பொழுது புதுச்சேரி வானொலி நிலையத்தில் பகுதி நேரசெய்தி வாசிப்பாளராக வேறு பணியாற்றிக்கொண்டிருந்தேன். ENT மருத்துவர்வேறு  தொன்டையை கடினமாக பயன்படுத்தாதீகள் என்று அறிவுரை கூறினார். என்னுடைய இசைகலைமணி தான் தடை பட்டதே தவிற என்னுடைய இசை கற்றலுக்கு தடை அல்ல.  அண்ணாமலை பல்கலைகழக தரவரிசை சாண்றிதழ் நிலை 4க்கு (கீபோரிடு) தேரிவு எழுதி 2018-ல் உயர்ந்த ஸ்தானத்தில் தேர்ச்சி பெற்றேன். 2019-ல் ஐந்தாவது நிலையிலும் உயர்ந்த ஸ்தானத்தில்(DISTINCTION) வெற்றி பெற்றேன். என்னுடைய குரல் வளத்தை எப்படி முறையாக பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு தற்பொழுது  கீபோடு வாசித்துக்கொண்டே பாட்டு பாடுகின்றேன்.  தேவாரம் திருப்புகழ் தமிழ் கீர்தணைகளை  ஆர்மோனியம் போன்று KEY BOARD  பயன்படுத்தி பாடிவருகிறேன். ஒன்றில் மட்டும் உறுதியாக உள்ளேன் பிறரை நம்பி வாழும் நிலை வரும்வரை என்னுடைய கற்றல் தொடரும்.


சுந்தரியும் வானொலியும்.


 சுந்தரியும் வானொலியும்.

நான் தெருவில் என்னுடைய அக்காகளுடன் விளையாடிக்கொண்டிருக்கம் பொழுது   அக்கா இருவரும் முன்அறிவிப்பின்றி  வீட்டிற்க்கு சென்றுவிட்டனர். எனக்கு காரணம் தெரியவில்லை. வீட்டிற்க்கு சென்று பார்த்தால் இருவரும் வானொலி கேட்டுக்கொண்டிருதனர். அதில் எங்களை போல் சிறுவர்கள்  ஏதேதோ பாடினர் ,பேசினர் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன் என்றால் எங்கள் வீட்டில் வானொலி கிடையாது. ஏன் விளையாட்டை பாதியில்  விட்டு வந்தீரகள் என்று கேட்டதற்க்கு” பிள்ளை கனியமுது” கேட்பதற்க்கு என்றனர். பின்னாளில் அது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி என்று தெரிந்துகொண்டேன். இந்த நிகழ்ச்சி ஏனோ  மிகவும் பாதித்தது. எங்கள் வீட்டிற்க்கு வந்த உடன் என் அப்பாவிடம் அவர்கள் வானொலியில் பாட்டு கேட்டுக்கொண்டே இருந்தனர் என்னுடன் விளையாட வில்லை என்று புகார் தெரிவித்தேன். என்னடைய அப்பா உடனே நீ இந்த வானொலியிலேயே  பேசும் வேலைக்கு போகலாம் என்று என்னை மிகவும் உற்சாகப்படுத்தினார். அவர் சாதாரணமாக சொன்ன சொல் என் மனதில் கல்லில் வடித்த எழுத்தாக படிந்து விட்டது. இதன் மீது  மறதி என்ற தூசு சில ஆண்டுகள் படிந்திருந்தது. 1976,77. ஆண்டுகளில் நாங்கள் குடித்தனம் இருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டிற்க்கு சாரதா, சுகந்தி என்ற சகோதரிகள் அடிக்கடி வருவார்கள் அவர்களுடைய பெயரை நானும் அடிக்கடி திருச்சிஅகில இந்திய வானொலியில் கேட்டிருந்தேன் (நிகழ்ச்சி கருத்து தெரிவிப்பவரிகள்ன் பெயர்கள் இடம்பெறும் நிகழ்ச்சியில் மகராஐபுரத்தை சேர்ந்தJ.. சாரதா மற்றும் J. சுகந்தி சகோதரிகள் என்று இவர்களுடைய பெயர்கள் அடிக்கடி ஒலிக்கும்) இவர்களை பற்றி வீட்டின் உரிமையளர்  எனது அம்மாவிடம் தெரிவித்து கொண்டிருந்தார். இதை கேட்ட நான் அவர்களை தெய்வத்தை பார்பது போன்று பார்க்க தொடங்கினேன். அவர்களில் அருகில் அமர்ந்து மிகவும் மெல்லிய குரலில் உங்களுடைய பெயர் வானொலியில் எப்படி வருகிறது என்று அடிக்கடி கேட்பேன். அவர்கள் இருவரும் புன்னகையை மட்டுமே பதிலாக அளிப்பார்கள் எப்பொழுதும். மீண்டும் என்னடைய அப்பாவிடம் புகார் செய்தேன். என்னுடைய அப்பாவும் மீண்டும்அதையே பதிலாக அளித்தார். ஆனால் முதல் முறை அளித்த பதில் நான் வானொலி வாங்கிகொடுங்கள் என்று கேட்டு விடுவேனோ என்பதற்காக. இரண்டாவது முறை உண்மையாகவே அதற்கான செய்தியை சேகரித்து வைத்திருந்தார் என்பதை 1985 ஜனவரி மாதம் இளையபாரதம் நிகழ்ச்சிக்காக நான் திருச்சி அகில இந்திய வானொலிக்கு விண்ணப்பித்த போது தெரிந்து கொண்டேன். பிப்ரவரி 18 ஆம் தேதியன்று நானும் என்னுடைய அப்பாவும் குரல் வளத்தேர்வுக்காக திருச்சிராப்பள்ளிக்கு கிளம்பினோம். திருச்சி வானொலியில் இளைய பாரத நிகழ்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு 1989 ஜனவரி வரை 3 மாதங்களுக்கு  ஒரு நிகழ்ச்சி பங்கு கொண்டு வந்தேன். காலை மாநிலச்செய்திகள் முடிந்தவுடன் இன்றைய நிகழ்ச்சிகள் என்று அன்றைய நிகழ்ச்சிகளை  அறிவிப்பார்கள் அதில் இரவு எட்டுமணிக்கு இளையபாரதம் பங்குகொள்பவர் ஜி. சுந்தராம்பாள் என்று என்னுடைய பெயரை கேட்டு நான் அடைந்த மகிழ்ச்சி பின் நாளில் யார் அழைத்தும் கிடைக்கவில்லை.திருமணத்திற்க்கு பின் என்னுடைய கணவர் சென்னையில் பணியாற்றியவரை சென்னை அகில இந்திய வானொலியில் இளையபாரத நிகழ்ச்சியில் பங்கு கொண்டிருந்தேன். இடையில் 1991 ல் பகுதி நேர   அறிவிப்பாளர் பணிக்கு விண்ணபித்து தேர்வு செய்யப்படவில்லை, சென்னையில். ஆனால் கணவரின் பணி மாற்றம் காரணமாக தொடர்ந்து என்னால் பங்குகொள்ள முடியவில்லை. மீண்டும் 2003 புதுச்சேரி வானொலியில்(கணவரின் பணி மாற்றம்) மங்கையர் உலகு என்ற மகளிர்கான நிகழ்ச்சியில் என்னுடைய பங்கை தொடர்ந்தேன்.




என்னுடைய விருப்பத்திற்க்கு செவிசாய்த இறைவனின் அருளால் ஏழு ஆண்டுகள் (2011 ஆகஸ்ட் முதல் 2018 ஆகஸ்ட் வரை). செய்தி வாசித்துக்கொண்டிருந்தேன்.

 சமுதாய வானொலியிலும் (Community F.M) என் பங்கு அதிகமாக இருந்தது. சர்வம் என்ற புதுச்சேரி அரவிபிந்ஆசிரமத்தின் சமுதாய வானொலியில் பல நிகழ்ச்சியில் பங்குகெண்டுள்ளேன்.







 புதுச்சேரி பல்கலைகழக சமுதாய வானொலி  என்று என்னுடைய வானொலி பணி தொடர்ந்ததுக்கொண்டே இருந்தது. வானொலி மேல் எனக்கு இருந்த அன்பு என்றும் தொடரும். ஆனால் நான் இப்பொழுது நான்; கேட்கும் புது வடிவ வானொலி CARVAAN இதில் F.M..  இருந்தாலும் நான் இதை பயன் படுத்துவதே கிடையாது. யார் பெயரும், யார் குரலும்  கேட்காத இந்த வானொலியை நான் மிகவும் நேசிக்கிறேன்.  


உதவியால் வந்த பிரச்சனை.

                                          உதவியால் வந்த பிரச்சனை.

    எங்கள் வீட்டில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வேலை செய்துகொண்டிருந்தார். அவர் ஒரு கண் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். நானும் என்னுடைய இரு சக்கர வாகனத்தில் அழைத்து செல்வதாக உறுதி அளித்து இருந்தேன். அதற்கான நேரம் வந்தது, வீட்டு வேலை முடித்து விட்டு 10 மணிக்கு வாருங்கள், நான் உங்களை மருத்துவமனையில் விட்டுவிட்டு என்னுடைய பணிக்கு செல்கிறேன் என்றேன். சரியான நேரத்திற்;கு வந்தார். கிளம்பி சென்று மருத்துவமணை வாயிலில் வண்டியை நிறுத்தவும் அந்த பெண்மணி மயங்கி சரியவும் சரியாக இருந்தது. எனக்கு வண்டியை பிடிப்பதா அல்லது அந்த பெண்மணியை பிடிப்பதா என்று ஒன்றுமே புரியவில்லை, அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கீழே விழாமல் அவரை பிடித்து விட்டோம். தண்ணீர் தெளித்து குடிக்க நீர் கொடுத்தவுடன், சற்று நேரத்தில் நன்கு சுதாரித்துக்கொண்டார், என்னம்மா? என்று கேட்டதற்க்கு பசி மயக்கம் என்று தெரிந்தது. எனக்கு கோபம் உச்சிக்கு ஏறியது ஏன் என்றால், நான் வீட்டைவிட்டு கிளம்பும்போதே சாப்பிட்டீர்களா? இட்லி, பொதினா சாதம், உருளைகிழங்கு பொரியல் உள்ளது. என்கணவரும் அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டார் சாப்பாடு அதிகமாகவே உள்ளது. நீங்கள் சாப்பிடுங்கள் என்றேன், அதற்க்கு அந்த பெண்மணி நான் வீட்டிலேயே  சாப்பிட்டுவிட்டுதான், வந்தேன் என்றார். இப்பொழுது உங்களுக்கும் புரிந்து இருக்கும் எனக்கு கோபம் ஏன் உச்சிக்கு ஏறியது என்று. எனக்கு பசியாக உள்ளது என்றார். உடனே நான் அவரை ஓரு இடத்தில் அமர்த்திவிட்டு உணவு வாங்க சென்றேன். காலை 11 மணி என்பதால் டிபன்,சாப்பாடு இரண்டுமே கிடைக்காத நேரம். சற்று அலைந்த பிறகு ஒரு மெஸ்சை கண்டுபிடித்து இந்த அம்மாவை அழைத்து சென்று டிபன் வாங்கி கொடுத்து,  இயல்புக்கு வந்த பிறகு நான் என் பணிக்கு சென்றேன். தேவை இல்லாமல் பணம், நேரம், விரையம் ஆகி பிரச்சனையும் உருவாகியது எனக்கு. உதவி செய்வதற்க்கு முன் இன்னமும் சிறப்பாக என்னை தயார் செய்துகொள்ள வாய்பாக அமைந்தது இந்த அனுபவம்.    


மணி கைவேலை (BEAD HAND WORK)

                                மணி கைவேலை (BEAD HAND WORK)


கைவினை பொருள் செய்வதில் எனக்கு எப்பொழுதுமே ஒரு அலாதி பிரியம் உண்டு. மூதாதயரின் மன சிந்தனை என்னிடமும் அப்படியே இருந்தது. பாட்டி,அம்மா,பெரியம்மா இவர்கள் மட்டும் அல்லாது,  என்னுடைய அத்தையும் கைவேலை நன்கு செய்வார். அம்மாதான் என்னுடைய முதல் குரு. கை எம்பிராய்டரி, கிராஸ் ஸ்டிச், அட்டை மற்றும் சிரிய பெட்டி, (தீபெட்டி போன்று) காலி பாட்டில்கள் இவைகளை பயன்படுத்தி பொருள் செய்வது என்று என்னடைய வேலையும் ஆர்வமும் தொடர்ந்துக்கொண்டே சென்றது. 6வது படித்துக்கொண்டிருக்கம் போது, என்பக்கத்து வீட்டில் ஒரு மருத்துவர் புதிதாக குடித்தனம் வந்தார்கள். அவருடைய மனைவி மணிகளை பயன்படுத்தி பல  வகையான பொருட்கள் செய்தார். குறிப்பாக(வீட்டு நிலைபடியில் மாட்டும், நல்வரவு போன்று) செய்துக்கொண்டிருந்தார். எனக்கு அதை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள மிகவும் ஆசை ஏற்பட்டது. நான் பச்சை கலரில் வெள்ளை நிறத்தில் எழுத்துவருமாறு செய்வது என்று தீர்மானித்தேன். அவர் ஒவ்வொரு எழுத்தாக போடுவது போன்று சொல்லிக்கொடுக்காமல், ஒரே சமயத்தில் அனைத்து எழுத்தும் வருவது போன்று சொல்லி கொடுத்ததால் எனக்கு தவறு அதிகமாக வந்தது. அவர் உடனே சுந்தரி நீ பேசாமல் பச்சை வண்ண மணியில் போட்டு விட்டு, வெள்ளை நிற பெயிண்ட் வாங்கி வெல்கம் என்று எழுதி விடு என்று கேலி செய்தார். எனக்கு மிகவும் கோபம் வந்து நான் அவர்கள் வீட்டுக்கு பிறகு செல்லவேயில்லை. நான் மணி வேலை நன்கு தெரிந்தவர்கள் எங்கு இருக்கின்றனர் என்று விசாரித்து அவர்கள் வீட்டில் ஒரு நாள் முழுவதும் அமர்ந்து போட கற்றுக்ககொண்டு வந்தேன். நான் அனைவரிடமும் நன்கு பேசி பழகும் குணம் இருந்ததால், சொல்லி கொடுத்தவருக்கு என்னை மிகவும் பிடித்து விட்டது. என்னை தூக்கி  கொஞ்சினார் அந்த பெண்மணி. (அப்பொழுது எனக்கு வயது 11) இரண்டு ஒயர்(நரம்பு) பயன் படுத்தி எப்படி போடுவது, ஒவ்வொரு எழுத்தாக எப்படி போடுவது, என்று மிக அன்பாக சொல்லிக்கொடுத்தார். அது மட்டுமல்லாமல் அவர் ஏற்கனவே போட்ட ஒரு மாதிரியையும் எனக்கு கொடுத்து போட சொன்னார். நான் ஒருவாரத்தில் அவரின் வழிகாட்டுதலில் சிறப்பாக முடித்து விட்டேன். இவ்வாறாக நான் மூன்று ஆண்டுகள் மணி வேலையில் மிக மும்முரமாக இருந்தேன். பள்ளி படிப்புக்கூட இரண்டாம் நிலையாக இருந்தது. மணி வேலைபாட்டின் உச்சமாக என்னுடைய அப்பாவின் மாமா என்று ஒரு தூரத்து உறவினருக்கு வெல்கம், என்பதை நிலையில் மாட்டுவதற்க்கும், ஸ்ரீ RAMAJAYAM சாமி படங்களுடன் மாட்ட வாங்கி சென்றார்.


நான் தலா 15ரூபாய்கும், 18ரூபாய்கும் விற்பனை செய்தேன். பின்னாளில் அவரே எனது மாமனார். வரும் ஐனவரியில் எனக்கு திருமணமாகி 32 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இன்றளவும் அந்த SRIRAMAJAYAM. WELCOME இரண்டும் என்னுடைய கணவரின் பெரிய அண்ணன் வீட்டில் மாட்டப்பட்டுள்ளது. 

இரண்டாவது உச்சம் தலையில் பூஜடை போன்று பயன் படுத்தும் மணி வங்கியை எப்படி போடுவது என்பதை 30 வயதுக்கு மேற்பட்ட பல பெண்மணிகள் என்னிடம் வந்து கற்றுக்கொண்டு போனார்கள். கற்றுக்கொடுத்த எனக்கு வயது 13. எனக்கு இதில் பெரும் மகிழ்ச்சி மட்டும் இன்றி பெருமைவேறு. 40 ஆண்டுகளுக்கு பிறகு நான் விலை உயர்ந்த கிரிஸ்டல் மற்றும் முத்து பயன்படுத்தி மணி வேலை (Key Chain)


செய்து எனது மகளுக்கும் மருமகளுக்கும் பரிசளித்துள்ளேன். மீண்டும் என்னுடைய அடுத்த Blog-ல் சந்திப்போம்.

 தையலை கற்றாள் தையல்


பழைய தையல் மிஷின் விற்பனைக்கு என்று வாசலில் போட்ட விற்பனை பலகையை கழட்டினேன். ஏன் என்று கேட்ட கணவருக்கு பதில் சொல்ல எத்தனித்தபோது, இந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அம்மா ஆடையை தைத்து கொடுத்தாலும் எனக்கு மனநிறைவே கிடைக்காது.  நீங்கள் தையல்காரர்  போன்று நன்றாகவே  தைக்கவில்லை. என்று எப்பொழுதும் குறை கூறிக்கொண்டே இருப்பேன். என்னடைய திருமணத்ததிற்க்கு ரவிக்கை தைக்க தையல்காரரிடம் கொடுத்தேன். வரலாற்று நாவலில் வரும் நிலவறையில் இருந்தால் எப்படி மூச்சு முட்டுமோ அதுபோன்று இருந்தது. எத்தனை திருத்தம் செய்தும் ரவிக்கை தேறவில்லை. நல்ல காலம் “ஒரு பிளவுஸ் கொடு “ என்று  அம்மா சொன்ன அறிவுரையால் பிழைத்தேன்.  மீண்டும் அம்மாவே ஆஸ்தான தையல்காரராக மாறினார்.சென்னைவாசியாக மாறிய பிறகு எனது நாத்தனாரின் பரிந்துரையின பேரில் ஒருதையல்காரரிடம்; இடம் கொடுத்ததில் (printed silk saree attached blouse)  நாசம். கையையே ஏற்ற முடியவில்லை. திருத்தம் செய்ய வாய்பே இல்லாமல் தையல் பிரிக்க இடமே இல்லாமல் கத்தரித்து ஒவர்லாக் செய்து வைத்திருந்தார். அப்பொழுதான் நானே தைத்தால் என்ன? என்ற எண்ணம் தோன்றியது. அம்மா தைத்ததையும், வகுப்பு எடுத்ததையும் பார்த்துக்கொண்டே இருந்ததால் என்னால் நன்றாக தைக்க முடிந்தது.” காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு”  என்பார்களே அது போன்று எனக்கு தோன்றியது போலும். ஆனாலும்  நான் தைத்தது மன நிறைவை ஏற்படுத்தியது. என் நாத்தனார் அவர்வீட்டு சுப நிகழ்ச்சிக்கு வாங்கி கொடுத்த ஆடைக்கு நான் மட்டுமே ரவிக்கை  தைத்து போட்டுக்கொண்டு வந்தேன். மற்றனைவரும் மிக குறுகிய காலம் என்பதால் தையல்காரரிடம் கொடுத்து தைத்துக்கொள்ள முடியாமல் இருந்தனர். (பெருமையில் பூரித்து போனேன்)   தாய்மை காரணமாக மீண்டும் தையல்காரரை அணுக வேண்டிய நிலை. தீபாவளிக்கு வாங்கிய  இரண்டு ரவிக்கையை தொலைத்து சாதனை படைத்தார் தையல்காரர். பல மாதங்கள், அவருடன் சண்டைபிடித்து கடைக்குள் சென்று என்னுடைய பொருளை தேடி எடுத்துக்கொண்டேன். நல்ல காலம் அளவு பெரிதாக இருந்ததால் நானே சரி செய்து கொண்டேன்.  இரண்டாவது முறை தாய்மை அடைந்த பொழுது இரண்டு ஆண்டுகள். நான் புதிய ஆடையை நினைத்துக்கூட பார்க்க வில்லை. 18 ஆண்டுகள் சுயமாக தைத்துகொண்டிருந்த எனக்கு அவசரநிலை காரணமாக ஒரு பெண்மணியிடம் தைத்துக் கொண்டேன். சில காலம் அந்த பெண்மணியிடமே தைக்க ஆரம்பித்தேன். ஒரே நேரத்தில் 6 ரவிக்கைகள் தைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது, அனைத்தையும் உயரம் மிக குறைவாக தைத்து விட்டார். நான் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்க்கு மிகவும் கோபமாக பேசி துணி போதவில்லை என்று பொய் சொன்னது எனக்கு மிகவும் சினத்தை உண்டு செய்தது. ஒரு மீட்டர் துணியில் எத்தனை இஞ்ச் உயரம் வரை வைக்கலாம் என்று கூறி, எனக்கும் நன்றாக தைக்க தெரியும் என்று சொல்லி; திரும்பினேன். மீண்டும் சுயமாக தைக்க  ஆரம்பித்தேன். என் வீட்டிற்க்கு பக்கத்தில் ஒரு பெண்மணி வீடு கட்டி கொண்டு வந்தார். அவர் நான் தையலை தொழிலாக வைத்துள்ளேன். நான் தைத்து தருகிறேன் என்றார். 2வருடம் நன்றாக தைத்து கொடுத்திருப்பார்.  சமீபத்தில் துணி தைக்க கொடுத்து எட்டு  மாதங்கள்  முடிந்து விட்டது (டிசம்பர்) இதுவரை கொடுக்க வில்லை. இப்பொழுது நானும் வீட்டில்தான் இருக்கிறேன் (கொரோனா) நானே தைத்துக்கொள்கிறேன,; என்றாலும் திருப்பித்தராமல் நானே தைத்து கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லி வீனாக நாட்களை கடத்திக்கொண்டே செல்கிறார். இப்பொழுது உங்களுக்கும் புரிந்து இருக்கும் நான் ஏன் விற்பனை  பலகையை அப்புறப்படுத்தினேன் என்று.





விற்பனை பலகையை கழட்டிய நான்,  இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தையல் இயந்திரத்தை என்னுடைய தோழி ஒருவரிடம் விற்பனை செய்துவிட்டு, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பல தேடுதலுக்கு பிறகு இந்த,  Brother Mechine வாங்கினேன். எனக்கும் என்னுடைய பேத்திக்கும் ஒரே மாதிரி துணி வாங்கி, ஆடைதைத்தேன். ஆடையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளேன். மீண்டும் என்னுடைய விருப்பத்தை தொடர்ந்தேன்.

வாட்ஸ்ஆப் செயலி ஒரு வரப்பிரசாதம்

வாட்ஸ்ஆப் செயலி ஒரு வரப்பிரசாதம்
        

 நானும் அனைவரை போன்று ஆன்டிராய்டு கைபேசி வாங்கி வாட்ஸ்ஆப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறேன். எனக்கு இது ஒன்றும் பெரிய செயலாக தெரியவில்லை. என்னடைய மகள் மூன்றாண்டுகளுக்கு முன்பு பயணக்கட்டுரை எழுதுவதற்காக செக் ரிபப்ளிக், ஸ்லோவேக்யா, ஹங்கேரி போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றாள். தினமும்  என்னுடன் பேசுவாள். நான் மிக சாதரணமாக வீட்டில் உட்கார்ந்து பேசுவேன். அப்பொழுதுதான் 1970,80களில் வெளி நாடுகளில் வசிப்பவர்களிடம் தொலை பேசியில் தொடர்பு  கொள்வது எவ்வளவு கடினம் என்று எண்ணிய போது ,வாட்ஸ்ஆப்பின் மகத்துவம் எனக்கு புரிந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளில் உள்ளவர்களிடம், தொலைபேசியில் பேசுவது எவ்வளவு கடினமானது என்பதை நேரிடையாக சந்தித்தவள் நான். என்னடைய அப்பா அஞ்சல் அதிகாரியாக பணி செய்த ஊர்களில் வெளிநாட்டில் வசித்தவரிகளின் எண்ணிக்கை சில ஊர்களில் மிக அதிகமாக இருக்கும். வெளிநாட்டில் பணி செய்யும்  உறவினர்களுக்கு  தொலைபேசி அழைப்பை பதிவு செய்து விட்டு நாட்கணக்கில் கூட காத்திருப்பார்கள். அப்படி காத்திருந்து தொடர்பு கிடைத்தாலும் அவர்களால் தொடர்பில் தொந்தரவு இல்லாமலும், மற்றம் தொடர்ந்தும் பேசவும் முடியாது. அவர்கள் பேசினாலும் ஹலோ ஹலோ என்ற சொல்லைத்தான் அதிகமாக பயன் படுத்தும் நிலை இருக்கும். மக்களின் நிலை இது என்றால் என்னுடைய அப்பாவின் நிலை மிக பரிதாபமக இருக்கம். என்னுடைய அப்பா வெளிநாடுகளுக்கு அழைப்பை பதிவு செய்து விட்டு உறவினர்களின் பெயர், இவரகளுக்கும் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் என்ன உறவு, என்ன காரணத்திற்காக  அழைப்பு பதிவு செய்யப்பட்டது, என்ற அடிப்படை காரணத்தை எல்லாம் தெரிந்து கொண்ட பின்பு தான், தொலை பேசி அழைப்பை பதிவு செய்வார். பதிவு செய்த அழைப்பு எப்பொழுது கிடைக்கும் என்று சொல்ல முடியாது. பல நேரங்களில் சாப்பிடுவதற்க்கும்,  கழிவறைசெல்வதற்க்கும் கூட முடியாமல் போகும். இரவு முழுவதும் கண்விழித்து இருக்க நேரிடும். இதை தொடர்ந்து மறுநாள் அதிகாலை 6 மணிக்கே தபால் பை  வந்து விடும். அன்றைய நாள் பணியை, எந்த வித ஓய்வில்லாமல் செயல்படுத்த நேரிடும். நான் இவ்வாறாக இரண்டுபக்க நபர்களின் இடர்பாடுகளையும், இவர்களை இணைக்கும் அஞ்சல் அதிகாரியின் பணி சுமையையும் நன்கு அறிந்து இருந்ததால். வாட்ஸ்ஆப்பின்  மகத்துவத்தை  என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இதன் காரணமாகவே வாட்ஸ்அப் ஒரு வரப்பிரசாதம் என்று இந்த  blog க்கு  தலைப்பிட்டேன்.

நிஜ டோலக்பூர்

Doctors and patients cartoon in front hospital Vector Image


நிஜ டோலக்பூர்

 என்னுடைய அப்பா அஞ்சல் அதிகாரியாக பணியாற்றிய பல ஊர்களில், நான் நிஜ டோலக்பூர் என்று சித்தரிக்கும் செங்கிப்பட்டி என்ற டி.பி.சானிடோரியம் பற்றியதே இந்த blog. டோலக்பூர் தெரியாதவர்கள்  குழந்தைகளிடம்  கேட்டு தெரிந்துக்கொள்ளவும். இந்த ஊர் அவ்வளவு ரம்யமாக இருக்கம் பாரப்பதற்க்கு. ஏனென்றால் மக்கள் தொகை மிகவும் குறைவு. காச நோய் மருத்துவமணையை அடிப்படையாக கொண்டதே இந்த ஊர். மருத்துவமனையே ஒரு சிறிய ஊர் போன்று தோற்றம் அளிக்கும். அலுவலக முகப்பில் நடுவில் காந்தி சிலையும், இரண்டுபக்கமும் நீரூற்று அலங்கரிக்கும். சிறப்பு வார்டு என்பதை ஒரு அழகான வீடு போன்றே உருவாக்கி இருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிற்க்கும் குறைந்தது பத்தடியாவது இடைவெளி இருக்கும். நோயாளியின் உதவியாளர்கள் சமைத்து சாப்பிட தனி சமையல் அறை, ஒரு சோலையின் இடையில் விடுமுறை ரிசார்ட் போன்று கட்டியிருப்பார்கள். மருத்துவனையில் கலையரங்கம், உள்திரையரங்கம்,  , விளையாட்டு மைதானம் என்று கப்பலுக்குள் இருப்பது போன்று அனைத்து வசதிகளும் அமைத்து இருந்தது இந்த மருத்துவமனையில். நான் தினமும் பள்ளி முடிந்த உடன் மருத்துவமணையை ஒரு சுற்ற சுற்றி வந்த பிறகே வீடு திரும்புவேன். எப்படி இருக்கும் என்றால் திட்டமிட்ட நகரம் என்று சொல்வார்களே (நெய்வேலி,சண்டிகர்) போன்று திட்ட மிட்ட கிராமம். மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்கள் என்று தனிதனியாக அழகான குடியிருப்பு கட்டியிருப்பார்கள். இதன் இடையில் தபால் அலுவலகத்துடன் கூடிய எங்களின் வீடும் அமைந்து இருந்தது. வீட்டைச்சுற்றி மனித,வாகன அரவமே இல்லாமல் மிக அமைதியாக இருந்தது நாங்கள் இருந்த வீடு; நல்ல காற்றோத்துடன் கூடிய மிக அருமையான வீடு. வாஷ் பேசின், சமையல் அறையில் சிங், அனைத்து இடத்திலும் தண்ணீருக்கு குழாய் என்று நாங்கள் மூன்று ஆண்டுகள் சுகமாக இருந்தோம். ஊரில் எங்கும் குப்பையே இருக்காது. அதுமட்டுமல்ல நாய், பன்றி, கோழி என்று எதுவுமே இருக்காது. இவைகள் மூலம் காச நோய் பரவும் என்பதால் இந்த மருத்துவமனையில் இவைகளை உடனே அகற்றுவதற்காக பணியாளர்கள் அமர்த்தப்பட்டிருந்தார்கள்.  எங்களை தவிற மருத்துவமனைக்கு தொடர்பில்லாத (நேரடியாக) இரண்டு குடும்பம் இருந்தது. இருவருமே ஹோட்டல் வைத்து இருந்தவர்கள் தான். (சைவம் மற்றம் அசைவம்).  நோய் அச்சம் மற்றும் வசதிஇல்லாத சூழல் அவைகளை மட்டும் கருத்தில்கொள்ளாமல் சுத்தமான பராமரிப்பு இயற்க்கை சூழல் நிறைந்த இந்த இடத்தில் மிக இளவயதில் வாழ சந்தரப்;பம் அளித்த என்தந்தைக்கு மிக்க நன்றி. எட்டு வயதில் வாழ்ந்த ஊர் 45 வருடம் சென்ற பிறகும் என் மனதில் மிக பசுமையாக நிறைந்துள்ளது.   

நாடக மேடை


                                                       
                                                   

நாடக மேடை

ஆறாம் வகுப்பு கோடை விடுமுறைக்கு நான் என்னுடைய பெரியம்மாவீட்டிற்க்கு சென்றால் அங்கு என்னுடைய அக்கா இருவரும், அவர்களுடைய அத்தை வீட்டிற்க்கு கிளம்பிக்கொண்டிருந்தார்கள். உடனே நானும் அவர்களுடன் கிளம்பிவிட்டேன். ஆனால் அங்கு என்னால் மனம் ஒன்றி இருக்க முடியவில்லை. திருச்சிக்கு மிக அருகில் உள்ள பொன்மலைப்பட்டி என்ற கிராமம்தான் அவர்களின் அத்தை வீடு,  தண்ணீர் பஞ்சம் வேறு, புகைவண்டி நிலையத்தில், வண்டி நிற்க்கும் நேரத்தில் தண்ணீர் பிடிக்க வேண்டும் இவ்வாறு பல வழிகளில் சமாளித்து வந்தார் அவருடைய அத்தை தண்ணீர் பஞ்சத்தை. இந்நிலையில் நான் வீட்டில் இருக்க சங்கடப்பட்டுக்கொண்டு வெளியில் சென்றேன். அவர்கள் வீட்டிற்க்கு மிக அருகிலேயே ஒரு மாதாகோவில் இருந்தது. அங்கு ஏதோ விழா நடக்கப் போகிறது, அதனால் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர். நான் அவர்களுடன் நன்கு பழக ஆரம்பித்தேன். உடனே அந்த ஆசிரியை நீ நாடகத்தில் நடிக்கிறாயா? மாதா வேடம் உனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றார். அவ்வளவுதான், எனக்கு மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை. ஏன் என்றால் நான் பள்ளிக்கூடத்திற்க்கு போவதே, கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறத்தான். உடனே சரி என்று சொல்லிவிட்டேன். அவர்கள் உடனே உனக்கு வசனம் ஒன்றுமே கிடையாது, “நான் இருக்கிறேன் மகனே உன் துயர் துடைக்க” என்று மட்டும் சொன்னால் போதும் என்றார். வேறு ஒருவர் வந்து என்னை யார்? எங்கிருக்கிறேன்,?என்ற விபரங்கனை கேட்டறிந்தார். நான் உடனே என்னுடைய அக்காவின் மாமா ,அத்தையின் பெயர் மற்றும் பிற விபரங்களை தெரிவித்தேன். அவர் உடனே வீட்டிற்க்கு சென்று என்னை நாடகத்தில் நடிக்க வைக்க அவர்களிடம் அனுமதி கேட்டார். உறவினர் தயங்கினாலும் நான் அவர்களை சம்மதிக்க வைத்துவிட்டேன். நாடகத்தில் ஒருவர் என்னிடம் வந்து அவருடைய துயரை சொல்லி அழுவார் நான் அப்பொழுதுதான். இந்த வசனத்தை சொல்ல வேண்டும். ஆனால் இந்த நாடகத்தில் நான் இடம் பெரும் காட்சி தான் இந்த Blog ன் உச்சம். மூன்றடி நீளம் உள்ள ஒரு பலகையில் நான்கு பக்கமும் ஒரு கயிறை கட்டி, பத்தடி உயரத்திற்க்கு என்னை தூக்குவார்கள், நான் கயிறை கூட பிடித்துக்கொள்ள முடியாது. ஏன் என்றால் ஒரு கையில் சிலுவையை வைத்துக்கொள்ள வேண்டும் மற்றொரு கையை அருள் செய்வது போல் காட்ட வேண்டும். ஒத்திகை நேரம் முழுவதும் அந்த பலகையில் என்னை நிற்க்கவைத்து என்னை மேலும் கீழுமாக கூறையின் மேல் நின்று என்னை இருவர் கயிறை கொண்டு தூக்குவார்கள். முதலில் பயமாக இருந்தாலும் பிறகு உற்ச்சாகம் கொண்டேன். மறுநாள் மாலை நிகழ்ச்சி ஆரம்பித்தது. எனக்கு முகச்சாயம், மற்றும் வெள்ளை நிறத்தில் ஒரு அங்கி, இடுப்பில் வெளிர் நீல நிறத்தில் ஒரு துணி கட்டப்பட்டது. தலையில் தங்க நிறத்தில் மினுமினுப்பாக ஒரு துணி அதன் மேல் கிரீடம் வைத்து, என்னை பலகையில் நிற்க்க வைத்து பத்தடி உயரத்தில் தூக்கிபிடித்து, பலவண்ண விளக்குகளை என் முகத்தில் ஒளிரவைத்து திரையை விலக்கியபின் பார்வையாளர்கள்  பயங்கர ஆரவார ஒலி எழுப்பினர். அவர்களுக்கு நான் அந்தரத்தில் நிற்பது போன்று தோன்றும். நாடகம் சிறப்பாக முடிவடைந்தது . தொடர்ந்து மூன்று நாட்கள் பொன்மலை பட்டியில் நான் இருந்தவரை “மாதா பொண்ணு” என்று ஒரே பிரபலம்தான்.  

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...