உதவியால் வந்த பிரச்சனை.
எங்கள் வீட்டில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வேலை செய்துகொண்டிருந்தார். அவர் ஒரு கண் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். நானும் என்னுடைய இரு சக்கர வாகனத்தில் அழைத்து செல்வதாக உறுதி அளித்து இருந்தேன். அதற்கான நேரம் வந்தது, வீட்டு வேலை முடித்து விட்டு 10 மணிக்கு வாருங்கள், நான் உங்களை மருத்துவமனையில் விட்டுவிட்டு என்னுடைய பணிக்கு செல்கிறேன் என்றேன். சரியான நேரத்திற்;கு வந்தார். கிளம்பி சென்று மருத்துவமணை வாயிலில் வண்டியை நிறுத்தவும் அந்த பெண்மணி மயங்கி சரியவும் சரியாக இருந்தது. எனக்கு வண்டியை பிடிப்பதா அல்லது அந்த பெண்மணியை பிடிப்பதா என்று ஒன்றுமே புரியவில்லை, அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கீழே விழாமல் அவரை பிடித்து விட்டோம். தண்ணீர் தெளித்து குடிக்க நீர் கொடுத்தவுடன், சற்று நேரத்தில் நன்கு சுதாரித்துக்கொண்டார், என்னம்மா? என்று கேட்டதற்க்கு பசி மயக்கம் என்று தெரிந்தது. எனக்கு கோபம் உச்சிக்கு ஏறியது ஏன் என்றால், நான் வீட்டைவிட்டு கிளம்பும்போதே சாப்பிட்டீர்களா? இட்லி, பொதினா சாதம், உருளைகிழங்கு பொரியல் உள்ளது. என்கணவரும் அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டார் சாப்பாடு அதிகமாகவே உள்ளது. நீங்கள் சாப்பிடுங்கள் என்றேன், அதற்க்கு அந்த பெண்மணி நான் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டுதான், வந்தேன் என்றார். இப்பொழுது உங்களுக்கும் புரிந்து இருக்கும் எனக்கு கோபம் ஏன் உச்சிக்கு ஏறியது என்று. எனக்கு பசியாக உள்ளது என்றார். உடனே நான் அவரை ஓரு இடத்தில் அமர்த்திவிட்டு உணவு வாங்க சென்றேன். காலை 11 மணி என்பதால் டிபன்,சாப்பாடு இரண்டுமே கிடைக்காத நேரம். சற்று அலைந்த பிறகு ஒரு மெஸ்சை கண்டுபிடித்து இந்த அம்மாவை அழைத்து சென்று டிபன் வாங்கி கொடுத்து, இயல்புக்கு வந்த பிறகு நான் என் பணிக்கு சென்றேன். தேவை இல்லாமல் பணம், நேரம், விரையம் ஆகி பிரச்சனையும் உருவாகியது எனக்கு. உதவி செய்வதற்க்கு முன் இன்னமும் சிறப்பாக என்னை தயார் செய்துகொள்ள வாய்பாக அமைந்தது இந்த அனுபவம்.
This comment has been removed by the author.
ReplyDeleteYou hv lot of mémoires madame......
ReplyDeleteThank u so much.
Delete