நான் படித்த பள்ளிகள்

     முதல் வகுப்பு

    திருப்பூந்துருத்தி என்ற ஊரில் (தஞ்சாவூரில் இருந்து 20 கி;மி.இருக்கும்) என்னுடை அப்பா போஸ்ட் மாஸ்டராக இருந்த போது நான் அங்கேயே பிறந்து, முதல் வகுப்பம் படிக்கும் வரை இருந்தோம். முகமதியர் நடத்தி வந்த ஒரு தனியார் பள்ளி இது. வார விடுமுறை வெள்ளிக்கிழமை. மற்ற நாட்கள் பள்ளி உண்டு. இதை தவிர எனக்க வேறு எதுவும் நினைவில்லை.

இரண்டு முதல் நான்காம் வகுப்பு வரை

  T.B.Sanitorium  என்று அழைக்கப்பட்ட செங்கிப்பட்டிக்கு அப்பா பணிமாற்றம் செய்யப்பட்டு அரசினர் நடுநிலைப்பள்ளியில் படித்தேன். (நிஜ டோலக்பூர் என்ற பெயரில் இந்த ஊரைப்பற்றி ஒரு blog  போட்டுள்ளேன்) பெரிய கூடம்தான் முழு பள்ளியின் அளவே. எங்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வெளியூரில் இருந்துதான் வருவார்கள். . எனக்கு அந்தோனிசாமி என்று ஒரு ஆசிரியர் இருந்தார். அவருடைய மகன்கள் பெயர் சுதந்திரம் மற்றும் குடியரசு, பெயர்கள் வித்தியாசமாக வைத்ததால் நன்றாக நினைவருக்கிறது.பள்ளி வாசலில் மிக பெரிய கொடுக்காபுள்ளி மரம் இருக்கும். அருளாநந்தம் என்ற ஆசிரியர்  பாடல்கள் பாடி எங்களை ஊக்குவிப்பார். கேட்க அற்புதமாக இருக்கும்,ஆனால் அவர் இசை ஆசிரியர் கிடையாது பாடம் எடுப்பவர். நான் நன்றாக ஊர் சுற்றுவேன். புத்தகத்தை வைத்து படித்ததோ அல்லது ஆசிரியர்கள் நடத்திய பாடங்களோ என்நினைவுக்கு வரவில்லை.

ஐந்தாம் வகுப்பு.

  அப்பா இப்பொழுது திருக்காட்டுப்பள்ளி  தலைமை அஞ்சலகத்தில் clerk அதனால் நாங்கள் அருகில் உள்ள விஷ்ணம்பேட்டை என்ற கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தோம். அந்த கிராமத்தில் இருந்த பஞ்சாயத் யூனியன் தொடக்கப்பள்ளியில் படித்தேன். எனது வகுப்பு ஆசிரியரும் பள்ளியின் தலமை ஆசிரியருமான திரு.கோதண்டராமன் அவர்கள் இப்பொழுது கண்ணை மூடினாலும் எதிரே நிற்க்கும் அளவுக்க மனதில் படிந்தது மட்டுமல்லாமல் படிப்பை பற்றி என்னை யோசிக்க செய்தவரும் அவரே. 5ஆம் வகுப்பில் தான் எழுத படிக்க ஆரம்பித்தேன். ஆறாம் வகுப்பிற்க்கு அருகில் உள்ள திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமிஐயர்  உயர்நிலைப்பள்ளியில்தான் சேர வேண்டும். இந்த பள்ளியில் படித்து விட்டு சென்றவர்களில் ஒருவர்  கூட உயர்நிலைப்பள்ளியில் அதாவது ஆறாம் வகுப்பில் தோல்வி அடைந்ததே கிடையாது. நான் தோல்லி அடைந்து விடக்கூடாது என்பதற்காக மிகவும் கடினமாக முயன்று. எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்தார்.  அங்கேயே படித்த மாணவர்கள் அனைவருமே என் அளவு மக்கு கிடையாது. 

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை.

சர் சிவசாமி ஐயர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி திருக்காட்டுப்பள்ளியில் படித்தேன். below average  மாணவியாகவே  படித்து முடித்தேன். தையல் வகுப்பு எனக்கு மிகவும் புடிக்கும். எம்பிராய்டரி மற்றும் பல கைவேலைகளை இந்த நேரத்தில் கற்றுக்கொண்டேன்.  என்னுடைய ஆர்வம் எனக்கு புரிந்தது. மங்களம் என்ற இசை ஆசிரியை, பாட்டு வகுப்பில் சில நேரங்களில் கதை சொல்வார்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இது என்னுடைய கற்பனை வளத்தை அதிகரித்தது. பின் நாளில் நானும் கற்பனையாக பல கதைகளை சொல்வதில் திறமையும் ஆர்வமும் கொண்டேன்.  தற்பொழுது ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயாவில் மாணவர்களுக்கு என்னுடைய கற்பனையில் கதைகளை சிறப்பாக சொல்வதற்க்கு அடித்தளம் இட்டவர் இந்த ஆசிரியைதான். பெரிய பள்ளி ஆதனால் பலரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு.

 அப்பா இப்பொழுது பணி மாற்றம் காரணமாக அய்யம்பேட்டையில்  போஸ்ட் மாஸ்டராக பணியாற்றினார். புனித கேப்ரியேல் பெண்கள்  உயர்நிலைப்பள்ளியில் படித்தேன். பட்ட மேற்படிப்பு படித்து இருக்கிறேன் என்றால் அதற்க்கு இந்த பள்ளி தான் காரணம். Sister மோட்சராகினி என்னுடைய வகுப்பு மற்றும் ஆங்கில ஆசிரியை  என்னால் மறக்க முடியாத ஆசிரியை. என்வாழ்வின் முன்னேற்றத்திற்க்கு ஒளி ஏற்றியவர். பல நாடகங்களில் பங்கு கொண்டேன். என்னிடம் பேச்சு திறமை உள்ளது என்பதை உணர்ந்தேன். செஞ்சுலுவை சங்கத்தின் முலம் பல சமூக பணி செய்தேன். சமூக சிந்தனை வளர்ந்தது. எனது பல சமுக செயல்பாட்டுக்கு அடித்தளம் ஆனது. இன்று புதுச்சேரியில் சமூக செயல்பாட்டாளர் என்ற பெயரில் பல சமூக பணிகளை செய்து வருகிறேன். சமூக நலத்துறை முலம் பல கல்லூரி, பள்ளி நிகழ்ச்சிகளில் விழிப்புணர்வு பற்றி உரையாற்றுகிறேன்.

மேல் நிலை வகுப்புகள்.

 மன்னார்குடி அருகில் உள்ள திருமக்கோட்டையில் அப்பா போஸ்ட் மாஸ்டராக பொறுப்பேற்றார். திருமக்கோட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். மாணவரகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதுவும் எங்கள் வகுப்பில் 4 பெண்கள் மட்டுமே படித்தோம். ஊர் மிகவும் சிறியது. ஆனைத்து ஆசிரியர்களும் வெளியூரில் இருந்தே வருவர். Bus Break Down அல்லது வேறு பிரச்சனை என்றால் ஒருவருமே வரமாட்டார்கள். எப்படியோ பிளஸ் 2 முடித்தேன்.

பி.ஏ.பொருளாதாரம்.

தஞ்சாவூர் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் படித்தேன். அப்பா அருகில் உள்ள பூண்டி என்ற ஊரில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றியதால் நான் தினமும் பேருந்தில் பயணித்து கல்லூரிக்கு செல்வேன். கல்லூரியில் பல அனுபவங்கள் எனது பொது அறிவையும் சமூக பழக்க வழக்கங்கனையும் பெற்று தந்தது. எனது மேடைப் பேச்சு நன்கு வளர்ந்தது. கல்லூரி வருட மலரில் சிறந்த பேச்சாளர் மற்றும் பல பரிசுகளை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர் என்று புகைப்படத்துடன் வெளியிட்டு, என்னை கௌரவித்தனர்..  1987 –ல் பி;ஏ. பொருளாதாரம் முடித்தேன்.30 ஆண்டுகள் கழித்து பட்ட மேற்படிப்பை (சமூகவியல்) அண்ணாமலை பல்லலை கழகத்தில் தொலை தூர கல்வி மூலம் படித்துமுடித்தேன். 


2 comments:

  1. உங்கள் திறமையை இன்னும் பிரதிபலிக்குவிதமாக சற்று அதிக கவனத்துடன் எழுதியிருக்கலாமே

    ReplyDelete

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...