கடிகங்காதரர் (எ) காவிபுரம் குடைவரை கோவில் (தரிசனம் 8.2.2025)
அமைவிடம்.
தெற்கு பெங்களுர் நகரப்பகுதியான காவிபுரம், என்ற இடத்தில் அமைந்துள்ளது.
வரலாறு.
இந்த குடைவரை கோவிலில் கங்காதீஸ்வர் என்ற பெயருடனும், அம்பிகை பார்வதியுடன் ஈசன் மக்களுக்கு அருள்பாலிக்கிறார். கௌதமமுனிவர், மற்றும் பரத்வாஜ முனிவர்களால் வேதகாலத்தில் இக்கோவில் கட்டப்பட்டதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. பின் 16 ஆம் நூற்றாண்டில் பெங்களுர் நகரத்தை உருவாக்கிய கெம்பகௌடா என்பவரால் புனரமைக்கப்பட்டது.
சிறப்பு
மலையை குடைந்து கட்டப்பட்ட கோவில், அருகிலேயே அம்மன் சன்னதியும் உள்ளது. மலையை குடைந்து கட்டியதால் மேல்கூரை மிக தாழ்வாக உள்ளது. ஈசன் பார்வதி இவர்களின் சன்னதியை தொடர்ந்து உள்ள பிரகாரம் மிக சிறியதாக, குறுகியதாக, மிக குறைந்த உயரத்துடன் காணப்படுகிறது. பக்தர்கள் நன்கு இடுப்புவரை குனிந்து சென்றே இந்த உட்பிரகாரத்தை வலம் வர வேண்டும். இந்த உட் பிரகாரத்தில் சப்த கன்னிகைகளின் சிலகைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
பாஸ்கராய அபிஷேக சிறப்பு.
சூரியனின் ஒளிக்கதிர் இறைவன் மீது விழுவதே பாஸ்கராய அபிஷேகம் என்று பெயர். இவ்வாறு வருடத்திற்கு ஒருமுறை சூரியனின் ஒளிக்கதிர் லிங்கருபமாக உள்ள இறைவன் மீது பட்டு பிரகாசிக்கிறது. நம்தமிழ்நாட்டில் பல கோவில்களில் இத்தகைய சிறப்புள்ளது. ஆனால் இந்த கோவில் இறைவன் குறைந்தபட்சம் எட்டு அடியாவது கீழே இருப்பார், கோவில் வாயிலில்ருந்து. இதனால் இந்த பாஸ்கராய அபிஷேகம் என்னை வியப்படைய செய்தது.